முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Seven Psychopaths - 2012

Seven Psychopaths Tamil Review  இது ஒரு க்ரைம் ,  டார்க் காமெடி திரில்லர் படம். 3 Billboards Outside Ebbing பட டைரக்டரின் இன்னொரு படம் தான் இது. IMDb 7.2 தமிழ் டப் இல்லை.  ஒரு ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் Marty . Seven Psychopaths என்று ஒரு கதை எழுதுகிறார்.  அவருக்கு திடீரென  மைண்ட் ப்ளாக் ஆகிப்போச்சு அதுனால கதையை தொடர‌ முடியவில்லை.  எழுத்தாளரின் நண்பன் Billy . Billy ன் பிஸினஸ் பார்ட்னர் Hans.  Billy and Hans இரண்டு பேரோட வேலை நாய்களை கடத்துவது. நாயோட ஓனர் நாய காணோம்னு கம்ளெய்ன்ட் கொடுத்த உடனே ஓனர்ட்ட கொண்டு போய் கொடுத்து காசு வாங்குவது.  ஒரு முறை மாஃபியா கும்பல் தலைவனோட நாயை கடத்தி விடுகிறார்கள் .‌ அந்த கும்பல் தலைவன் கொடூரமான சைகோ எப்ப எவன கொல்லுவானு தெரியாது.  Hans and Billy தான் நாயை கடத்தினார்கள் என வில்லனுக்கு தெரியவர மூவரும் ஊரில் இருந்து எஸ்கேப் ஆகிறார்கள்.  இதற்கு நடுவே ஒரு சைக்கோ மாஃபியா கும்பல் ஆள்களை கொன்று விட்டு சீட்டு கட்டின் கார்டை போட்டு விட்டு போகிறான்.  அவனையும் ஒரு சைக்கோவாக வைத்து கதை எழுதுகிறான் Marty. இரண்டாவது சைக்கோ வில்லன்.‌ மீதமுள்ள 5 சைக்கோக்கள் யார் ? வில்

Baby Sitter - 2017 & Baby Sitter - 2 : Killer Queen

Baby Sitter - 2017 & Baby Sitter - 2 : Killer Queen Tamil Review  Slasher பட பிரியர்கள் இந்த படங்களை பார்க்கலாம்.  காமெடி கலந்த ஹாரர் படங்கள் இரண்டும்.  Cole என்ற இரண்டும் கெட்டான் சிறுவன். அவன பார்த்துக் கொள்ள ஒரு பேபி சிட்டர வச்சுட்டு ஊருக்கு போயிடுறாங்க அவனது பெற்றோர்கள்.  இரவு நேரத்தில் சிறுவன் தூங்கிட்டான் என நினைத்து அந்த டீன் ஏஜ் பேபி சிட்டர் நண்பர்களை கூட்டிட்டு வந்து கூத்தடிக்க ஆரம்பிக்கிறா.  ஆன இந்த சிறுவன் தூங்காமல் அவர்கள் என்ன பண்றாங்கனு வேவு பாக்குறான். திடீர்னு ஒருத்தனை கொடூரமா கொல்லுறா அந்த பெண்.  கொல்லுறத சிறுவன் பாக்க, அவன் பாக்குறத இந்த குரூப் பாக்க ... இந்த குரூப் முழுவதும் அந்த பையனை கொல்ல கிளம்புறானுக.. பையன் தப்பிச்சானா என்று படத்தில் பாருங்கள்.  இரண்டாவது பாகமும் இதே மாதிரி தான்.  டைம் பாஸ் படம்.  Netflix ல இருக்கு. 

Annihilation - 2018

Annihilation - 2018 Movie Tamil Review  இது ஒரு Sci Fi , Adventure , Horror படம்.  Ex Machina  பட டைரக்டரின் இன்னொரு படம். படத்தின் ஆரம்பத்தில் ஜீன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் Lena செல்கள் பற்றி வகுப்பு எடுப்பது காட்டப்படுகிறது. இராணுவத்தில் வேலை பார்த்த கணவர் திடீரென காணாமல் போய்விட வருடக்கணக்கில் தேடிக்கொண்டு இருக்கிறார்.  இன்னொரு புறம் விண்கல் போன்ற ஒன்று ஒரு லைட் ஹவுஸில் விழுகிறது. அடுத்த காட்சியில் Lena தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் கவச உடை அணிந்த ஒருவர் விசாரணை செய்கிறார்.  விசாரணையில் இருந்து Lena ஏதோ ஒரு டாப் சீக்ரெட் மிஷினில் இருந்து வந்து உள்ளார் என தெரிகிறது. மேலும் அந்த மிஷனில் இருந்து அவர் மட்டுமே தப்பி வந்துள்ளார் என்பதும் .  Shimmer என்று ஒரு ஏரியாவை பற்றி சொல்கிறார்கள். அதற்குள் போனவர்கள் திரும்ப வந்ததில்லை.  படம் நான் லீனியர் வகையில் உள்ளது.  Lena வின் பர்சனல் வாழ்க்கை, அவர் மற்றும் 4 பெண்கள் Shimmer ஏரியாவில் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவரது கணவருக்கு என்ன ஆனது என்பவற்றை சொல்கிறது படம்.  படம் கொஞ்சம் மெதுவாக தான் போகிறது. Shimmer பகுத

Enemy - 2013

இன்னும் Dennis Villeneuve's effect போகாம பார்த்த அவரோட இன்னொரு படம்.  படத்தோட ஒன் லைனர் நல்லா இருந்தது. Jake Gyllenhaal ஹீரோவாக நடித்து இருந்தார். அதுனால பார்த்த படம்.  IMDb 6.9  ஹீரோ Adam ஒரு காலேஜ்ல ஹிஸ்டரி வாத்தியாரா இருக்காரு. ஒரு படம் பாக்குறப்ப அவரே மாதிரி ஒருத்தன் ஒரு சீன்ல வரான்.  ஒரு ஆர்வத்துலா அவன பத்தி ஆராய்ச்சி பண்ணி மீட் பண்ண போறாரு. அங்க சில வித்தியாசமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.  அது என்னனு படத்துல பாருங்கள்.  ஒன் லைனர் நல்லா இருக்குல? ஆன படத்துல எதுவுமே புரியவில்லை 😭😭. அங்க அங்க பெரிய சைசில் சிலந்தி பூச்சி வேற வருது.  எனக்கு இவங்க ரெண்டு பேரும் ஒரே ஆள் தானோனு டவுட்டா இருக்கு.. Split personality'a இருக்குமோ ???  யாருக்காவது இந்த படம் புரிந்து இருந்ததுனா கொஞ்சம் சொல்லுங்கப்பா ..  படம் செம ஸ்லோ ஆபாசத் காட்சிகள் நிறையவே உள்ளன.  எப்படி பார்த்தாலும் அந்த சிலந்தி பூச்சி மற்றும் க்ளைமாக்ஸ் புரியவில்லை.  ரொம்பவே வித்தியாசமான படம்.  பொறுமை இருந்தா மட்டும் பாருங்க 😁😁 Amazon Prime Video வில் உள்ளது. 

Dennis Villeneuve's Sci Fi படங்கள்

Dune படம் பார்த்த பின்பு இவருடைய Sci Fi படங்களை பார்க்க வேண்டும் என ஆர்வம் எழுந்தது.  இந்த த்ரெட்டில் Dennis V ன்  இரண்டு Sci Fi படங்களை பற்றி பார்க்கலாம்.  Arrival படம் 2 மணி நேரம் ஓடும் படம். Blade Runner கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் படம். எனவே இந்த படங்களை பார்க்க பொறுமை வேண்டும்.  ஆனால் இரண்டு படங்களும் வொர்த்து 🔥🔥🔥🔥🔥 Arrival - 2016 Contact னு ஒரு படத்தை பத்தி கொஞ்சம் நாள் முன்னாடி எழுதி இருந்தேன். அதே மாதிரியான படம் தான் இது.  திடீர்னு ஒரு நாள் 12 ஏலியன் விண்கலங்கள் பூமியில் தரை இறங்குகின்றன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் என மொத்தம் 12 இடங்களில் வந்து நிற்கும். ஏன் வந்தானுக எதுக்கு வந்தானுக என எந்த அறிவிப்பும் இருக்காது ‌.  சண்டைக்கு வந்தார்களா, சுற்றுலாவா என தெரியாமல் எல்லாரும் மண்டையை பிய்த்துக் கொண்டு இருப்பார்கள். ஹீரோயின்  Banks ஒரு மொழி வல்லுனர் (linguistic expert) . இராணுவம் ஏலியன்கள் உடன் தொடர்பு கொள்ள Banks ன் உதவியை நாடுவார்கள். இவருடன் சேர்ந்து இயற்பியல் வல்லுநர் ஆன Ian இந்த பணியில் ஈடுபடுவார்.  இருவரும் சேர்ந்து ஏலியன்கள் உடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்வது

Mare Of EastTown - 2021

Mare Of EastTown Mini Series Tamil Review 1 Season , 7 Episode  இது ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.  whodunit வகையான மினி தொடர். IMDb 8.5  தமிழ் டப் இல்லை.  கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥🔥 தொடரின் பெரிய ப்ளஸ்னு பார்த்தால் ஹீரோயின் Kate Winslet மற்றும் தொடர் நடக்கும் சிறிய ஊர்.  Broadchurch   மாதிரியான சீரிஸ் தான் இது.  Kate Winslet ( Heavenly Creatures -1994 )  ஒரு திறமையான டிடெக்டிவ். ரொம்ப வருஷமா சொந்த ஊர்ல வேலை பார்க்கிறார். கிட்டத்தட்ட ஊரில் உள்ள எல்லாரும் சொந்தக்காரர்கள் இல்லாவிட்டால் நண்பர்களாக உள்ளனர்.  தனது நண்பியின் மகள் காணாமல் போய் ஒரு வருடம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளார். தனது மகன் தற்கொலை பண்ணி இறந்து விட்டதால் தனது பேரனை வளர்க்கிறார். முன்னாள் கணவனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் உள்ளது.  இந்நிலையில் ஊரில்  சிறு குழந்தையுடன் வசிக்கும்  இளம்பெண் கொலை செய்யப்படுகிறார். இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில இருக்கும் ஹீரோயினிடம் இளம்பெண் கொலை கேஸும் வந்து சேர்கிறது. இந்த மூன்று கொலைகளையும் விசாரணை செய்ய வெளியூரில் இருந்து ஒரு திறமையான இளம் டிடெ

Titane - 2021

Titane - 2021 Tamil Review  இது ஒரு French Sci-fi , Horror , Thriller .  இது ரொம்பவே Weird ஆன படம். ஆபாசத் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் ரொம்ப ரொம்ப அதிகம்.  படத்தோட ஹீரோயினுக்கு சின்ன வயசுல ஆக்ஸிடென்ட் ஆகிறுது அதனால் மண்டை ஓட்டுல Titane என்ற உலோகத்தால் ஆன ப்ளேட் வைக்கிறாங்க. அதிலிருந்து ஒரு 15 வருஷம் கழிச்சு நடக்கும் கதை‌. படத்தோட 2 லைனர் என்னனா. ஒரு கார் ஒரு பெண்ணுக்கு  குழந்தை கொடுத்தால் என்ன ஆகும்.  அந்த பெண் பெரிய சைகோவா இருந்து பல கொலைகள் செய்யுறா...  போலீஸ்ல தப்பிக்க ஒரு வித்தியாசமான முடிவு எடுக்குறா.. அது என்ன முடிவு எப்படி படம் முடிஞ்சதுனு  தெரிந்து கொள்ள படத்தை பாருங்கள்.  இது ஒரு பெண் இயக்குனரின் படம். வித்தியாசமாக யோசிச்சு இருக்காங்க. படம் மெதுவாக தான் போகும். அடுத்து என்ன நடக்கப் போகுது என்ற சஸ்பென்ஸ் மட்டுமே படத்தை நகர்த்தி செல்கிறது. அதனால் ஸ்பாய்லர் எதுவும் கொடுக்கவில்லை.  இரண்டாவது பாதி அப்பா, மகன் (ள்) பாசத்தை சொல்றாங்க.  இது மாதிரி லாம் எப்படி யோசிக்கிறாங்கனு தெரியவில்லை.  வித்தியாசமான ஒரு Sci Fi , Horror படம் பாக்கனும்னு நினைச்சா கண்டிப்பாக பாருங்கள். கண்டிப

The Trip - 2021

இது நார்வே நாட்டில் இருந்து வந்து இருக்கும் காமெடி கலந்த ஹாரர் படம்.  நிறைய ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளது.  எலியும் , பூனையுமாக இருக்குற ஜோடி காட்டுக்குள்ள இருக்குற கெஸ்ட் ஹவுஸ்ல போய் தங்கி இருந்து பிரச்சினைகள் எல்லாத்தையும் பேசி தீக்கலாம்னு போறாங்க. ஆனால் புருஷன் பொண்டாட்டியை மொத்தமாக தீர்த்து கட்டிவிடனும்னு போறான் . பொண்டாட்டி புருஷனை போட்டுத்தள்ளி விடணும்னு ப்ளான் போட்டு போறா.  புருஷன் மற்றும் பொண்டாட்டி மாறி மாறி கொல்ல ட்ரை பண்றப்ப இன்னொரு 3 பேர் அந்த வீட்டு பரண்ல இருந்து திமு திமுனு விழுகுறானுக.  யார் இந்த மூணு பேரு ? காட்டுக்குள் இருக்கும் வீட்டுக்குள்ள இவனுக எப்படி வந்தானுக. அவங்க நோக்கம் என்ன ? இந்த ஜோடில யார் யாரை கொன்றது போன்றவற்றை கொஞ்சம் காமெடி கலந்து கொடூரமாக சொல்கிறது படம்.  ஹாரர் காமெடி பிரியர்கள் பார்க்கலாம்.  Available in Netflix.  Telegram link இப்போதைக்கு இல்லை. கிடைச்சா சேனலில் போஸ்ட் செய்கிறேன். 

Dune - 2021

இயக்குனர் Denis Villeneuve குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவர்.  இவரது படங்களான Arrival, Sicario, Prisoners etc., எல்லாம் வேற லெவலில் இருக்கும்.  IMDb 8.3 தமிழ் டப் இப்போதைக்கு இல்லை.  இந்த படம் ஒரு Sci Fi, Adventure படம். கதை நடப்பது கி.பி . 10, 191 ஆம் வருடத்தில் . கதைக்களம் அரசியல்,  மற்ற நாட்டின்  இயற்கை வளங்களை சுரண்டல்,  அதை தடுக்க நினைக்கும் பூர்வகுடிகள் ஆகியவற்றை சுற்றி நகர்கிறது.  எனக்கு என்னமோ கதைக்கரு கிட்டத்தட்ட அவதார் படத்தோடதது தான். என்ன அங்கு அந்த மக்கள் காட்டுக்குள் வசிப்பவர்கள், இதில் பாலைவனத்தில் வசிக்கும் மக்கள்.  அங்கு ஒரு தனிமத்திற்காக தீவை கைப்பற்ற நினைப்பார்கள் இங்க Spice எனப்படும் ஒரு பொருள்.  புதுப்படம் மற்றும் தியேட்டர் மெட்டீரியல் என்பதால் ஸ்பாய்லர் கொடுக்க விரும்பவில்லை.  படத்தின் விசுவல்ஸ், லொக்கேஷன்கள், தட்டான் மாதிரி பறக்கும் விமானங்கள், பெரிய பெரிய ஸ்பேஸ் ஷிப்,  பெரிய ஷைஸ் பாலைவன worm, செட்டிங்குகள் என எல்லாமே தரமாக இருக்கிறது.  இசை Hans Zimmer புகுந்து விளையாடி இருக்கிறார் மனுஷன். நிறைய இடங்களில் ஹம்மிங் உடன் வரும் இசை அருமை.தேவையான இடங்களி

Sci Fi படங்கள் - Part -1

The Abyss - 1989 James Cameron டைரக்ட் பண்ண படம். அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ்னு இந்த படத்தை பாத்தா தெரியும்.  ஒரு நீர்மூழ்கி கப்பல் விபத்துல கடலுக்கு அடியில் போய்விடும். அதை காப்பாற்ற மிலிட்டரி மற்றும் ஒரு எண்ணெய் கம்பெனியின் தொழிலாளர்கள் இணைந்து போராடுவார்கள்.  இதற்கு நடுவில் அனைவரும் ஏலியன்கள் நடமாட்டத்தை உணருவார்கள்.  இந்த படம் பார்க்க பொறுமை வேண்டும். கிட்டத்தட்ட 2.45 மணிநேரம் ஓடும் படம். ஆனால் உழைப்பை கொட்டி படம் எடுத்து இருப்பார்கள். 1988 - 1989 களில் செய்யப்பட்ட கிராபிக்ஸ் வேற லெவல்.  கடைசியில் யார் யார் உயிரோட தப்பிச்சு வந்தாங்கனு படத்துல பாருங்கள்.  படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  Contact - 1997  ஹீரோயின் ஏலியன்கள் இந்த பிரபஞ்சத்தில் எங்காவது இருக்கின்றனவா என்பதை ஆராய்ச்சி செய்வார்.  ஒரு சமயத்தில் ஏலியன்கள் இடம் இருந்து சிக்னல் வரும்.  அதற்கு அப்புறம் அவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சுற்றி நகரும் படம்.  Forrest Gump director Robert Zemeckis ன் இன்னொரு அருமையான படம். இதுவும் கொஞ்சம் பெரிய படம் தான். கொஞ்சம் பொறுமையா தான் பார்க்கணும். https://www.tamilhollywoodreviews.co

How to add your movie review in IMDb

உலக சினிமா ரசிகர்களுக்கு IMDb ஒரு சினிமா விக்கிப்பீடியா. திரைப்படங்கள், சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என அனைத்தைப் பற்றியும் விவரங்கள் இதில் கொட்டிக்கிடக்கும்.  தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை பார்க்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை நான் IMDb வைத்து தான் முடிவு செய்வேன்.  இந்த போஸ்ட்ல உங்க ரிவ்யூ லிங்கை எப்படி IMDb Critics' Review Section la add பண்ணுறதுனு பார்க்கலாம்.  நான் IMDb mobile app la எப்படி இத பண்றதுன்னு சொல்றேன்.  உங்களுக்கு தேவை:  1. IMDb App உங்க மொபைல்ல install பண்ணிக்கோங்க.  2. IMDb account sign up பண்ணுங்க.  3. எந்த படத்துக்கு ரிவ்யூ Add பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அந்த படத்தை Search பண்ணி Open பண்ணுங்க ‌‌ . நான் Contact படத்தோட ரிவ்யூவை Add பண்ண போறேன்.  Step - 1 படத்தை App la Open பண்ணுங்க.  Step -2- Scroll பண்ணி கீழ வந்து "Edit Page " பட்டனை கிளிக் செய்யுங்கள்.  Step - 3 - Scroll பண்ணி கீழ வந்து "External Reviews" ல் "Add 1 Item"  select பண்ணுங்க.  அப்படியே கீழ scroll பண்ணி கடைசில இருக்கும் "Continue" பட்டனை அழுத்துங்கள்.  Step - 4

Contact - 1997

Contact - 1997 Tamil Review  இந்த படம் ரொம்ப வருஷமா என் வாட்ச் லிஸ்ட்ல இருந்தது. இது ஒரு Sci Fi படம்.  Forrest Gump பட இயக்குனரின் படம்,  ஹீரோயின் Jodie Foster ( Inside Man , ஹீரோ Matthew McConaughey ( A Time To Kill , Lincoln Lawyer  IMDb 7.5 தமிழ் டப் இல்லை.  வேற கிரகத்தில் உயினங்கள் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் ஹீரோயின் பற்றிய படம்.  எல்லி ஒரு திறமையான விஞ்ஞானி. இவருடைய லட்சியம் மனிதர்களைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் உள்ளனவா அப்படி இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிப்பது.  இதற்காக சில தனியார் உதவியுடன் பெரிய பெரிய ரேடியோ டெலஸ்கோப் உதவியுடன் வானத்தில் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறதா என்று ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குறாங்க.  இதற்கு இடையில் அங்கு உள்ள மதம் சம்பந்தப்பட்ட படிப்பில் படிக்கும் Palmer உடன் பழக்கம் ஏற்படுகிறது.  ஒரு நாள் யாரும் எதிர்பாராத வண்ணம் வானத்தில் இருந்து ஒரு சிக்னல் வருகிறது. உலகமே பரபரப்பாகி அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை சுற்றி படம் நகர்கிறது.  Sci Fi படம் என்றாலும் கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம். கிராஃபிக்ஸ் எல்லாம் பக்காவா தேவையான அ

Ajji - 2017

Ajji Marathi Movie Review In Tamil இது ஒரு க்ரைம் ட்ராமா படம்.  60+ வயது பாட்டி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பேத்திக்காக பழிவாங்கும் கதை‌.  ஏழ்மையான நிலையில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம். 10 வயது குழந்தையை கற்பழித்து விடுகிறான் அந்த ஏரியாவில் அரசியல் பலமிக்க ஒருவன்.  அவன் Background வெயிட்டாக இருப்பதால் போலீஸ் கேஸை அப்படியே அமுக்க‌ நினைக்கிறது.  பெற்றோர்களும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பேர் கெட்டுப் போகும் என்று அமைதியாக இருக்கிறார்கள்.  ஆனால் பாட்டி அந்த கேடு கெட்டவனை விடுவதாக இல்லை. எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.  அதை எப்படி நடத்தி முடிக்கிறார் என்பதை படத்தில் பாருங்கள்.  படம் சென்ஸிட்டிவ் கன்டென்ட். அதுனால படம் பாக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுக்கோங்க.  சரியா நடக்கவே முடியாத பாட்டி எப்படி பழி வாங்க போகுது மற்றும் அதுக்கு எப்படி ரெடி ஆகுது என்பதை சுற்றி நகர்கிறது.  வில்லன் எவ்வளவு பெரிய காமக்கொடூரன் எனக் காட்டுவதற்கு ஒரு சீன் வச்சுருப்பாங்க..‌‌பொம்மைய கூட விட மாட்டான்...   படம் ஸ்லோவா போனாலும் ஃபோர் அடிக்க வில்லை.  பாட்டி நடிப்பில் கலக்கி

House Of Secrets - The Burari Deaths - 2021

2018- ல் டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது . ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரு நாள் நைட் தூக்குல தொங்கிட்டாங்க.  இறந்ததுல குறைஞ்ச வயது 14 வயது பையன் , அதிக வயசு 80 வயசு பாட்டி.  இதற்கு நடுவுல கிட்டத்தட்ட டீன் ஏஜ், 30+, 40+ னு ஒவ்வொரு குரூப்லயும் இருப்பார்கள்.  3 தலைமுறை ஒரே இரவில் அழிந்து விட்டது.  10 நாளைக்கு முன்னாடி தான் அந்த குடும்பத்துல ஒரு பொண்ணுக்கு அவ்வளவு சந்தோஷமா நிச்சயதார்த்தம் வைச்சு சிறப்பா குடும்பத்தோடா கொண்டாடிருக்காங்க. இவ்வளவுக்கும் ஒரு சொட்டு இரத்தம் இல்லை, சண்டை எதுவும் நடந்த தடயம் இல்லை ஆனா 11 பேரும் இறந்து விட்டனர்.   என்ன நடந்தது ? யார் இதற்கு காரணம் ? கொலையா ? தற்கொலையா ? என அலசி ஆராய்கிறது இந்த டாக்குமெண்டரி சீரிஸ்.  கொலையை விசாரித்த போலீசார், தடயவியல் துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள்,  டாக்டர்கள் , அந்த குடும்பத்தின் உறவினர்கள், பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் அன்று நடந்த சம்பவங்களை பட்டியலிடுகிறார்கள்.  3 வது எபிசோடில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. ஆனால் இது மாதிரி நடக்கும் என கனவிலும் கூட யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.  ஒரு போலீஸ் சொன்ன மாதிரி படத்துல

Bedevilled - 2010

இது ஒரு கொரியன் ஹாரர் திரில்லர்.  இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்ப்பது நல்லது. IMDb 7.3 தமிழ் டப் இல்லை.  சிட்டியில் ஒரு வேலை பார்க்கும் இளம்பெண் தனிமையில் வசிக்கிறார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் வலுக்கட்டாயமாக லீவில் அனுப்பப் படுகிறார்.  இவர் தான் சிறுவயதில் வளர்ந்த தன் தாத்தா வசிக்கும் தீவிற்கு மன அமைதி வேண்டி போகிறார். அந்த தீவில் வசிப்பது மொத்தமே 9 பேர் தான்.  அந்த தீவில் இவளது சிறுவயது  நண்பி பாசத்துடன் வரவேற்கிறார். அந்த நண்பியின் கணவர் , கணவரின் தம்பி எல்லாரும் நண்பியை அடிமை போல நடத்துகின்றனர்.  அங்கு வசிக்கும் 5 வயதான பெண்களும் ஆண்கள் பக்கம்.  ஆண்கள் என்ன செய்தாலும் அவர்களுக்கு ஜால்ரா தட்டும் பெண்கள். நண்பிக்கு ஒரே ஆறுதல் அவளுடைய குழந்தை.  ஒரு கட்டத்தில் தீவை விட்டு தப்ப முயற்சி செய்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது.  அதற்கு அப்புறம் நடக்கும் ஒரு சம்பவம் காரணமாக இவள் தன்னுடைய பொறுமையின் எல்லையை தொடுகிறாள்.  ஒரு கட்டத்தில் பொங்கி எழுகிறாள்‌. அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பதை படத்தில் பாருங்கள்.  இதற்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் 

Squid Game - 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release னு நம்ம விளையாடுவோம்.. ‌‌விதிகளை மீறினால் அவுட் என்போம். இதையே கொஞ்சம் சீரியஸாக விதிமுறைகளை மீறினால் ஆளை காலி பண்ணி விட்டால் என்ன என்று யோசித்ததால் வந்த தொடர் தான் Squid Game.  பணக்கஷ்டம் உள்ள  500 நபர்களை  ஒரு தீவில் அடைத்து வைத்து  குழந்தைகள் விளையாடும் கேம்ஸ்களை சீரியஸாக விளையாட வைக்கிறார்கள். கடைசியில் வெற்றி பெறுபவருக்கு கோடிக்கணக்கில் பரிசு கிடைக்கும்.  இதில் யார் வெற்றி பெற்று பரிசை கைப்பற்றினார் என்பதை தொடரில் பாருங்கள்.  நல்ல விறுவிறுப்பான தொடர். கடைசியில் 1 or 2 episode கொஞ்சம் ஸ்லோவா போன மாதிரி ஒரு ஃபீலிங்.  கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.  Available in Netflix  Watch Trailer: 

Knives Out (2019) & Gone Baby Gone (2007)

Knives Out (2019) & Gone Baby Gone (2007) Tamil Review  இன்னிக்கு நம்ம 2 இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் படத்தை பத்தி பார்க்க போறோம்.  இரண்டு படத்துக்கும் என்னோட Recommendation - 🔥🔥🔥🔥🔥 Strongly Recommended.  ரெண்டு படமுமே அடுத்து என்ன நடக்கப் போகிறது என நம்மால் guess பண்ணவே முடியாது.  அவ்வளவு ட்விஸ்ட் & டர்ன்ஸ் இருக்கும்.  Gone Baby Gone -  ஒரு சின்ன குழந்தை காணாமல் போய் விடுகிறது. அந்த குழந்தையின் உறவினர் தனியாக துப்பறியும் ஹீரோ மற்றும் ஹீரோயினை வேலைக்கு வைக்கிறார். இவர்கள் போலீஸ் உடன் சேர்ந்து வேலை செய்கிறார் ‌‌ . IMDb 7.6  முதலில் சாதாரண கடத்தலாக ஆரம்பிக்கும் படம்  போதைப்பொருள் மாஃபியா, போலீஸ் ஏதோ மறைக்கிறது என சிக்கலான கேஸாக மாறிவிடுகிறது.  கடைசியில் யாரும் எதிர்பாராத ஒரு க்ளைமாக்ஸ் 👌👌 Director: Ben Affleck Cast: Casey Affleck, Madeline O'Brien, Titus Welliver, Amy Madigan, Amy Ryan, John Ashton, Ed Harris, Morgan Freeman, Michelle Monaghan, Edi Gathegi Screenplay: Ben Affleck & Aaron Stockard, based on the novel by Dennis Lehane Cinematography: John Toll Knives

