முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

[Non Movie Post]Turning Point in my Professional Career

வாய்ப்புகள் எங்க எப்படி வரும்னு தெரியாது . நமக்கு ஏதாவது நல்லது நடக்கனும்னு விதி இருந்தால் அந்த வாய்ப்பு நம்ம முதுகுல ஏறி உக்காந்துக்கிடும். அத கரெக்டா யூஸ் பண்ணிட்டா நம்ம லைஃப் டோட்டலா சேஞ்ச் ஆகிடும். சந்தர்ப்ப சூழ்நிலை use பண்ண வைக்கும்.

அந்த மாதிரி என்னோட IT career ல நடந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கையை மாத்துச்சு அத பத்தி பாக்க போறோம். 

IT ல டெக்னாலஜி மாறணும்னு நெறய பேரு நினைப்பார்கள் . ஆன ஒரு பயம் இருக்கும் புது டெக்னாலஜிய இருக்கே நம்மால சமாளிக்க முடியுமா என்று.  அந்த பயத்தை என்னோட அனுபவம் கொஞ்சம் குறைக்கும்னு நினைக்கிறேன்.

2015 - ஆம் வருடம் ஹைதராபாத்ல ஒரு கம்பெனில PHP ல வேலை பார்த்துட்டு இருந்தேன். 8 வருட அனுபவம் அந்த டைம்ல‌ .  ஒரு பிரச்சினைல கிளையண்ட் ப்ராஜெக்ட்ட கேன்சல் பண்ணிட்டு போய்ட்டான்.

கிட்டத்தட்ட ஒரு 40 பேரு அந்த ப்ராஜெட்ல ... எல்லாரும் 6+ வருட அனுபவம் கொண்ட சீனியர்ஸ்.அடுத்த நாள் எல்லாரும் மொத்தமா பெஞ்ல. 

எப்ப எவன ஃபயர் பண்ணுவாங்கனு தெரியாது . செம பயத்துல இருந்தோம்.

ஒரு நாள் எங்க VP அது ரூம்குள்ள கூப்பிட்டாங்க. சரி சோலி முடிஞ்சதுனு நினைச்சுட்டு உள்ள போய் உக்காந்தேன். 

அவங்க செம bold ஆன லேடி. அவங்க எடுக்குற முடிவுகள் எல்லாம் யாரும் எதிர்பாராத விதமாக இருக்கும். 

புதுசா ஒரு ப்ராஜெக்ட் கிடைக்க போகுது அதுல 4 Position Open இருக்கு அதுல உங்களுக்கு ஒரு position இருக்குனு சொன்னாங்க.

சரி மேடம் என்ன Position னு கேட்டேன். 

Server Architect, Front End Architect,  Java Lead Developer, DevOps Architect . 

நான் தலைய சொறிஞ்சுகிட்டே இதுல எதுவுமே எனக்கு தெரியாதே அப்படினு சொன்னேன் . 

அது சிம்பிளா பதில் சொன்னாங்க. 4 Position ல எத வேணாலும் Choose பண்ணிக்கோ இல்லாட்டா வெளில கிளம்ப ரெடி ஆகிக்கோனு .


கொஞ்சம் டைம் கொடுங்க யோசிச்சு சொல்றேனு சொன்னேன். இல்லை இல்லை உடனே சொல்லுனு டார்ச்சர். 

3 position க்கு ஆள் தேத்திடுவேன் ஆன DevOps க்கு தான் ஆள் இல்லை .நீ DevOps process நேத்து வரைக்கும்  யூஸ் பண்ணிட்டு இருந்தேல அதுனால DevOps Architect position எடுத்துக்கோனு கொடுத்துட்டாங்க.  

இது போக புதுசா வரப்போற ப்ரோஜக்ட் Python language வைச்சு பண்ணப் போறாங்கனு ஒரு புரளி. 

உங்களுக்கு Python தெரியுமானு கேட்டாங்க.. மறுபடியும் திரு திருனு முழிச்சேன். உங்க Resume எனக்கு உடனே  அனுப்பிட்டு திரும்ப வாங்கனு சொல்லி அனுப்பி விட்டுட்டாங்க.

நானும் Resume update பண்ணி அனுப்பிட்டு உள்ள போனேன் ‌.  லேப்டாப்ல ஓபன் பண்ணி பார்த்துட்டு இருந்தாங்க. இங்க வாங்கனு கூப்டு PHP னு போட்ருந்த இடத்த புல்லா Python னு replace பண்ணிட்டாங்க. 

இன்னும் DevOps க்கு நிறைய resume ல  சேர்க்க வேண்டியது இருக்கு அத நானே பார்த்துக்கிறேனு சொல்லிட்டாங்க.

உங்களுக்கு 2 Weeks டைம் இருக்கு எல்லாத்தையும் நல்லா prepare பண்ணிக்கோங்கனு அட்வைஸ் வேற. 

மேடம் க்ளையன்டுக்கு resume அனுப்புறப்ப எனக்கும் ஒரு CC போடுங்கனு சொல்லிட்டு மரண பயத்தோடு வெளில வந்தேன். 

ஒரு வாரம் புயலுக்கு முன் அமைதிங்ற மாதிரி இருந்துச்சு. 

மறுபடியும் VP கால் பண்ணி கூப்டாங்க. 

இப்ப என்னத்த கெளப்ப போகுதோனு உள்ள போனேன். பாஸ்போர்ட் வைச்சுருக்கியானு கேட்டாங்க .. இருக்குனு சொன்னேன். நாளைக்கு பாஸ்போர்ட் எடுத்துட்டு வா உனக்கு B1 விசா ப்ராஸஸ் பண்ணணும்னு சொல்லிட்டு நீங்க படிக்கிற வேலைய பாருங்கனு அனுப்பி விட்டுட்டாங்க.

எனக்கு என்ன பண்ணணு தெரியாமல் பெரிய குழப்பத்துல இருந்தேன் ‌‌.  என்ன வேண நடக்கட்டும்னு பாஸ்போர்ட்ட கொடுத்துட்டேன் ‌‌ .

அடுத்தது விசா இன்டர்வியூ மற்றும் அமெரிக்க பயணம்... நிறைய டைப் பண்ணிட்டேன். தொடரலாமா ?  

பார்ட் - 2  B1 - விசா அலப்பறைகள்

ஒரு 2 நாள் கழிச்சு B1 visa apply பண்ணுற  வெப்சைட் கொடுத்து தகவல்களை நிரப்பி Appointment வாங்க சொன்னாங்க. 

இதுக்கு நடுல இந்த மாதிரி விசா சம்பந்தமான விஷயங்களை கவனிக்க உள்ள டிபார்ட்மெண்ட்டில் இருந்து அழைப்பு வந்தது. 

அங்க  போனா Visa interview ல அப்படி பேசு , இப்படி பேசு , அத சொல்லாத , இத சொல்லாதனு கிளாஸ் எடுக்குறானுக. 

நான் என்னமோ கம்பெனி மூலமா போறதால ஈஸியா போய்டலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆன இவனுக கிளப்புனுதுல செம பீதி ஆகிருச்சு. 

விசா இன்டர்வியூ நாளும் வந்தது. விசா இன்டர்வியூ நடக்குற எடத்துக்கு உள்ள போன நச நசனு அவ்வளவு பேர் இருக்கானுக. அதுல பாதி பேருக்கு மேல் மாணவர்கள். 

நான் interview counter பக்கத்துல போய் வரிசைல நின்னேன். எனக்கு முன்னாடி 5 பேர் நின்னாங்க. 

உள்ள ஒரு கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்க லேடி தான் இன்டர்வியூ எடுக்குது. வீட்டுல எதுவும் சண்டையானு தெரியலை செம கோபத்துல இருந்தாங்க. 

5 அடி உள்ள தள்ளி உக்காந்து Mic la தான் நம்ம கிட்ட பேசுவாங்க. 

