Midnight Special Tamil Review
ஸ்பெஷல் பவர் கொண்ட சிறுவனை கவர்மெண்ட் மற்றும் சில எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் தந்தையின் கதை.
IMDb 6.6
Tamil டப் ❌
சிறுவன் Alton ஒரு Cult மாதிரியான அமைப்பில் தந்தையால் வள்ர்க்கப்படுகிறான். அவன் Prayer ன் போது சில நம்பர்களை தருகிறான் அது அமெரிக்கா மிலிட்டரியில் படு ரகசியமாக பாதுக்காக்கப் படும் தகவல்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் போக வேண்டும் என்கிறான் அந்த சிறுவன்.
தந்தை தனது நண்பன் ஒருவனை துணைக்கு கூட்டிக்கொண்டு மகனுடன் அந்த இடத்தை நோக்கி கிளம்புகிறார்.
இன்னொரு புறம் அமெரிக்க ராணுவம் மற்றும் அந்த Cult உறுப்பினர்கள் அந்த சிறுவனை கைப்பற்ற துடிக்கிறார்கள்.
யார் இந்த சிறுவன் ? எப்படி இவனுக்கு ஸ்பெஷல் பவர் கிடைத்தது? எதற்காக அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிறான் என்பதை சொல்கிறது படம்.
படத்தின் ஒன்லைன் பார்க்கும் போது பயங்கர பரபரப்பான படம் போல தெரியும். ஆனால் அந்த அளவு பரபரப்பு படத்தில் இல்லை . ஆனால் அந்த பையனை பற்றிய சஸ்பென்ஸ் படத்தை நகர்த்தி செல்கிறது.
யார் இந்த சிறுவன் என்பது நல்ல ட்விஸ்ட் .
கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
Director: Jeff Nichols
Starring: Michael Shannon; Joel Edgerton; Kirsten Dunst; Adam Driver; Jaeden Martell; Sam Shepard
Music by: David Wingo
கருத்துகள்
கருத்துரையிடுக