இது ஒரு தரமான Revenge படம். ஆனால் வெட்டு குத்து , சண்டைனு எதுவும் கிடையாது. ஒரு வித்தியாசமான மற்றும் புத்திசாலித்தனமான படம்.
IMDb 7.5
Tamil dub ❌
ஒரு பணக்கார பெண் தனது முன்னாள் கணவன் எழுதிய ஒரு நாவலை தபாலில் பெறுகிறார். அதில் இந்த நாவலுக்கு நீ தான் inspiration என்ற வார்த்தைகளோடு ஒரு குறிப்பும் வருகிறது.
இவளும் அந்த நாவல படிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் படிக்க படிக்க இவளை பழிவாங்க முன்னாள் கணவனால் எழுதுப்பட்ட நாவல் என தெரிய வருகிறது.
படத்தில் ஒரே நேரத்தில் பல கதைகள்/Flash Backs/ நாவலின் கதை/ படத்தின் கதை சொல்லப்படுகிறது. ஆனால் எதுவும் குழப்பம் இல்லாமல் நேர்த்தியான முறையில் உள்ளது.
ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் கடைசியில் தெளிவு படுத்துகிறார் இயக்குனர்.
படத்தின் பெரிய பலம் நடிப்பு. Amy Adams மற்றும் Jake Gyllenhaal செம நடிப்பு . நாவலில் போலீசாக வரும் Michael Shannon கலக்கி இருக்கிறார்.
டைட்டில் கார்டு எப்படிடா இப்படி எல்லாம் போடுறீங்க 🙄🙄
நல்ல ஒரு க்ளைமாக்ஸ்.
கொஞ்சம் மெதுவாக போகும் படம் என்பதால் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
கண்டிப்பாக பார்க்கலாம்.
Director: Tom Ford
Cast: Amy Adams, Jake Gyllenhaal, Michael Shannon, Aaron Taylor-Johnson, Isla Fisher, Ellie Bamber, Armie Hammer, Karl Glusman, Robert Aramayo
Screenplay: Tom Ford, based on the novel “Tony and Susan” by Austin Wright
Cinematography: Seamus McGarvey
Music: Abel Korzeniowski
கருத்துகள்
கருத்துரையிடுக