முன்னாடி போன நாலு பேர்ட்ட என்ன பேசுச்சுனு சரியா கேட்கல ஆன விசா rejected னு மட்டும் அவனுக மூஞ்சிய பார்த்தாலே தெரிஞ்சது. 

எனக்கு முன்னாடி உள்ளவன் போய் நின்னான். நான் அவனுக்கு பின்னாடி நின்றதால அவர்கள் பேசுவது கேட்டுச்சு. 

Interviewer: You graduated from which college? 

That Young man: I finished Electrical and Electronics Engineering and got 65% . 

Interviewer: Better Luck next time னு பாஸ்போர்ட்ட தூக்கி போட்டாங்க.

என் மைன்ட் வாய்ஸ் முன்னாடி போன 5 பேரும் அவுட்... நமக்கு மட்டுமா இந்த ஆத்தா கொடுக்கப்போகுது.

அடுத்து நான் போய் நின்னு பாஸ்போர்ட் கொடுத்தேன். கம்பெனிய பத்தி  , என்னோட வேலைய பத்தி கேட்டுடாங்க, எதுக்கு போறனு கேட்டாங்க ( இந்த மாதிரி கேள்விக்கு நல்லாவே டிரெய்னிங் கொடுத்து இருந்தானுக ) . Ok thank you .. you can leave அப்படினு சொல்லி பாஸ்போர்ட்ட அது ஒரு Drawer la போட்டாங்க அந்த அம்மா.

என்னடா பாஸ்போர்ட்ட கொடுக்க மாட்டேங்கிறாங்க என்ன பண்ணலாம்னு ஒரே யோசனை. அதுட கேட்கவும் பயம். சரின்னு வந்துட்டேன். 

அப்புறம் தான் HR சொன்னான் பாஸ்போர்ட்  வாங்கி வச்சுக்கிட்டா விசா கொடுக்க ரெடி ஆகிட்டாங்கனு அர்த்தமாம்.

ரெண்டு நாள்ல அவனுக ஆபீஸ் போய் பாஸ்போர்ட் வாங்கி விசாவை பார்த்ததும் ஒரு பயம் கலந்த சந்தோஷம். அந்த உணர்வை எப்படி சொல்றதுன்னு தெரியல. 

விசா வாங்கிட்டு நேர VP ரூம்க்கு போனேன். அவங்க வெரி குட் அப்படினு சொல்லிட்டு அடுத்த அணுகுண்டு போட தயாரானாங்க.

அடுத்து நடந்த கூத்துக்களை இன்னொரு த்ரெட்ல போடுறேன். சேர்ந்தாப்புல டைப் பண்ண முடியல. 


Part 3 : க்ளையன்ட் ஆபீஸ் சமாளிப்பிகேஷன்ஸ்

Python & DevOps concepts எல்லாம் 2 வாரம் படிச்சுட்டு இருந்தேன். 

ஒரு நாள் கூப்புட்டு Hyderabad - San Francisco via Dubai ஃப்ளைட் டிக்கெட்ட கைல கொடுத்தாங்க. 

மொத்தம் 4 பேர்  கிளம்புனோம். 3 Architect + எங்கள மேய்க்க மற்றும் ஏதாச்சும் சொதப்புனா சமாளிக்க ஒரு மேனேஜர். 

இதுல என்னனா நான் மட்டும் தான் எனக்கு சம்பந்தமே இல்லாத டெக்னாலஜிக்காக போறேன். மத்த 2 பேரும் அவங்க டெக்னாலஜில வெய்டான பசங்க ‌‌ . 

கிளம்புறதுக்கு முன்னாடி VP மேடம்ட சொல்லிட்டு வரலாம்னு போனேன். 

மத்த ரெண்டு பேரையும் பத்தி எனக்கு கவலையில்லை ஆனா உங்க மேல தான் கொஞ்சம் டவுட்டா இருக்கு. 

ஆனால் உங்க மேல தப்பு எதுவும் இல்ல போல்டா பேசுங்க தெரிஞ்சத பண்ணுங்க பார்த்துக்கலாம் அப்படினு நம்பிக்கையா பேசி அனுப்புனாங்க. 

US ல போய் என்ன பண்ணணும் நேரடியாக வேலை பாக்க சொல்லுவார்களா என்று கேட்டேன். 

அதற்கு அவங்க சொன்ன பதில் "தெரியாது". நீங்க கிளம்புங்க அங்க லேண்ட் ஆகுறதுக்கு உள்ள என்ன Assignment னு நான் inform பண்ணுறேனனு சொல்லிட்டாங்க. 

எங்க மேனேஜர் துபாய்ல இருந்து SFO ஃப்ளைட் ஏறுன அப்புறம் அடுத்த குண்ட தூக்கி போட்டான். 

க்ளையண்ட் ஒரு Start up அதுல முக்கியமான Stakeholders 4 பேர். அவங்க நாலு பேரும் நம்ம நாலு பேரையும் தனித்தனியா இண்டர்வியு பண்ணிட்டு திருப்தியா இருந்தா தான் ‌ Project Agreement Sign பண்ணுவாங்கனு. 

எனக்கு ப்ளைட்ல பேதி புடுங்காதது மட்டும் தான் மிச்சம். நம்மளாள புராஜெக்ட் கிடைக்காம போனா என்ன நடக்கும் என்கிற ஒரே எண்ணம் தான் என் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது.

Sunnyvale என்கிற ஊர்ல தான் ஆபீஸ்‌.‌ Mariott hotel ல ரூம் போட்டு இருந்தாங்க. திங்கள் கிழமை காலைல க்ளையண்ட் ஆபீஸ் கிளம்பி போனோம். 

மேனேஜர் சொன்ன மாதிரி 4 பேர் இருந்தாங்க.

1 - CFO - 45 வயது இருக்கும், முஸ்லிம் பாய் .. Bangladesh காரர் US ல செட்டில்டு. செம காசு பார்ட்டி. 

2 - குஜராத்தி 35 வயசு இருக்கும் . Data Scientist + Doctorate .. Python - ல ரெண்டு புக் எழுதி Amazon la வித்துகிட்டு இருக்காராம்.

3 - Distinguished Architect - ஒரு China  தாத்தா எப்படியும் ஒரு 60 வயசுக்கு மேல இருக்கும். நான் பொறந்த 1984 வது வருஷம் Doctorate வாங்கிருக்காப்ல. இவரு தான் அந்த ப்ராஜெக்ட்க்கு மூளை .

4 - ஒரு 40 வயசு Ireland நாட்டை சேர்ந்தவரு. மார்க்கெட்டிங் முழுவதும் இவரு கண்ட்ரோல். 

நமக்கு தான் நேரம் சூப்பரா இருக்குமே .. முதல் இண்டர்வியு Python +  Data Scientist கூட.

VP மேடம் PHP to Python replace பண்ணுனது தான் ஞாபகம் வந்தது. 

ஆன இண்டர்வியுல கொஞ்சம் high-level la Python  + Web application Architecture தான் கேட்டாங்க.  Mostly answer பண்ணிட்டேன் நான் சுத்தி சுத்தி DevOps பத்தி பேசுனா அவரு Python சைடு போனாரு. எப்படியோ 30 நிமிஷம் ஓட்டிட்டேன். கொஞ்சம் சொதப்புனாலும் ரொம்ப சேதாரம் இல்லை. 

CFO மற்றும் Marketing ரெண்டு பேரும் ரொம்பவே high level discussion .. technical ல போகவில்லை. 

கடைசியா பெரிய தலை சைனா தாத்தா. .

அவரும் இப்ப உள்ள ப்ராஜெக்ட் ஓட CI/CD pipeline, Deployment plan பத்தி தான் கேட்டாரு. அது நமக்கு அத்துப்படி so problem இல்லாமல் நல்லாவே போச்சு.  

