முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

A Clockwork Orange - 1971

A Clockwork Orange - Tamil Review  டைரக்டர் பெயரே போதும் இந்த படம் பார்க்க. A Space Odessy , Full Metal Jacket , Shining போன்ற தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Stanley Kubrick இயக்கத்தில் வந்த Sci Fi படம் தான் இது.  IMDb 8.3 ( #114 out of top 250 movies)  Tamil Dub ❌ OTT ❌ எதிர்காலத்தில் நடக்கும் கதை.‌ஒரு வன்முறை குணம் கொண்ட இளைஞனின் கதை தான் இது. ஹீரோ தனக்குனு ஒரு குரூப் வச்சுக்கிட்டு ஏதாச்சும் ஒரு வீட்டுக்கு போய் கொடூரமா கற்பழிப்புனு , கொலை , திருட்டுனு சுத்துறானுக. அவனுக்கு பிடிச்சது மூணு Sex, Violence & Beethoven music.  குரூப்புக்குள் ஏறபட்ட சண்டை மட்டும் உள்குத்து வேலையால் ஹீரோ மட்டும் 14 வருட தண்டனை பெற்று சிறை செல்கிறான்.‌ கவர்மெண்ட் குற்றங்களை குறைக்க ஒரு புது ஆராய்ச்சி பண்ணுது .சீக்கிரமா ரிலீஸ் ஆகலாம் என ஐடியா பண்ணி தானே முன்வந்து அந்த சோதனைக்கு சம்மதிக்கிறான்.  அது என்னமாதிரியான சோதனை மற்றும் சோதனை வெற்றிகரமாக முடிந்து வெளியே வந்த பின் அவன் வாழ்க்கையில்  நிகழும் மாற்றங்கள் மீதமுள்ள படம்.  முதலில் இந்த படம் 1971 ல் வநதது என நம்ப முடியாது. செட்டிங்ஸ் எல்லாம் அவ்வள

The Ice Age Adventures Of Buck Wild - 2022

The Ice Age Adventures Of Buck Wild Tamil Review Dawn of the dinosaurs பாகம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் Buck கேரக்டர்.  Tamil dub ❌ Available @DisneyPlusHS என்ன பண்ண போகுதுனு யாரும் கண்டு பிடிக்க முடியாது. அது முக்கிய பாத்திரத்தில் நடிச்சு வந்துள்ள படம். ஆனால் இந்த படத்துல முக்கியமான கேரக்டர் இரண்டு Possums தான்.  எப்பவுமே விளையாட்டாக இருக்கும் Crash & Eddie ஒரு வேகத்தில் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள்  எதிர்பாராத விதமாக பாதாள உலகிற்கு வந்து Buck உடன் இணைகிறார்கள். அந்த நேரத்தில் ஒரு அறிவாளி வில்லன் டைனோசர் பாதாள உலகத்தை மற்ற டைனோசர்கள் உதவியுடன் தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. இதை இந்த கூட்டணி எப்படி முறியடித்து என்பது தான் படம்.  Buck, Eddie, Crash என மூன்று கதாபாத்திரங்களை சுற்றி நகர்கிறது படம். ரொம்ப gripping என்று சொல்ல முடியாது. திடீரென Crash & Eddie கிளம்புவது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போன்று ஒரு ஃபீலிங். மற்றபடி ஆங்காங்கே காமெடி டயலாக்ஸ் மற்றும் ஆக்சன் இருக்கு.  படம் ரொம்ப சிறப்பாக இல்லை என்றாலும் Ice Age ரசிகர்கள் கண்டிப்

Mini Series Recommendation - 3

 இந்த த்ரேட்டில் மினி சீரிஸ்கள் பார்க்கலாம். குறிப்பிட்ட Genre இல்லாமல் கலவையாக இருக்கும். . Invisible City ரொம்பவே வித்தியாசமான தொடர் . மேலும் ஒவ்வொரு தொடரை பற்றிய Detailed ஆன ரிவ்யூ Blog ல் உள்ளது லிங்க் இணைத்து உள்ளேன்.  எந்த தொடருக்கும் #tamil dub இல்லை.  நம்ம சேனலில் Download Link உள்ளது.  The Queen's Gambit - 2020 பெற்றோரை இழந்த ஒரு குழந்தை இயற்கையிலேயே செஸ் விளையாடும் ஆற்றலை கொண்டுள்ளது.   1‌ Season, 7 Episode  IMDb 8.6 Available @netflix அந்த பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும்  சம்பவங்கள் தான் படம்.  செம் சூப்பரான தொடர் கண்டிப்பாக பாருங்கள்.  https://www.tamilhollywoodreviews.com/2020/11/the-queens-gambit-2020.html Sweet Home - 2020  இது ஒரு கொரியன் தொடர். ஒரு பெரிய அபார்ட்மெண்ட் குடியிருப்பில் திடீர் திடீர் என மனிதர்கள் கொடூரமான ஜந்துக்களாக மாறுவார்கள்.  1 Season, 10 Episodes IMDb 7.4 Available @Netflix தப்பித்த மக்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்க்கு உள் தஞ்சம் அடைவார்கள்.  ஹீரோ ஒரு பையன் அவனுக்கு மட்டும் இந்த நோய் தாக்காது. இவர்களின் சர்வைவல் தான் படம். https://www.tamilhollywoodr

Duel - 1971

Duel - 1971 ஒரு கிளாசிக் த்ரில்லர் from Spielberg .  ஒரு சாதாரண பிஸினஸ் மேன் ரோட்ல போறப்ப ஒரு ராட்சச ட்ரக்க முந்திட்டு போறாரு.  அந்த ட்ரக் ட்ரைவர் பெரிய சைக்கோவா இருப்பான் போல ஹீரோவ விரட்டி கொல்ல வர்றான். இந்த சேஸிங் தான் படம்.  IMDb 7.1 Tamil dub ❌ படத்துல 2 பேர் தான் ஹீரோ & வில்லன்.அதுலயும் வில்லன் மூஞ்சிய காட்டவே மாட்டாங்க. இவர்களை விட முக்கியமான கதாபாத்திரங்கள் அந்த ராட்சச ட்ரக் மற்றும் அந்த Plymouth Car அந்த ட்ரக் பார்க்கும் போதே நமக்கு பீதியா இருக்கும். அதுவும் அந்த ஹாரன் சத்தம் மற்றும் கேமரா ஆங்கிள் எல்லாம் சிறப்பு 1.30 மணி நேரத்திற்கு மேல 2 வண்டிய + ஒரு மனுஷன மட்டும் வச்சுகிட்டு Gripping'a படம் எடுக்குறது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை.  பட லொக்கேஷன்கள் மற்றும் கேமரா பக்கா.  கண்டிப்பாக பாருங்கள் 👍👍 இந்த படத்தை பற்றி டாக்குமெண்டரியில் சொல்லப்பட்ட விஷயங்கள்.  Film Critic :  "No one moves camera like Spielberg "  உண்மை தான் படத்த பாக்குறப்ப நமக்கே தெரியும். கேமரா நகரும் விதம் அவ்வளவு அருமையா இருக்கும். Spoiler Below :  Spielberg : " கடைசில அந்த ட்ரக் வெடிக்க

The Rescue - 2021

2018 ல நியூஸ்ல மிகவும் பரபரப்பா வந்த ஒரு செய்தியை பற்றிய டாக்குமெண்டரி.  தாய்லாந்து மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் விளையாட போன ஒரு ஃபுட்பால் டீமை சேர்ந்த சிறுவர்கள் + Coach திடீர் மழை காரணமாக உள்ளே மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை எப்படி மீட்டார்கள் என்பதை சொல்கிறது.  IMDb 8.4 Tamil dub ❌ Available @hotstar அந்த குகைய பார்க்கவே பயமா இருக்கு. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் மேல நீளமானது. பல கிளைகள் ,பாதைகள், சுரங்கங்கள் என பாக்க Maze மாதிரி இருக்கு. இதுல பசங்க உயிரோட இருக்காங்களா ? இறந்து விட்டார்களா என ஒரு சின்ன க்ளு கூட இல்லை.  இந்நிலையில் Thai Navy Seals வந்து உள்ள நுழைய பாக்குறாங்க கொஞ்சம் தூரம் கூட அவங்களால போக முடியவில்லை ‌‌.  அதுக்கு அப்புறம் நியூஸ் பார்த்துட்டு Cave Divers எனப்படும் பொழுதுபோக்கிற்காக குகைக்குள் நீச்சல் அடிக்கும் தன்னார்வலர்கள் 4 பேர் UK ல இருந்து வர்றாங்க.  இதற்கு நடுவில் தாய்லாந்து Navy, US military , உலகம் முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் என எல்லாரும் வந்து குவிகிறார்கள். எவ்வளவு பேர் வந்தாலும் அந்த 4 பேருக்கு தான் அந்த குறுகிய இருண்ட குகைக்குள் போக Skills இருக்கு.  எ

BFG - Big Friendly Giant (2016)

BFG - Big Friendly Giant Tamil Review  Stephen Spielberg இயக்கத்தில் வந்த ஒரு அழகான Fantasy + Adventure படம். குழந்தைகளோடு கண்டிப்பாக பாருங்கள்.  ஒரு சிறுமி மற்றும் பெரிய ராட்சச மனிதனுக்கும் இடையே உள்ள நட்பை சொல்லும் படம்.‌ IMDb 6.4 Tamil dub ✅ Available @SonyLiv Spielberg கற்பனையில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். ராட்சச மனிதர்களின் உலகம், BFG - ன் வீடு, ராணி விருந்து கொடுக்கும் காட்சிகள், கனவுகளுடன் சிறுமி விளையாடும் காட்சிகள் என நிறைய காட்சிகளில் கிராபிக்ஸ் மற்றும் கிரியேட்டிவிட்டி நம்மை வாவ் சொல்ல வைக்கிறது.  நல்ல ஒரு கான்செப்ட் அதை செம சூப்பராக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.  சிறுமி மற்றும் ராட்சச மனிதன் கதாபாத்திரத்தில் வருபவர்கள் நடிப்பில் அசத்தி உள்ளார்கள் ‌‌ . குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் .  கண்டிப்பாக பாருங்கள் 👍 Director: Steven Spielberg Cast: Ruby Barnhill, Mark Rylance, Penelope Wilton, Rebecca Hall, Bill Hader, Jermaine Clement Screenplay: Melissa Mathison, based on the novel by Roald Dahl Cinematography: Janusz Kaminski Music: John Williams Watch Trailer: 

Go - 1999

நல்ல ஒரு Crime+Black Comedy டைம் பாஸ் படம்.  ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய மூன்று கதைகள் சொல்லப்படுகிறது.  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது கண்டிப்பாக பார்க்கலாம்.  முதல் கதை பணத் தேவைக்காக போதைப் பொருள் விற்க முயற்சி செய்யும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சினைகள் ‌‌.  இரண்டாவது கதை நண்பர்களுடன் Las Vegas trip செல்லும் ஒருவன் சந்திக்கும் பிரச்சினைகள்.  மூன்றாவது கதை Gay ஜோடியை மிரட்டி undercover operation செய்ய வைத்து போதைப் பொருள்கள் டீலரை பிடிக்க முயலும் போலீஸ் மற்றும் அந்த ஜோடிக்கு நடுவே நடக்கும் சம்பவங்கள்.  மூன்று கதைகளும் ஒன்றுக்கு தொடர்பு உடையவை . முதலில் குழப்பமாக இருந்தாலும் பின்பகுதியில் தெளிவாகிறது.  காமெடி , வன்முறை என அனைத்தும் உள்ளது. இயக்குனர் Tarantino fan'a இருப்பாரு என்று நினைக்கிறேன். Pulp Fiction மாதிரி ட்ரை பண்ணிருக்கார்.  படம் நன்றாகவே உள்ளது  கண்டிப்பாக பாருங்கள்.

Movies Set In Room/Apartment/ Specific place - Part 3

Mother - 2017 ஏதோ ஒரு காட்டுக்குள் தனியாக கட்டப்பட்ட வீட்டில் கணவன் மற்றும் மனைவி இருப்பார்கள். ஒரு நாள் ஒருத்தர் இன்னிக்கு ஒரு நாள் தங்கிக்கிறேனு வருவாரு.. அடுத்து அவரு மனைவி , மகன்கள் என வரிசையாக வருவானுக. கடைசில என்னாச்சுனு படத்துல பாருங்க. ரொம்ப டிஸ்டர்பிங்கான படம் ‌‌ . Full Review: https://www.tamilhollywoodreviews.com/2020/07/mother-2009.html The last House on the left - 2009 ஒரு சின்ன பொண்ண கொடூரமாக தாக்கி கற்பழிச்சு தூக்கி போட்டு போகுது ஒரு சைக்கோ குரூப்.  விதி வலியது என்பது போல அந்த குரூப் அந்த கற்பழித்த சிறுமியின் வீட்டில் தங்க நேரிடுகிறது.  அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர என்ன நடக்கிறது என படத்தில் பாருங்கள்  Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/09/the-last-house-on-left-2009.html The Skin I Live In - 2011 ஒரு திறமையான சயின்ட்டிஸ்ட் ஒரு பெண்ணை தன் வீட்டுக்குள் சிறை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார். யார் அந்த பெண் என்பது தான் பெரிய சஸ்பென்ஸ் படத்தில் ‌‌  Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/08/the-skin-i-live-in-2

