The Lobster - 2015 Movie Review In Tamil
இன்னொரு பக்கம் பார்த்தால் இது ஒரு வித்தியாசமான or விசித்திரமான பக்கா லவ் ஸ்டோரி.
Dog Tooth, The Killing Of A Scared Deer போன்ற Weird ஆன பட இயக்குனர் Yorgos Lanthimos ன் இன்னொரு படம்.
IMDb 7.2
Tamil dub ❌
படம் நடப்பது எதிர்காலத்தில் ஒரு நாட்டில்.அந்த நாட்டு ரூல்ஸ் படி திருமணமான/இணைந்து வாழும் ஜோடிகளுக்கு மட்டுமே ஊருக்குள் வசிக்க அனுமதி.
Divorce/break up ஆனால் அப்படியே தூக்கி காட்டுக்கு நடுவே உள்ள ஹோட்டலுக்கு அனுப்பி விடுவார்கள்.
அங்கு தங்க இடம்+சாப்பாடும் கொடுக்கப்படும் ஆனால் 45 நாட்கள் மட்டுமே. 45 நாளுக்குள் யாரையாவது கரெக்ட் பண்ணி ஜோடி சேர்ந்து விட வேண்டும்.
45 நாட்கள் முடிவில் தனியா இருந்தால் அவர்கள் விருப்பிய மிருகமாக மாற்றி காட்டுக்குள் விரட்டி விடுவார்கள்.
இந்த ஹோட்டலுக்கு ஒரு நாயோட வர்றாரு ஹீரோ. அந்த நாய் வேற யாரும் இல்ல ஜோடி கிடைக்காததால் சமீபத்தில் நாயாக மாற்றப்பட்ட அவரது சகோதரர்.
இந்த ஹோட்டலில் அவருக்கு ஜோடி கிடைச்சதா ? இல்ல மிருகமாக மாற்றப்பட்டாரா என்பதை படத்தில் பாருங்கள் .
ரொம்பவே கொஞ்சம் கேரக்டர்கள் தான். எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
ஹீரோ Collin Farrell நல்ல நடிப்பு. நிறைய weird ஆன ஹோட்டல் ரூல்ஸ் மற்றும் காட்சிகள் உள்ளன. சில காட்சிகள் டார்க் காமெடி வகையைச் சேர்ந்தது. வசனங்கள் ரொம்பவே கொஞ்சம் தான் பல இடங்களில் பிண்ணனி இசை தான் பேசுகிறது.
இந்த மாதிரி வித்தியாசமா யோசித்து படம் எடுக்க தனித்திறமை வேண்டும். படம் நல்லா தான் இருந்தது but not for everyone.
After his wife leaves him, David is transported to a hotel where he has to find a partner in 45 days, failing which he will be converted into an animal of his liking.
Directed by
Yorgos Lanthimos
Written by
Efthimis Filippou
Yorgos Lanthimos
Starring
Colin Farrell
Rachel Weisz
Jessica Barden
Olivia Colman
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக