2021 ஒரு வழியா முடிகிறது. இந்த வருடமும் பெரும்பாலான பகுதியை கொரானா ஆக்கிரமித்து கொண்டது. ஆனால் 2020 ஐ ஒப்பிடுகையில் இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லை. 2020 ல் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்தேன். நிறைய போஸ்ட்டுகள் போட்டேன் . ஆனால் பெரிதாக response இல்லை. 2021 ல் பிற்பகுதியில் ஒரு நாள் தினேஷ் DM வந்து த்ரெட்டா போடுங்க மாம்ஸ் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று சொன்னாரு. த்ரெட் போட ஆரம்பித்தவுடன் மிகப்பெரிய ஆதரவு. குறிப்பாக Recommendation த்ரெட்டுகளுக்கு ஆதரவு பிச்சுகிச்சு. 10 + Followers ல் இருந்து மள மளவென வளர்ந்து தற்போதைய நிலவரப்படி 8200+ Followers. ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் எதிர்மறை கமெண்ட்களும் வந்தது. நம்ம நல்லா இருக்கு கண்டிப்பாக பாருங்கள் என்று சொன்னால் இந்த படம் நல்லாவே இல்லை என்று கமெண்ட்டுகள் வந்தது. அதனால் தான் handle name ஐ Tamil Hollywood Review என்பதில் இருந்து TamilHollywood Recommendation என்று மாற்றினேன். இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் படத்தின் நிறை மற்றும் குறைகளை பேசி விட்டு படம் பார்க்கலாமா ? வேண்டாமா ? என்பதை படிப்பவர்களின் சாய்ஸ்ஸில் விடுவது.
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil