ஜிம் கேரி நடிப்பில் 1998 ஆண்டு வெளிவந்து மூன்று ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.
IMDb 8.1
Tamil dub ✅
பிக்பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு கான்செப்ட் கொண்ட படம்.
பிக்பாஸ் வீட்டில் திரும்பும் இடமெல்லாம் கேமரா வைத்து அங்கே அவர்கள் பேசுவதை தேவைக்கு ஏற்ப வெட்டியும் ஒட்டியும் நமக்கு ஒரு சுவாரஸ்யமான நாடகமாக காட்டுவதைபோல, ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்கி அதில் எண்ணற்ற நடிகர்களை களமிறக்கி 24 மணிநேரமும் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை உலகுக்கு படம் போட்டு காட்டுவது தான் இந்த ட்ரூமன் ஷோ.
அதாவது அந்த செயற்கை நகரத்தில் ட்ரூமனை தவிர அவனை சுற்றி வாழ்பவர்வகள் அனைவருமே நடிகர்கள், அவன் தாய், தந்தை, மனைவி உட்பட.
அவன் பிறந்தது முதல் தற்போது முப்பது வயதாகும் வரை ஒவ்வொரு நாளும் அவனின் ஒவ்வொரு அசைவையும் நேரடி ஒளிபரப்பு செய்து பணம் பார்க்கிறது அந்த தொலைக்காட்சி.
ஆனால் இந்த விஷயம் ட்ரூமனுக்கு எப்போது எப்படி தெரிகிறது, தெரிந்த பின்பு என்ன செய்தான் என்பது தான் கதை.
அமேசான் ப்ரைமில் இருக்கிறது
படம் நல்லா இருந்தது. பல இடங்களில் Jim Carey நடிப்பு நமக்கு அவர் மேல் பரிதாபத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்த Show ஐ நடத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது வெறுப்பு வருவதை தவிர்க்க முடியாது. இதுவே இயக்குனரின் வெற்றி எனலாம்.
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்.
Director: Peter Weir
Cast: Jim Carrey, Laura Linney, Ed Harris, Noah Emmerich, Natascha McElhone, Holland Taylor, Ted Raymond
Screenplay: Andrew Niccol
Cinematography: Peter Biziou
Music: Burkhart Dallwitz
கருத்துகள்
கருத்துரையிடுக