Monster Hunter – 2021

இது ஒரு Action , Fantasy Sci Fi படம். 
Monster படங்கள் என்னுடைய personal favorites . அதுனால பார்த்தேன். 
ஆக்ஷனுக்கு பேர் போன டோனி ஜா மற்றும் மிலா அக்கா சேர்ந்து நடிச்சு இருக்காங்க. 
IMDb Rating கம்மி தான். 
தமிழ் டப் இருக்கு மக்களே 
கதை எல்லாம் ஒன்னும் பெருசா கிடையாது. நல்ல ஒரு டைம் பாஸ் படம்.
ஒரு ராணுவ வீரர்கள் குழுவிற்கு தலைவியான Artemis ( Milla Jovovich) ஒரு பாலைவன பகுதியில் காணாமல் போன இன்னொரு டீமை கண்டுபிடிக்கும் மிஷனில் இருக்கிறார். 
திடீரென புயல் மின்னல் அடிக்க அதற்குள் செல்லும் வாகனம் அப்படியே வேறு உலகத்துக்கு போய் விடுகிறது. 
அங்க நிறைய பெரிய பெரிய மிருகங்களா வருகிறது. 
Tremors , Dune படத்துல வர்ற மாதிரி சத்தம் கேட்டா மண்ணுக்குள்ளயே வர்ற மிருகம், பெரிய பெரிய சிலந்திகள் , டிராகன் மாதிரி நெருப்பு கக்கும் மிருகம் என நிறைய வருகின்றன. 
அந்த உலகத்தில் உள்ள வேட்டைக்காரராக  வருகிறார் Tony Jaa. 
பெரிய அளவிலான சண்டைக்காட்சிகள் அவருக்கு இல்லை. 
ஹீரோயின் மற்றும் Tony இருவரும் இணைந்து மிருகங்களிடம் இருந்து தப்பித்தார்களா? ஹீரோயின் பூமிக்கு திரும்பினாரா என்பதை படத்தில் பாருங்கள். 
விசுவல்ஸ், லொக்கேஷன்கள் , மிருகங்களின கிராபிக்ஸ் அருமை. 
பெருசா எதிர்பார்ப்புகள்  இல்லாமல் பாருங்கள். 
நல்ல டைம் பாஸ் படம். 
ஆபாசம் மற்றும் கொடூரமான வன்முறைக் காட்சிகள் எதுவும் இல்லை. 
Director: Paul W. S. Anderson
Starring: Milla Jovovich; Tony Jaa; Tip “T. I.” Harris; Meagan Good; Diego Boneta; Josh Helman; Jin Au-Yeung; Ron Perlman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013

ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் Jason Statham நடித்து 2013 -ல் வந்த ஆக்ஷன் படம்.  இது போதாதென்று திரைக்கதை எழுதியவர் Sylvester Stallone. படத்தின் கதை பல வருடங்களாக அடித்து துவைத்து எடுக்கப்பட்ட குடும்பத்தை கெட்டவர்களிடம் காப்பாற்றும் கதை தான்.  Phil Broker

No Time To Die – 2021No Time To Die – 2021

 Daniel Craig ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த கடைசி படம். வழக்கமான உலகத்தை வில்லனிடம் இருந்து காப்பாற்றும் டெம்ப்ளேட் தான்.  IMDb 7.3 Tamil dub ✅ Available @Prime வழக்கமான 007 படங்களை விட சென்டிமென்ட் தூக்கலான படம்.  தன் மனைவி