Joaquin Phoenix நடித்த ஒரு Crime Drama , படம் இது.
ஹீரோ ஒரு Ex military மேன் காணாமல் போன பெண்களை கண்டுபிடித்து கொடுப்பது தொழில். ஒரு அரசியல்வாதியின் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்த பின்பு அதனால் ஏற்படும் விளைவுகள் தான் படம்.
IMDb 6.8
Tamil dub இல்லை.
படம் ரொம்பவே brutal and violent . ஆனால் கொடூரமாக அடிக்கிற சீன் எல்லாம் இருக்காது.
கொடூரமான காட்சிகள் வரும் முன்னரே நம் மைண்ட்டை செட் பண்ணி விடுகிறார் இயக்குனர்.
மிலிட்டரியில நடந்த சில கொடூர நிகழ்வுகள், சிறு வயது பாதிப்புகள் என எல்லாம் சேர்ந்து தற்கொலை எண்ணத்துடன் எனக்கு பயமே கிடையாது என்று சுற்றும் கதாபாத்திரத்தில் Joaquin Phoenix பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
இவருக்குனே கதை எழுதுவார்கள் போல.
என்ன நடக்கிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு மற்றும் அந்த மர்மத்துடனே பாதி படத்திற்கு மேல் நகர்கிறது. அதுக்கு அப்புறம் படபடவென காட்சிகள் மாறுகிறது.
பிண்ணனி இசை செம சூப்பராக இருந்தது.
படம் கொஞ்சம் ஸ்லோ தான் ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
When a teenage girl goes missing, a jaded, brutal enforcer attempts a rescue mission. He uncovers corruption and abuse of power along his way and will use any means necessary to save the girl.
Director: Lynne Ramsay
Starring: Joaquin Phoenix; Judith Roberts; Ekaterina Samsonov; John Doman; Alex Manette; Dante Pereira-Olson; Alessandro Nivola
Music by: Jonny Greenwood
Cinematography: Thomas Townend
கருத்துகள்
கருத்துரையிடுக