இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம்.
IMDb 7.7
தமிழ் டப் இல்லை
எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத Genre. இருந்தாலும் ட்விட்டர் நண்பர் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை கண்டிப்பாக போஸ்ட் போடணும் என் று கூறிவிட்டார்.
அதனால் தான் இந்த படம் பார்த்தேன்
.
இந்த படம் பல வருஷமா என்னோட வாட்ச் லிஸ்ட்ல இருந்தது( Jennifer Lawrence க்காக add பண்ணி வச்சுருந்தேன் ☺️)
ஹீரோ ஒரு Bi Polar பேஷண்ட். இந்த பாதிப்பு உள்ளவர்கள் மனநிலை சீராக இருக்காது திடிரென கோபப்படுவார்கள், அடிதடியில் இறங்குவார்கள். இதனால் மனநோயாளிகள் மருத்துவமனையில் 8 மாதங்கள் இருந்து சிகிச்சை எடுத்துவிட்டு பெற்றோருடன் வசிக்கிறார்.
இவருடைய லட்சியம் தன் மனைவியுடன் மீண்டும் சேருவது. ஆனால் சில பிரச்சினைகளால் அவளளை நெருங்க கூடாது என போலீஸ் ஆர்டர் உள்ளது .
அதனால் தனது மனைவியின் நண்பியான ஹீரோயின் உதவியை நாடுகிறார். அவள் நான் உனக்கு உதவி செய்கிறேன் ஆனால் பதிலுக்கு என்னோடு ஒரு டான்ஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்கிறார்.
சரி என்று இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் ஆரம்பிக்கிறார்கள். அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியும் 😁
இதற்கு நடுவே ஹீரோவோட அப்பா ஒரு பெட் கட்டி டான்ஸ் போட்டியில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கடைசியில் இருவரும் இணைந்தார்களா ? டான்ஸ் போட்டி முடிவு என்ன என்பதை படத்தில் பாருங்கள்.
ஹீரோவாக Bradley Cooper அருமையாக நடித்து இருக்கிறார்.
ஹீரோயின் #Jennifer Lawrence செய் கலக்கலான நடிப்பு. இந்த படத்திற்காக ஆஸ்கார் வாங்கி உள்ளார்.
ஹீரோவின் அப்பாவாக Robert de Niro நிறைவாக நடித்து உள்ளார்.
நல்ல நடிகர்கள் , நடிகைகள், நல்ல கதை, கொஞ்சம் காமெடி, ரொமான்ஸ் என எல்லாமே இருக்கிறது படத்தில் .
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥
இந்த மாதிரி படங்கள் பார்க்கலாம் போலயே..
Director: David O. Russell
Cast: Bradley Cooper, Jennifer Lawrence, Robert DeNiro, Jacki Weaver, Chris Tucker, Julia Stiles, Brea Bee
Screenplay: David O. Russell, based on the novel by Matthew Quick
Cinematography: Masanobu Takayanagi
Music: Danny Elfman
கருத்துகள்
கருத்துரையிடுக