உலக சினிமா ரசிகர்களுக்கு IMDb ஒரு சினிமா விக்கிப்பீடியா. திரைப்படங்கள், சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என அனைத்தைப் பற்றியும் விவரங்கள் இதில் கொட்டிக்கிடக்கும்.
தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை பார்க்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை நான் IMDb வைத்து தான் முடிவு செய்வேன்.
இந்த போஸ்ட்ல உங்க ரிவ்யூ லிங்கை எப்படி IMDb Critics' Review Section la add பண்ணுறதுனு பார்க்கலாம்.
நான் IMDb mobile app la எப்படி இத பண்றதுன்னு சொல்றேன்.
உங்களுக்கு தேவை:
1. IMDb App உங்க மொபைல்ல install பண்ணிக்கோங்க.
2. IMDb account sign up பண்ணுங்க.
3. எந்த படத்துக்கு ரிவ்யூ Add பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அந்த படத்தை Search பண்ணி Open பண்ணுங்க .
நான் Contact படத்தோட ரிவ்யூவை Add பண்ண போறேன்.
Step - 1
படத்தை App la Open பண்ணுங்க.
Step -2- Scroll பண்ணி கீழ வந்து "Edit Page " பட்டனை கிளிக் செய்யுங்கள்.
Step - 3 - Scroll பண்ணி கீழ வந்து "External Reviews" ல் "Add 1 Item" select பண்ணுங்க.
அப்படியே கீழ scroll பண்ணி கடைசில இருக்கும் "Continue" பட்டனை அழுத்துங்கள்.
Step - 4 -
4.1. இப்ப வர்ற பேஜ்ல முதல் ஃபாக்ஸ்ல உங்க ரிவ்யூ லிங்கை போடுங்க . (Website, YouTube ) எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
4.2. ஆனால் லிங்க் நேரடியாக உங்கள் ரிவ்யூ ஃபேஜ் அல்லது வீடியோக்கு செல்ல வேண்டும்.
4.3. இரண்டாவது ஃபாக்ஸ்லில் IMDb ல் உங்கள் லிங்க் எவ்வாறு display ஆகணும் என்பதை கண்ட்ரோல் பன்றது. இது ரொம்பவே முக்கியமான ஒன்று.
4.3.1. Description ல் உங்க வெப்சைட் பெயர்,ரிவ்யூ எழுதியவர் பெயர் மற்றும் மொழியை குறிப்பிடலாம்.
FOMAT: Website Name [Reviewer Name] (Tamil)
EXAMPLE : Tamil Hollywood Recommendations [Samy](Tamil)
Output:
Tamil Hollywood Recommendations (Tamil)
Samy
4.3.2 . Description box கீழ ஒரு செக் பாக்ஸ் இருக்கும்
Provide an explanation to assist in processing this submission
அத செக் பண்ணீங்கனா ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் வரும் .. அதில் ஏன் உங்க ரிவ்யூவ IMDb la add பண்ணணும்னு ஒரு 2 வரி எழுதுங்க.
4.4 click "Check These updates" button.
4.5. எல்லாம் கரெக்டா இருந்தா கீழ உள்ள இமேஜ் மாதிரி பச்சை கலர் shade ஓட மெஸேஜ் வரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக