I Don't Feel At Home In This World Anymore Tamil Review
இது ஒரு காமெடி , க்ரைம் த்ரில்லர் படம்.Ruth (Melanie Lynskey - Heavenly Creatures, Yellow jackets) தனியாக வசிக்கும் ஒரு பெண். இவர் கிட்டத்தட்ட அன்னியன் பட அம்பி கேரக்டர் மாதிரி மக்களின் பொறுப்பின்மையை பார்த்து உள்ளுக்குள் பொறுமுகிறார்.
IMDb 6.9
தமிழ் டப் இல்லை.
ஒரு நாள் அவரைச் சுற்றி எதிர்மறையாக நிறைய நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. கடைசியில் அவரது வீட்டில் இவர் இல்லாத நேரம் கொள்ளை நடக்கிறது. லாப்டாப் மற்றும் அவரது பாட்டி நினைவாக வைத்திருந்த வெள்ளியால் செய்த பொருட்கள் கொள்ளை போகிறது.
போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தும் அவர்கள் ஒன்றும் செய்யாததால் இவரே களத்தில் இறங்குகிறார்.
இவருக்கு துணைக்கு பக்கத்து வீட்டில் பாடி சோடா மாதிரி பில் டப் கொடுத்து திரியும் ஒரு இளைஞனை சேர்த்துக் கொள்கிறார்.
இருவரும் தனக்கு தெரிந்த ரூட்டில் விசாரணையில் இறங்குகிறார்கள். கொள்ளை அடித்தது யார் , கொள்ளை அடித்த பொருட்களை மீட்டார்களா என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
காமெடி படம் மாதிரி போகும் படம் கடைசியில் அப்படியே ட்ராக் மாதிரி ஒரு அதிரடியான க்ளைமேக்ஸ் உடன் முடிகிறது.
ஹீரோயின் சூப்பராக நடித்து உள்ளார். அவருக்கு சைட் கிக்காக வரும் Tony கதாபாத்திரத்தில் Elijah Wood கலக்கி இருக்கிறார்.
நல்ல வித்தியாசமான டைம் பாஸ் படம் கண்டிப்பாக பார்க்கலாம்.
I Don't Feel At Home In This World Anymore movie download
இந்த படத்தின் டவுன்லோட் லிங்க் வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவும். Twitter, Facebook என ஏதாவது ஒன்றில் இருந்து Direct Message அனுப்பவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக