Only Murders in the building Tamil Review
வழக்கமான Crime Investigation மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார்கள்.
1 Season , 10 Episodes (Each Episode 30 mins)
Available in HotStar
Tamil dub ❌
ரொம்பவே Crisp ஆன சீரிஸ்.
எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது . கண்டிப்பாக பார்க்கலாம் 👍
நியூயார்க் நகரில் உள்ள ஒரே பெரிய குடியிருப்பு வளாகம் Arconia . ஒரு நாள் அந்த குடியிருப்பில் உள்ள ஒரு Apartment ல் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விடுகிறான். போலீஸ் வந்து விசாரணை செய்து தற்கொலை என சொல்லி கேஸை குளோஸ் செய்து விடுகிறது.
அதே குடியிருப்பில் வேறு அபார்ட்மெண்ட்களில் குடியிருக்கும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பே இல்லாத மூன்று பேர் இதனை கொலையாக இருக்குமோ என சந்தேக படுகிறார்கள்.
இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை உண்மையான கொலை சம்பவங்கள் மற்றும் அதனை பற்றிய விசாரணைகளை அடிப்படையில் ஒலிபரப்பாகும் Podcast களை கேட்பது.
மூன்று பேரும் ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து இந்த கேஸை விசாரித்து சொந்தமாக podcast தயாரித்து ஒலிபரப்பு செய்ய முடிவு செய்கிறார்கள். இவர்கள் அந்த கேஸில் கண்டுபிடிக்கும் உண்மைகள் பல ட்விஸ்ட்கள் உடன் காமெடியாக சொல்லப்படுகிறது.
இந்த மூன்று பேர்களின் கதாபாத்திரத்திங்கள் அருமையாக உள்ளது. இரண்டு 60+ தாத்தாக்கள் (Steve Martin, Martin Short)
மற்றும் ஒரு 25+ பெண்(Selena Gomez) .
ஒரு தாத்தா பழைய கால investigation சீரியல்களில் ஹீரோவாக நடித்தவர், இன்னொரு தாத்தா நாடகங்களை டைரக்ட் செய்தவர். இவர்களின் காமெடி நன்றாக உள்ளது.
Selena Gomez அவரது பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
பிண்ணனி இசை அருமையாக உள்ளது, ட்விஸ்ட்டுகள் எல்லாம் சிறப்பு .
மொத்தத்தில் ஒரு Fresh ஆன சீரிஸ் .
கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍
இன்னொரு சீசன் கண்டிப்பாக இருக்கும் போல.
Created by:
Steve Martin
John Hoffman
Starring:
Steve Martin
Martin Short
Selena Gomez
Aaron Dominguez
Amy Ryan
Composer:
Siddhartha Khosla
கருத்துகள்
கருத்துரையிடுக