Titane - 2021 Tamil Review
இது ஒரு French Sci-fi , Horror , Thriller .
இது ரொம்பவே Weird ஆன படம். ஆபாசத் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் ரொம்ப ரொம்ப அதிகம்.
படத்தோட ஹீரோயினுக்கு சின்ன வயசுல ஆக்ஸிடென்ட் ஆகிறுது அதனால் மண்டை ஓட்டுல Titane என்ற உலோகத்தால் ஆன ப்ளேட் வைக்கிறாங்க. அதிலிருந்து ஒரு 15 வருஷம் கழிச்சு நடக்கும் கதை.
படத்தோட 2 லைனர் என்னனா. ஒரு கார் ஒரு பெண்ணுக்கு குழந்தை கொடுத்தால் என்ன ஆகும்.
அந்த பெண் பெரிய சைகோவா இருந்து பல கொலைகள் செய்யுறா... போலீஸ்ல தப்பிக்க ஒரு வித்தியாசமான முடிவு எடுக்குறா.. அது என்ன முடிவு எப்படி படம் முடிஞ்சதுனு தெரிந்து கொள்ள படத்தை பாருங்கள்.
இது ஒரு பெண் இயக்குனரின் படம். வித்தியாசமாக யோசிச்சு இருக்காங்க. படம் மெதுவாக தான் போகும். அடுத்து என்ன நடக்கப் போகுது என்ற சஸ்பென்ஸ் மட்டுமே படத்தை நகர்த்தி செல்கிறது. அதனால் ஸ்பாய்லர் எதுவும் கொடுக்கவில்லை.
இரண்டாவது பாதி அப்பா, மகன் (ள்) பாசத்தை சொல்றாங்க.
இது மாதிரி லாம் எப்படி யோசிக்கிறாங்கனு தெரியவில்லை.
வித்தியாசமான ஒரு Sci Fi , Horror படம் பாக்கனும்னு நினைச்சா கண்டிப்பாக பாருங்கள்.
கண்டிப்பாக 18+ மட்டுமே..
கருத்துகள்
கருத்துரையிடுக