Annihilation - 2018 Movie Tamil Review
Ex Machina பட டைரக்டரின் இன்னொரு படம்.
படத்தின் ஆரம்பத்தில் ஜீன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் Lena செல்கள் பற்றி வகுப்பு எடுப்பது காட்டப்படுகிறது. இராணுவத்தில் வேலை பார்த்த கணவர் திடீரென காணாமல் போய்விட வருடக்கணக்கில் தேடிக்கொண்டு இருக்கிறார்.
இன்னொரு புறம் விண்கல் போன்ற ஒன்று ஒரு லைட் ஹவுஸில் விழுகிறது.
அடுத்த காட்சியில் Lena தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் கவச உடை அணிந்த ஒருவர் விசாரணை செய்கிறார்.
விசாரணையில் இருந்து Lena ஏதோ ஒரு டாப் சீக்ரெட் மிஷினில் இருந்து வந்து உள்ளார் என தெரிகிறது. மேலும் அந்த மிஷனில் இருந்து அவர் மட்டுமே தப்பி வந்துள்ளார் என்பதும் .
Shimmer என்று ஒரு ஏரியாவை பற்றி சொல்கிறார்கள். அதற்குள் போனவர்கள் திரும்ப வந்ததில்லை.
படம் நான் லீனியர் வகையில் உள்ளது.
Lena வின் பர்சனல் வாழ்க்கை, அவர் மற்றும் 4 பெண்கள் Shimmer ஏரியாவில் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவரது கணவருக்கு என்ன ஆனது என்பவற்றை சொல்கிறது படம்.
படம் கொஞ்சம் மெதுவாக தான் போகிறது. Shimmer பகுதியில் நடக்கும் அட்வென்ட்சர்கள் இன்னும் சுவாரசியமாக இருந்து இருக்கலாம்.
Lena வாக Natalie Portman நன்றாக நடித்துள்ளார். படத்தில் நிறைய விஷயங்களை நம்முடைய முடிவுக்கு விட்டு விடுகிறார்கள்.
Sci Fi Fans கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
Director: Alex Garland
Cast: Natalie Portman, Oscar Isaac, Jennifer Jason Leigh, Gina Rodriguez, Tuva Novotny, Tessa Thompson
Screenplay: Alex Garland, based on the novel by Jeff VanderMeer
Cinematography: Rob Hardy
Music: Geoff Barrow, Ben Salisbury
கருத்துகள்
கருத்துரையிடுக