7 Prisoners - 2021

 Netflix ல ரேண்டம்ல வந்த Brazilian படம்.  கிராமத்தில் வசிக்கும் 4 இளைஞர்கள் வறுமையில் வாடும் குடும்பத்தை காப்பாற்ற தெரிந்தவர் ஒருவர் ஏற்பாட்டில் நகரத்திற்கு வருகிறார்கள்.  ஆனால் வந்த பின் தான் தெரிகிறது கொத்தடிமையாக விற்கப்பட்டு உள்ளார்கள் என்று தெரிகிறது.  இந்த நால்வரில் ஹீரோ மட்டுமே படித்தவன் மற்றும் புத்திசாலி.‌ தப்பிக்க வழியே இல்லாத நிலையில் உயிர் வாழ மற்றும் குடும்பத்தை பாதுக்காக்க அவன் செய்யும் முயற்சிகள் தான் படம்.  ஹீரோவின் இந்த முயற்சியில் அவன் சந்திக்கும் சவால்கள் மற்றும் தன் விருப்பத்திற்கு மாறாக எடுக்கும் முடிவுகள் மற்றும் அதன் விளைவுகளை பற்றி சொல்கிறது படம்.  ஹீரோவின் நடிப்பு ரொம்பவே இயல்பாக இருந்தது. இந்தக்காலத்தில் நடக்கும் கொத்தடிமை முறையை பற்றிய படம். மெதுவாக நகரும் படம் இது. ஆனால் நல்லா தான் இருந்தது. 

Tips For IT Freshers/Students

 இந்த த்ரெட் அட்வைஸ் கிடையாது, இத படிங்க வேலை கிடைக்கும் என்ற நேரடியான தகவல் எதுவும் இல்லை.  என்னுடைய IT அனுபவத்தில் என்ன பண்ணா ஈஸியாக வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு எப்படி கேரியர்ல முன்னேறலாம் என்பதை  பார்க்கலாம். இருக்குறலயே ஈஸியா கெடைக்கிறது அட்வைஸ்/ டிப்ஸ் தான். அத யார் வேணும்னாலும் கொடுக்கலாம் . அதனால் என்னுடைய Experience சொல்லிவிட்டால் இந்த த்ரெடட படிக்கிறவஙக தொடரலாமா ? வேண்டாமா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும்.  என்னுடைய மொத்த IT அனுபவம் கிட்டத்தட்ட 15 வருடங்கள். முதல் பாதி கிட்டத்தட்ட 7 + வருடங்கள் JavaScript, jQuery, PHP மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்களில் Web development ல் வேலை பார்த்து இருக்கிறேன்.  அதன் பின்  Devops(Docker, AWS,PCF, CI,CD ,Jenkins என பல  ஏரியாவில் வேலை பார்த்து இருக்கிறேன். தற்பொழுது ஒரு பெரிய அமெரிக்க வங்கியின் டெக்னிக்கல் பிரிவில் சென்னையில் (Individual Contributor Role) வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்.  சில முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்.  1. Programming is the king  இங்க நிறைய பசங்க கோடிங் பண்ண புடிக்கல புரியவே மாட்டேங்குது அதுனால நாங்க Testin

Documentary Recommendations

இதுவரைக்கும் நான் பார்த்த டாக்குமெண்டரிகள் பற்றிய ஒரு த்ரெட். டாக்குமெண்டரிகள் அதற்கே உரிய பாணியில் பேட்டிகள் மற்றும் மெதுவாக தான் நகரும். சீரிஸ் (or) படம் பார்ப்பது போன்றே இதைப் பார்க்க வேண்டாம். எனக்கு பிடித்த ஆர்டரில்.... 10. The Motive - 2021 @Netflix ஒரு பையன் குடும்பத்தையே மெஷின் கன் வைச்சு போட்டுத்தள்ளிட்டு செம கூலா இருக்கான்.  இவன் ஏன் அப்படி பண்ணுனான் என்பதை ஆராய்வது தான் இந்த டாக்குமெண்டரி.  https://www.tamilhollywoodreviews.com/2021/11/the-motive-2021.html 9. Operation Odessa  - 2018 @Netflix அமெரிக்கால உள்ள மூணு பேரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை வாங்க பண்ணுன அழிச்சாட்டியம் பத்தின டாக்குமெண்டரி இது.  https://www.tamilhollywoodreviews.com/2020/10/operation-odessa-2018.html 8. Don't F**K With Cats: Hunting An Internet Killer- 2019 @Netflix ஒரு சைக்கோ பூனைகளை கொன்று அத வீடியோவா எடுத்து வெளியிடுறான். சோஷியல் மீடியாவே கதினு இருக்குற சில தன்னார்வலர்கள் இந்த கொலைகாரனை கண்டுபிடிக்க செய்யும் முயற்சிகள் பற்றிய டாக்குமெண்டரி.  https://www.tamilhollywoodreviews.com/2021/08/dont-fk-with-