Deep Rising - 1998

இது ஒரு ஹாரர் மான்ஸ்டர் மூவி.  Stephen Sommer டைரக்ட் பண்ண படம். Mummy படம் எடுக்குறதுக்கு முன்னாடி வந்துருக்கும்னு நினைக்கிறேன்.  தமிழ் டப் பிரியர்கள் கண்டிப்பாக பாருங்கள். காமெடியன் one liner எல்லாம் நல்லாருக்கும். ஒரு மிகப்பெரிய சொகுசு கப்பல் நடுக்கடலில் கோளாறு ஆகி நிக்குது. அத கொள்ளை அடிக்க ஒரு குரூப் உள்ள போனா அதுல யாருமே இல்லை .. டெட் பாடி கூட இல்லை. என்னனு பார்த்த ஒரு பெரிய சைஸ் மிருகம் கடலுக்கு உள்ள இருந்து வருது.  பெரிய ஆக்டோபஸ் மாதிரியான மிருகம் வளைச்சு வளைச்சு எல்லாத்தையும் சாப்டுது. யாரு யாரு எல்லாம் அதுட இருந்து தப்பிச்சாங்கனு படத்துல பாருங்கள்.  படம் பக்கா மசாலா படம். நல்ல டைம் பாஸ். ஏலியன் படம் மாதிரி வழ வழ கொழ கொழ சீன்கள் நிறையா இருக்கு.  Director: Stephen Sommers Cast: Treat Williams, Famke Janssen, Wes Studi, Kevin J. O'Connor, Anthony Heald Screenplay: Stephen Sommers Cinematography: Howard Atherton Music: Jerry Goldsmith

Silver Linings Playbook - 2012

இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம்.  IMDb 7.7  தமிழ் டப் இல்லை எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத Genre. இருந்தாலும் ட்விட்டர் நண்பர் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை கண்டிப்பாக  போஸ்ட் போடணும் என் று கூறிவிட்டார்.  அதனால் தான் இந்த படம் பார்த்தேன் ‌‌‌‌‌  . இந்த படம் பல வருஷமா என்னோட வாட்ச் லிஸ்ட்ல இருந்தது( Jennifer Lawrence க்காக add பண்ணி வச்சுருந்தேன் ☺️) ஹீரோ ஒரு Bi Polar பேஷண்ட். இந்த பாதிப்பு உள்ளவர்கள் மனநிலை சீராக இருக்காது திடிரென கோபப்படுவார்கள், அடிதடியில் இறங்குவார்கள். இதனால் மனநோயாளிகள் மருத்துவமனையில் 8 மாதங்கள் இருந்து சிகிச்சை எடுத்துவிட்டு பெற்றோருடன் வசிக்கிறார்.  இவருடைய லட்சியம் தன் மனைவியுடன் மீண்டும் சேருவது. ஆனால் சில பிரச்சினைகளால் அவளளை நெருங்க கூடாது என போலீஸ் ஆர்டர் உள்ளது .  அதனால் தனது மனைவியின் நண்பியான ஹீரோயின் உதவியை நாடுகிறார். அவள் நான் உனக்கு உதவி செய்கிறேன் ஆனால் பதிலுக்கு என்னோடு ஒரு டான்ஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்கிறார்.  சரி என்று இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் ஆரம்பிக்கிறார்கள். அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியும் 😁 இதற

The Chestnut Man - 2021

The Chestnut Man - 2021 Mini Series Review In Tamil Denmark - ல இருந்து வந்து இருக்கும் க்ரைம் த்ரில்லர்.  IMDb - 8.4 1 Season, 6 Episodes சீரியல் கில்லர் பற்றிய சூப்பரான investigation thriller..  My recommendation - highly recommended 🔥🔥🔥🔥🔥 ஹீரோயின் ஒரு டிடெக்டிவ் தன் மகளுடன் வசித்து வருகிறார். மகளுடன் இருக்க முடியாமல் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் வேறு டிபார்ட்மெண்ட் மாற முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.  இன்னொரு பக்கம் அந்த ஊரு சமூக நலத்துறை அமைச்சரான பெண்  Rosa தன் பெண் குழந்தையை பறிகொடுத்த சோகத்தில் அரசியலில் இருந்து விலகி இருந்துவிட்டு ஒரு வருடம் கழித்து மீண்டும் பணிக்கு திரும்புகிறார்.  ஹீரோயினின் மேலதிகாரி ஒரு பெண் கொலையை விசாரிக்க அவரை அனுப்புகிறார். அவருடைய பார்ட்னராக புதிதாக ஒருவரை அனுப்பி வைக்கிறார்.  கொலையை விசாரிக்க இருவரும் போகின்றனர். அங்கு ஒரு இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது ஒரு கை மணிக்கட்டு பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு இருக்கிறது.  இறந்த பெண் உடலின் பக்கத்தில் Chestnut Man எனப்படும் பொம்மை வைக்கப்பட்டு உள்ளது.  அது Chestnut மற்றும்