முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Knives Out (2019) & Gone Baby Gone (2007)

Knives Out (2019) & Gone Baby Gone (2007) Tamil Review 


இன்னிக்கு நம்ம 2 இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் படத்தை பத்தி பார்க்க போறோம். 


இரண்டு படத்துக்கும் என்னோட Recommendation - 🔥🔥🔥🔥🔥

Strongly Recommended. 

Gone baby gone movie review in tamil, knives Out movie review in tamil,  investigation thriller movie recommendation in tamil, Daniel Craig , Ben Affl


ரெண்டு படமுமே அடுத்து என்ன நடக்கப் போகிறது என நம்மால் guess பண்ணவே முடியாது. 

அவ்வளவு ட்விஸ்ட் & டர்ன்ஸ் இருக்கும். 


Gone Baby Gone - 

ஒரு சின்ன குழந்தை காணாமல் போய் விடுகிறது. அந்த குழந்தையின் உறவினர் தனியாக துப்பறியும் ஹீரோ மற்றும் ஹீரோயினை வேலைக்கு வைக்கிறார். இவர்கள் போலீஸ் உடன் சேர்ந்து வேலை செய்கிறார் ‌‌ .


IMDb 7.6 


முதலில் சாதாரண கடத்தலாக ஆரம்பிக்கும் படம்  போதைப்பொருள் மாஃபியா, போலீஸ் ஏதோ மறைக்கிறது என சிக்கலான கேஸாக மாறிவிடுகிறது. 


கடைசியில் யாரும் எதிர்பாராத ஒரு க்ளைமாக்ஸ் 👌👌



Director: Ben Affleck

Cast: Casey Affleck, Madeline O'Brien, Titus Welliver, Amy Madigan, Amy Ryan, John Ashton, Ed Harris, Morgan Freeman, Michelle Monaghan, Edi Gathegi

Screenplay: Ben Affleck & Aaron Stockard, based on the novel by Dennis Lehane

Cinematography: John Toll



Knives Out  - 


ஒரு வயதான பணக்கார எழுத்தாளர் திடீரென இறந்து விடுகிறார். 


IMDb 7.9 


தற்கொலை போல தெரிந்தாலும் யாரோ ஒருவர் கொலை என கொளுத்திப் போட்டு ஒரு பிரபல மற்றும் திறமையான தனியார் துப்பறியும் நபரை வேலைக்கு வைக்கிறார்.


எழுத்தாளரிடம்  வேலை பார்த்த இளம் நர்ஸ் இந்த விசாரணையின் நடுவில் சிக்கிக் கொள்கிறார்.


இவருக்கு உள்ள பெரிய பிரச்சினை பொய் பேசினால் வாந்தி வந்து விடும்.  விசாரணையை எப்படி சமாளித்தார்? கொலையா தற்கொலையா ? அவருடைய சொத்துக்கள் யாருக்கு சென்றது என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். 


எல்லாமே முடிஞ்சது அவ்வளவு தான் என் நினைக்கும் போது ஒரு ட்விஸ்ட் வைப்பார்கள். அனைத்து ட்விஸ்ட்களும் திணிக்கப்படாமல் இயல்பாக இருக்கும். 


Director: Rian Johnson

Cast: Daniel Craig, Katherine Langford, Christopher Plummer, Lakeith Stanfield, Toni Collette, Don Johnson, Michael Shannon, Jamie Lee Curtis, Ana de Armas, Chris Evans, Frank Oz

Screenplay: Rian Johnson

Cinematography: Steve Yedlin

Music: Nathan Johnson



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்