Last Night In Soho - Movie Review In Tamil
இந்த படத்தின் டைரக்டர் Edgar Wright . இவரின் முந்தைய படங்களில் இரண்டு பார்த்து இருக்கேன். Baby Driver & Shaun Of The Dead. இரண்டுமே தரமான படங்கள்.
இந்த முறை Horror ட்ரை பண்ணிருக்கார். படம் செம சூப்பர்.
IMDb 7.5
தமிழ் டப் ❌
மாணவி Eloise க்கு (Ellie) Fashion Design ல் ஆர்வம். இவர் வசிக்கும் சின்ன கிராமத்தில் இருந்து லண்டனில் இருக்கும் Fashion Design காலேஜில் படிக்க செல்கிறார்.
அங்கு உள்ள Student Hostel ல் ஒத்து வராததால் வெளியே தங்க இடம் தேடுகிறாள். ஒரு வயதான பாட்டி ( Diana Rigg - GOT ல் விஷம் வைக்குமே அந்த பாட்டி தான். அவங்க நடிச்ச கடைசி படம் இதுதான் ) வீட்டு மாடில வாடகைக்கு போறா.
முதல் நாள் நைட்டு தூங்குறப்ப 1960 களுக்கு போய் விடுகிறாள். அது கனவு மாதிரி இல்லாமல் நிஜத்தில் நடப்பது போலவே உள்ளது
கனவில் 1960 களில் பாடகியாக முயற்சி செய்யும் Sandie ( Anya
Taylor-Joy) ஐ சந்திக்கிறார். ஆரம்பத்தில் நன்றாக போகும் Sandie வாழ்க்கை போக போக நரகமாக மாறுகிறது. அதன் பின்விளைவுகள் இவளின் நிஜ வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது.
Ellie இதிலிருந்து மீண்டாளா ? Sandie நிலைமை என்ன ஆனது என்று படத்தில் பாருங்கள். கடைசியில் பக்காவான ட்விஸ்ட் 👌👌
படத்தோட செட்டிங்குகள் , Photography செம சூப்பர். ஒளிப்பதிவு யாருனு பார்த்தா கொரியாகாரர் Chung-hoon Chung. Old Boy, Hand Maiden போன்ற சிறந்த படங்களில் பணியாற்றியவர்.
குறிப்பாக முதல் முதலாக Ellie ட்ரீம் sequence ல் இரண்டு ஹீரோயின்களும் ஒரே ஷாட்டில் மாறி மாறி வருவது. கண்ணாடி பிரதிபலிப்பில் இன்னொரு ஹீரோயினை காட்டும் இடங்கள் மிகவும் அருமை.
நடிப்பில் இரண்டு இளம் ஹீரோயின்களும் கலக்கி இருக்கிறார்கள்.
Anya Taylor - Jay ஏற்கனவே Queens Gambit ல் 60 s பெண்ணாக நடித்ததாலோ என்னமோ இந்த ரோலில் பக்காவாக பொருந்தி இருக்கிறார்.
Thomosin McKenzie இன்னொரு ஹீரோயின் . ஆரம்பத்தில் வரும் கிராமத்து பெண்ணாகவும் சரி கொஞ்சம் கொஞ்சமாக Sandie யால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் நன்றாக நடித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் நல்ல Cast மற்றும் Crew வுடன் இணைந்து சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கண்டிப்பாக பார்க்கலாம் (Recommendations are based on my personal opinion only)
Release date: 12 November 2021 (India)
Director: Edgar Wright
Starring: Thomasin McKenzie; Anya Taylor-Joy; Matt Smith; Michael Ajao; Terence Stamp; Diana Rigg
Music by: Steven Price
Cinematography: Chung-hoon Chung
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக