Mare Of EastTown Mini Series Tamil Review
1 Season , 7 Episode
இது ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
whodunit வகையான மினி தொடர்.
IMDb 8.5
தமிழ் டப் இல்லை.
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥🔥
தொடரின் பெரிய ப்ளஸ்னு பார்த்தால் ஹீரோயின் Kate Winslet மற்றும் தொடர் நடக்கும் சிறிய ஊர்.
Broadchurch மாதிரியான சீரிஸ் தான் இது.
Kate Winslet (Heavenly Creatures -1994) ஒரு திறமையான டிடெக்டிவ். ரொம்ப வருஷமா சொந்த ஊர்ல வேலை பார்க்கிறார். கிட்டத்தட்ட ஊரில் உள்ள எல்லாரும் சொந்தக்காரர்கள் இல்லாவிட்டால் நண்பர்களாக உள்ளனர்.
தனது நண்பியின் மகள் காணாமல் போய் ஒரு வருடம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளார். தனது மகன் தற்கொலை பண்ணி இறந்து விட்டதால் தனது பேரனை வளர்க்கிறார். முன்னாள் கணவனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஊரில் சிறு குழந்தையுடன் வசிக்கும் இளம்பெண் கொலை செய்யப்படுகிறார். இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில இருக்கும் ஹீரோயினிடம் இளம்பெண் கொலை கேஸும் வந்து சேர்கிறது. இந்த மூன்று கொலைகளையும் விசாரணை செய்ய வெளியூரில் இருந்து ஒரு திறமையான இளம் டிடெக்டிவ் உதவியை நாடுகிறது உள்ளூர் போலீஸ்.
ஹீரோயின் மற்றும் வெளியூர் டிடெக்டிவ் இருவரும் சேர்ந்து கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை தொடரில் பாருங்கள்.
சின்ன ஊர், நண்பர்கள் மட்டும் மற்றும் உறவினர்கள் வட்டத்தைச் சுற்றி நகர்கிறது கதை. அதனால் செம சஸ்பென்ஸ் உடன் போகிறது தொடர்.
வெறுமனே விசாரணை என்பதை தாண்டி குடும்ப உறவுகள், நட்பு என எல்லாமே கதையுடன் பிண்ணி பிணைந்து இருப்பதால் தொடர் நல்லா எங்கேஜிங்கா போகுது.
Kate Winslet தான் தொடர் முழுவதும் வருகிறார். சிக்கலான கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உள்ளார். இந்த வயதிலும் அழகாக உள்ளார் . சின்ன சின்ன ரொமான்ஸ் போர்ஷன்களும் ரொம்பவே அருமை.
ஹீரோயின் அம்மாவாக வருபவர், அவரது நண்பியாக வருபவர் என அனைவரும் பக்காவாக நடித்து உள்ளார்கள்.
Director:
Craig Zobel
Cast:
Kate Winslet
Julianne Nicholson
Jean Smart
Angourie Rice
David Denman
Neal Huff
Guy Pearce
Cailee Spaeny
John Douglas Thompson
Joe Tippett
Evan Peters
Sosie Bacon
James McArdle
கருத்துகள்
கருத்துரையிடுக