The Witcher - Season - 2 Tamil Review
இன்னும் முதல் சீசன் பார்க்கவில்லை என்றால் அதை பார்த்து விட்டு 2 சீசன் ஆரம்பிக்கவும்.
முதல் சீசனில் சிரி மற்றும் Geralt இணைந்தது உடன் முடித்து இருப்பார்கள்.
இந்த சீசனில் இருவரும் (அப்பா மற்றும் மகள் ) ஒருவரையொருவர் புரிந்து கொள்வது மற்றும் இணைந்து செய்யும் பயணம் பற்றியது.
கதையைப் பற்றி நிறைய பேசப் போவதில்லை அதை சுருக்கமாக சொல்வது ரொம்பவே கஷ்டமும் கூட. .
Ciri கிட்ட படு பயங்கரமான ஒரு மந்திர சக்தி இருக்கிறது. அதனால் அவளை கைப்பற்ற நிறைய குரூப்புகள் சுற்றுகின்றன. அப்பாவான Geralt தனது மகளை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவது தான் இந்த சீசன்.
முதல் சீசனில் முக்கியமான கதாபாத்திரமான Yennafar க்கு இந்த சீசனில் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை.
லொகேஷன்கள் , கேமரா வொர்க் எல்லாம் முதல் சீசனை போலவே செம சூப்பர். குறிப்பாக Witcher களின் வீடாக வரும் பனிமலைகயின் நடுவே வரும் மாளிகை பிரம்மாண்டமாக இருக்கிறது.
முதல் சீசனை விட இதில் நிறைய மான்ஸ்டர்கள் வருகின்றன. மான்ஸ்டர்களின் வடிவமைப்பும் செம சூப்பர். கதையும் ரொம்ப குழப்பம் இல்லாமல் செல்கிறது இந்த சீசனில்.
என்னை பொறுத்தவரை முதல் சீசனை விட இரண்டாவது சீசன் நன்றாகவே உள்ளது.
Fantasy படங்கள், தொடர்கள் , GOT பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள் .
ஒரு சில எபிசோட்கள் மெதுவாக நகர்ந்தாலும்
Worth Watching !!
எனக்கு தெரிஞ்சு கண்டிப்பாக 3 வது சீசன் வரும்.
Based on
The Witcher
by Andrzej Sapkowski
Starring:
Henry Cavill
Freya Allan
Eamon Farren
Anya Chalotra
Joey Batey
MyAnna Buring
Royce Pierreson
Mimî M. Khayisa
Wilson Mbomio
Anna Shaffer
Mahesh Jadu
Tom Canton
Mecia Simson
Kim Bodnia
The witcher season 2 Review in tamil, the witcher all seasons review, Geralt of revia, Ciri, black magic, monster series , the witcher
கருத்துகள்
கருத்துரையிடுக