Wonder - 2017 Movie Review In Tamil
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இந்த மாதிரி ஃபீல் குட் படங்களை பார்ப்பது மனதிற்கு ரொம்பவே இதமாக இருக்கும்
சில Gene 🧬 குறைபாட்டால் முகம் கொஞ்சம் விகாரமாக இருக்கும் சிறுவன். மற்றவர்கள் கிண்டல் பண்ணுவாங்க என்று 4 வது வகுப்பு வரை வீட்டிலேயே படிக்க வைக்கின்றனர் பெற்றவர்கள். வெளி உலகோடு கலக்க வேண்டும் என 5 வகுப்புக்கு பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் அந்த சிறுவன் எப்படி செட்டில் ஆனான் என்பதை சுற்றி நகர்கிறது படம்.
படத்தின் ஹீரோ சிறுவன் (August - Auggie) க்கு ரொம்பவே தாழ்வு மனப்பான்மை. அம்மா , அப்பா மற்றும் அக்கா என அழகான மற்றும் பாசத்தை பொழியும் குடும்பம். ஆனால் பள்ளியில் செய்யும் கிண்டல் கேலிகளால் ரொம்பவே மனம் நொந்து போகிறான்.
தனது குடும்பம் மற்றும் கிடைத்த ஒரு நண்பன் துணையுடன் எவ்வாறு இதை கடந்து வந்தான் என்பதை பாஸிட்டிவ்வாக சொல்கிறது படம்.
Julia Roberts மற்றும் Owen Wilson இருவரும் பெற்றோர்களாக அருமையான நடிப்பு.
நிறைய கண்கலங்க வைக்கும் காட்சிகள் உள்ளன. தாரளமாக குடும்பத்துடன் பார்க்கலாம் ..
IMDb Rating : 8.0
Director: Stephen Chbosky
Cast: Jacob Tremblay, Julia Roberts, Owen Wilson, Izabela Vidovic, Mandy Patinkin, Noah Jupe, Bryce Gheisar, Danielle Rose Russell, Daveed Diggs, Nadji Jeter
Screenplay: Stephen Chbosky and Steven Conrad and Jack Thorne, based on the novel by R.J. Palacio
Cinematography: Don Burgess
Music: Marcelo Zarvos
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக