Ajji Marathi Movie Review In Tamil
60+ வயது பாட்டி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பேத்திக்காக பழிவாங்கும் கதை.
ஏழ்மையான நிலையில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம். 10 வயது குழந்தையை கற்பழித்து விடுகிறான் அந்த ஏரியாவில் அரசியல் பலமிக்க ஒருவன்.
அவன் Background வெயிட்டாக இருப்பதால் போலீஸ் கேஸை அப்படியே அமுக்க நினைக்கிறது.
பெற்றோர்களும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பேர் கெட்டுப் போகும் என்று அமைதியாக இருக்கிறார்கள்.
ஆனால் பாட்டி அந்த கேடு கெட்டவனை விடுவதாக இல்லை. எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
அதை எப்படி நடத்தி முடிக்கிறார் என்பதை படத்தில் பாருங்கள்.
படம் சென்ஸிட்டிவ் கன்டென்ட். அதுனால படம் பாக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுக்கோங்க.
சரியா நடக்கவே முடியாத பாட்டி எப்படி பழி வாங்க போகுது மற்றும் அதுக்கு எப்படி ரெடி ஆகுது என்பதை சுற்றி நகர்கிறது.
வில்லன் எவ்வளவு பெரிய காமக்கொடூரன் எனக் காட்டுவதற்கு ஒரு சீன் வச்சுருப்பாங்க..பொம்மைய கூட விட மாட்டான்...
படம் ஸ்லோவா போனாலும் ஃபோர் அடிக்க வில்லை.
பாட்டி நடிப்பில் கலக்கி இருக்கிறார்
கண்டிப்பாக பார்க்கலாம்.
Only 18+ Violent & Sensitive Content
.
கருத்துகள்
கருத்துரையிடுக