Movies Set In Room/Apartment/ Specific place - Part 2

 The Cabin in the woods - 2011 (Horror) வழக்கமான டெம்ப்ளேட்ல பொண்ணுங்க பசங்க காட்டடுக்குள்ள இருக்க மர வீட்டுக்கு ஜாலியா இருக்க போறாங்க. ஆனா அங்க பல கொடூரமான விஷயங்கள் நடக்குது. ஆனா நல்ல ட்விஸ்ட் இருக்கு அதனால் மற்ற படங்களில் இருந்து சிறிது வேறுபடுகிறது.  Available @Netflix The Hidden Face - 2011 (Spanish Thriller) ஒரு பெரிய வீட்டுல லவ்வர்ஸ் இருக்காங்க.. திடீரென அந்த பொண்ணு காணாமல் போய்டுறா.  பையன்  வேற பொண்ணு கூட சுத்த ஆரம்பிக்கிறான். புது லவ்வர வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா வீட்டுல நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது .  அது என்னன்னு படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.‌ More Info: https://www.tamilhollywoodreviews.com/2021/09/the-hidden-face-2011.html The Trip - 2021  (Norwegian -  Comedy , Thriller) கணவன் மனைவி இருவருக்கும் நடுல ஒரே சண்டை. இரண்டு பேரும் பேசி தீர்த்துக்கொள்ள காட்டுக்குள் இருக்குற மரவீட்டுக்கு போறாங்க.  ஆனா மனைவியை கொல்ல கணவனும், கணவனை கொல்ல மனைவியும் ப்ளான் பண்ணி போறாங்க. அங்க அவங்களுக்கு வேற ஒரு சர்ப்பிரைஸ் காத்திருக்கு . அது என்னன்னு படத்தில் பாருங்கள்.  More Info : h

CODA (Children Of Deaf Adults) - 2021

Apple TV+ வெளியிட்ட ஒரு Feel Good + Musical படம்.  ஹீரோயின் குடும்பத்தில் அவளை தவிர வேற யாருக்கும் காது கேட்காது.  இவளை நம்பி தான் குடும்ப பிசினஸ் இருக்கும் நிலையில் அவளது Passion க்காக குடும்பத்தை பிரிய நேரிடுகிறது. இதனை மொத்தக் குடும்பமும் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை +VE  சொல்கிறது படம்.  IMDb 8.1  Tamil dub ❌ Tamil sub ✅   ரொம்பவே அருமையான ஃபீல் குட் படம். ஹீரோயின் குடும்பம் மீன்பிடிக்கும் தொழில் செய்கிறார்கள்.பொறுப்பான மகளாக  காலையில் 3 மணிக்கு எழுந்து குடும்பத்துடன் கடலுக்கு போய் மீன் பிடித்துவிட்டு வந்து ஸ்கூலுக்கு போகிறாள் .  ஹீரோயினுக்கு Berklee காலேஜ்ஜில் மியூசிக் படிக்க ஆசை.  ஆனால் அப்பா , அம்மா மற்றும் அண்ணண் என யாருக்கும் காது கேட்காது என்பதால் இவர் தான் மற்றவர்களுடன் பேச உதவி செய்ய வேண்டிய கட்டாயம்.  இந்நிலையில் ஸ்கூல் டீச்சர் மூலமாக Berklee college audition போக சான்ஸ் கிடைக்கிறது. குடும்பத்தையும் விட முடியாமல் தன் Passion யும் தொடர் முடியாமல் தவிக்கும் ஹீரோயின் கதை தான் இந்த படம்.  அம்மா , அப்பா மற்றும் அண்ணனாக வரும் மூவரும் நடிப்பில் அசத்தி உள்ளார்கள்.  நிறைய கண்கலங்க வை

Babadook - 2014

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த Psychological Thriller + Horror படம்.  ரொம்ப நாள் கழித்து பார்த்த சூப்பரான பேய் படம் வழக்கமான பேய் படம் போல் பயமுறுத்தாமல் மனித உணர்வுகள் மற்றும் அதன் தன்மை மாறும் போது என்ன நடக்கும் என்பதை சொல்கிறார் இயக்குனர்.  IMDb 6.8 Tamil dub ❌ Available @ Prime கணவனை இழந்த பெண் மற்றும் அவளது சிறுவயது மகன் ஒரு வீட்டில் வசிக்கின்றனர். மகன் பயங்கர ஆக்டிவ் + சும்மாவே பேய் வருது வருதுனு சொல்லிட்டே இருக்கான்.  ஒரு நாள் Mister Babadook என்ற சிறுவர்களுக்கான புத்தகத்தை மகனுக்கு படித்துக் காட்டுகிறார். அதிலிருந்து அவன் ரொம்பவே பேய் வருது என்று இரவு முழுவதும் பயந்து அவளை தூங்கவிடாமல் செய்கிறான்.  சில நாட்களில் இவளுக்கும் ஏதோ வித்தியாசமாக தோன்றுகிறது . மருத்துவரிம் சென்று தூக்கமாத்திரை வாங்கி சாப்பிடுகிறாள்.தொடர்ந்து தூக்கம் இல்லாதது + மாத்திரை எல்லாம் சேர Hallucination வர ஆரம்பிக்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து அவளுடைய நடத்தைகள் வன்முறையாக மாறுகிறது. இவளிடம் வீட்டில் மாட்டிக்கொண்ட சிறுவன் என்ன ஆனான் உண்மையில் Babadook இருக்கிறதா இல்லை கற்பனையா என்பதை படத்தில் பாருங்கள். 

Google Photos Tips - ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் ஒருவர் Phone / Memory card ல் உள்ள போட்டோஸ் எப்படி Cloud ல் Sync பண்ணணும்னு கேட்டார். நிறைய பேருக்கு இது தெரிஞ்சு இருக்கும் தெரியாதவங்க தெரிந்து கொண்டு யூஸ் பண்ணிக்கோங்க.  Maximum நீங்க முதல் முறை ஃபோன் உபயோகிக்கும் போது Sync பண்ணவானு கேட்கும். எதுக்கு Sync பண்ணணும் ?  1. ஃபோன் லாக் ஆகலாம்  2. தொலைந்து போகலாம் 3. லாக் காம்பினேஷன் மறந்து போகலாம்.  4. ரிப்பேர் ஆகலாம்  5. Memory Card corrupt ஆகலாம்.  இந்த மாதிரி நிலைமைல உங்க போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் எல்லாம் போயிடும். இல்ல நீங்க செலவு பண்ணி ஏதாச்சும் சர்வீஸ் சென்டர்ல கொடுக்கனும். அதுவும் 100% கிடைக்கும் என கேரண்டி கிடையாது.  Google Cloud Sync :  நம்ம Google Email I'd கூட 15 GB இலவச Cloud space வருது.  நீங்க சிம்பிளா Back Up ON பண்ணீங்க என்றால் இப்ப வர்ற WhatsApp Forward message க்கு ஒரு வாரத்துல 15 GB காலி ஆகிடும்.  அதனால் ஏதாவது ஒரு Folder ஐ Sync பண்ணுவது நலம். நீங்கள் எத்தனை Folder வேணும்னாலும் பண்ணிக்கலாம்.  உதாரணமாக Camera Folder எப்படியும் எல்லா மொபைல்லயும் இருக்கும். அத எப்படி Sync பண்றதுன்னு பா

Trollhunter - 2010

இது நார்வேயில் இருந்து வந்துள்ள Sci Fi + Horror படம்.  இந்த படம் முழுவதும் Live Footage  வகையில் எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு கரடி வேட்டைக்காரனை பின் தொடர்ந்து வீடியோ எடுக்க முயலும் மாணவர்கள் சந்திக்கும் வித்தியாசமான அனுபவம் தான் இந்த படம்.  IMDb 7.0 Tamil dub ❌ Troll - என்பது ஸ்காண்டிநேவியன் நாட்டுப்புறக்கதைகளில் சொல்லக்கூடிய ஒரு அசிங்கமான பெரிய சைஸ் பூதம் .  ஒரு ஊரில் கரடி தாக்குதல் என்று நியூஸ் வருது. ஏதாச்சும் இன்ட்ரெஸ்ட்டிங் நியூஸ் கிடைக்குமா என்று இரண்டு மாணவர்கள் கேமரா , மைக் சகிதம் அந்த இடத்துக்கு போகிறார்கள்.  அங்க ஒரு வேட்டைக்காரர் மட்டும் சந்தேகப்படும் படியாக சுத்திக்கிட்டு இருக்காரு. இந்த இரண்டு பேரும் அவரை அவருக்கு தெரியாமல் ஃபாலோ பண்ணுறாங்க.  ஒரு நாள் இரவு அவரை ஃபாலோ பண்ணிட்டு போனா அங்க பல அதிர்ச்சிகரமான விஷயங்களை பார்க்கிறார்கள். அது என்னன்னு படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  இந்த மாதிரி படத்துக்கு Found Footage நல்ல ஐடியா. தனிப்பட்ட முறையில் எனக்கு Found Footage படங்கள் பார்க்க அவ்வளவு விருப்பம் இல்லை. இந்த படம் நன்றாகவே இருந்தது.  நார்வே லொகேஷன்கள் அனைத்தும் ரொம்பவே அ

You're Next - 2011

இது ஒரு சூப்பரான Horror + Slasher படம்.‌ ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கொஞ்சம் மாறுதலுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தங்களது குடும்பத்துக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று தங்க போகிறார்கள்.  நன்றாக போய்க்கொண்டு இருக்கும் சந்திப்பு திடீரென கலவரமாக மாறுகிறது.  4 பேர் ஆடு, புலினு மிருகங்கள் மாஸ்க்க போட்டுட்டு கொடூரமா ஒவ்வொருத்தரையாக கொலை பண்ண ஆரம்பிக்கிறார்கள்.  ஆனா ஒரு பொண்ணு மட்டும் திரும்பி அடிக்க ஆரம்பிக்கிறாள்‌‌ .. இவனுக யாரு எதுக்காக கொல்றானுக , யாராவது தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  படம் செமயா இருக்கும். ஏன் கொல்கிறார்கள் என்பதை சஸ்பெனஸ்ஸாக வைத்து இருப்பார் இயக்குனர்.  கொடூரமான வன்முறைக் காட்சிகள் உள்ள படம்.  கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍 Aubrey and Paul invite their family to their estate to celebrate their anniversary. Their party turns into a nightmare when the family is attacked by masked assassins. Director: Adam Wingard Starring: Sharni Vinson; Nicholas Tucci; Wendy Glenn; A. J. Bowen; Joe Swanberg; Barbara Crampton; Rob Moran Music by: Jasper Ju

Movies Set In Room/Apartment/ Specific place - Part 1

 Run - 2020  பாசமான அம்மா மற்றும்  நடக்க முடியாத மகள். மகளுக்கு அம்மா மீது வரும் சின்ன சந்தேகம் வருது. அது எத்தனை ட்விஸ்ட்ட கொடுக்குதுனு பாருங்கள்.  Review: https://www.tamilhollywoodreviews.com/2021/07/run-2020.html Available @Netflix Cloverfield Lane - 2016 வீட்டு underground ல 2 பேர் பிடிச்சு வைச்சுட்டு வெளில உலகம் அழிஞ்சு போச்சு வெளில வந்து எல்லாரும் காலி என்கிறான். அது உண்மையா ? பொய்யா ? அவன் லூசா ?  Review : https://www.tamilhollywoodreviews.com/2021/09/10-cloverfield-lane-2016.html Available @prime REC (2007) Zombie படம். ஒரு அபார்ட்மெண்ட்குள்ள போற TV crew படுற அவஸ்தைகள் தான் படம். Found Footage வகையான படம்.  Raid: Redemption  (2011)   ரௌடிகளை பிடிக்க ஒரு அபார்ட்மெண்டக்குள்ள போற ஸ்பெஷல் போர்ஸ் அவனுககிட்ட சிக்கிட்டு தப்பிக்க போராடும் கதை.  Review :   https://www.tamilhollywoodreviews.com/2020/08/raid-redemption-2011.html  Available @Primevideo Alive (2020) - Korean Zombie  ஒரு அபார்ட்மெண்ட்ல மாட்டிக்கொண்ட இரண்டு பேர் Zombie கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறாங்கனு சொல்ற படம்.  Rev

Ratatouille - 2007

 Best Animated film க்காக ஆஸ்கர் வாங்கிய படம்.   நுகரும் மற்றும் சுவையை அறியும் திறன் அதிகமாக இருக்கும் ஒரு எலி எவ்வாறு பெரிய சமையல்காரராக மாறுகிறது என்பதை பற்றிய படம்.  படம் சூப்பரா இருக்கும். குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்.  ஒரு சின்ன விபத்தில் City க்குள் வரும் எலி அங்கு உள்ள பிரபல ஹோட்டலில் வேலை செய்யும் சிறுவனுடன் நட்பாகிறது. எலியின் உதவியால் பெரிய குக் ஆகிறான் அந்த பையன்.  இதற்கு குண்டு வைக்கும் விதமாக பெரிய சமையல் Critic இவரது ஹோட்டல் உணவை பற்றி எழுத வருகிறார்.  இருவரும் சேர்ந்து எப்படி சமாளித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.  நல்ல சிம்பிளான கதை . அருமையான அனிமேஷன் . கண்டிப்பாக பார்க்கலாம் .  A rat who can cook makes an unusual alliance with a young kitchen worker at a famous Paris restaurant.

Zero Dark Thirty - 2012

 Twin Tower தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட பிறகு பின்லாடனை எவ்வாறு அமெரிக்கா கண்டுபிடித்த கொன்றது என்பதை பற்றிய படம்.  பின்லாடனை எவ்வாறு தேடி கண்டு பிடித்தார்கள் மற்றும் அவனை கொல்ல நடந்த ஆபரேஷன் உடன் படம் முடிகிறது. குறிப்பாக ஒரு பெண் அதிகாரி எவ்வாறு இந்த தேடுதல் வேட்டையை நடத்தினார் என்பதை சொல்கிறது.  IMDb 7.4 Tamil dub ❌ படத்தின் முடிவு நம்ம அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் திரைக்கதை அருமையாக இருப்பதால் போரடிக்காமல் செல்கிறது.  பெரிய ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் கிடையாது. ஆனால் படம் நல்லா இருக்கும் கண்டிப்பாக பாருங்கள்.  பிரபல பெண் டைரக்டரான Kathryn Bigelow  அருமையாக படத்தை இயக்கி உள்ளார்.  இவருடைய இன்னொரு படமான The Hurt locker (2008)  க்காக சிறந்த இயக்குனருக்கான  Oscar award வாங்கினார்.  கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.  Director: Kathryn Bigelow Cast: Jessica Chastain, Jason Clarke, Kyle Chandler, Jennifer Ehle, Harold Perrineau, Mark Strong, Joel Edgerton, James Gandolfini Screenplay: Mark Boal Cinematography: Greig Fraser Music: Alexandre Desplat

The Silent Sea - 2021

The Silent Sea Tamil Review  2022 வது வருடத்தின் முதல் பதிவு. Happy New Year To All  கொரியாவில் இருந்து வந்துள்ள Sci Fi சீரிஸ்.  1 Season , 8 Episodes வெளியாகி உள்ளது.  நான் இந்த தொடரை பற்றி எதுவுமே படிக்காமல் பார்த்தேன் அதனால் சஸ்பென்ஸ் நன்றாக இருந்தது. எனவே ஸ்பாய்லர் இல்லாமல் Short-a இந்த தொடரை பற்றி பார்க்கலாம்.  IMDb 7 Tamil dub ❌ எதிர்காலத்தில் நடப்பது போன்ற தொடர் இது. உலகத்தில் தண்ணீர் முழுவதும் காலி ஆகிவிட்டது.  சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை தண்ணீர் தான் முடிவு செய்கிறது. தண்ணீர் ரேஷன் மூலமாக தான் வழங்கப் படுகிறது.  இந்நிலையில் நிலவில் உள்ள 5 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரு முக்கியமான பொருளை எடுத்து வரவேண்டும் என தென்கொரியா அரசு ஒரு குழுவை தயார் செய்கிறது.  அந்த குழுவின் கேப்டன் Han ( Train To Busan , Squid Game la Sales man ),  அறிவியல் ஆலோசகராக Dr. Song ( Bae Doona - Kingdom & The Host ), டாக்டர் மற்றும் சில வீரர்கள் உள்ளனர்.  இவர்கள் கிளம்பி நிலாவில் உள்ள விண்வெளி நிலையத்திற்கு போன பின்பு வரும் பிரச்சனைகளும் அதை சமாளித்து அந்த முக்கிய பொருள