எல்லாரும் இண்டர்வியு முடிக்க 6 மணி ஆகிருச்சு. அப்புறம் ஒரு 30 நிமிஷம் அந்த 4 பேரும் பேசுனாங்க.   

6.30 க்கு மேல எல்லாரையும் கூப்டு CFO பேச ஆரம்பித்தார். மேனேஜர் வேற குறு குறுனு பார்த்து முறைச் சுட்டு இருந்தான். 

கடைசியா CFO "We satisfied with the discussions and signing off the project அப்படினு சொல்லி முடிச்சார். 

எல்லாரும் செம ஹாப்பி... நான் தான் இருக்குறதுலயே ரொம்ப சந்தோஷமா இருந்தேன். CFO ரொம்ப நல்லவர் .. Let's go to party னு ஒரு Bar'ku கூட்டிட்டு போய் பீர் வாங்கி குடுத்தாரு. 

நல்லா பீர் குடிச்சுட்டு கிட்டத்தட்ட 2  மாசத்துக்கு பிறகு ஒரு நிம்மதியான தூக்கம் தூங்குனேன்.

இதுக்கு அப்புறம் நடந்த பெரிய காமெடி எனக்காக சைனா தாத்தாவும் , அந்த Data Scientist ம் மேனேஜர் கிட்ட  சண்டை போட்டு இருக்கானுக. 

தாத்தா DevOps க்கு இவன் எனக்கு வேணும்னு சொல்ல , இன்னொருத்தர் அவன் நல்ல Python resource so எனக்கு தான் வேணும்னு சண்டை. 

இத ஒரு டைம் சரக்கடிக்கிறப்பா மேனேஜர் சொன்னான். என்னால சிரிப்பை அடக்க முடியலை. 

ஆன அப்ப முடிவு பண்ணினேன் இவனுகளையே சமாளிச்சாச்சு ஒரு கை பார்த்து விடுவோம் என்று. 

எல்லாரும் 2 Weeks trip தான் போனோம். ஆனா நான் கொடுத்த ஒரு Presentation ல (என்ன பண்ணுவது என்று தெரியாமல் வேற வழி இல்லாம பண்ணுனது) சைனா தாத்தா என் ட்ரிப்ப 2 மாசத்துக்கு extend  பண்ண சொல்லிட்டார்.  மத்த எல்லாரும் கிளம்பி விட நான் மட்டும் Solo Performance கொடுத்தேன் 2 மாசம் ‌‌

அந்த சைனா தாத்தா எப்படி impress ஆனாருனு, தியரி knowledge மட்டும் வைத்துக் கொண்டு எப்படி 2 மாசம் Survive பண்ணுனேன் என்பதை பற்றி கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு த்ரெட் போடுறேன்.  ரொம்ப length 'a போய்ட்டு இருக்கு..Part -4 


ஒரு வழியா புரோஜக்ட் confirm ஆகிடுச்சு. Weekend 'la ஒரு நாள் San Francisco டூர் எல்லாம் போய்ட்டு வந்துட்டு.. Sunday எங்க மாமா வீடு பக்கத்துல San Jose ல இருக்கு. அங்க போய் நல்லா மூக்கு பிடிக்க தின்னுட்டு Sunday night ரூம்ல வந்து படுத்தாச்சு. 


நாளைக்கு திங்கள் கிழமை ஆச்சே ஆபீஸ்ல போய் என்ன பண்ண என்கிற மிக பெரிய கேள்விக்குறி . நைட்டு தூக்கமே வரல.


அடுத்த நாள் ஆபீஸ் போயாச்சு. சைனா தாத்தா மத்த ரெண்டு பேரையும் கூப்டுட்டு Discussion room உள்ள போய்ட்டாரு. 


1 மணி நேரம் கழிச்சு வெளில வந்தானுக. ஒரு சின்ன POC பண்ணனும்னு சொல்லிட்டு. 2 பேரும் லேப்டாப் உள்ள தலைய விட்டானுக. அடுத்து நம்மள கூப்புடுவாருனு பார்த்தா கூப்டவே இல்லை. அன்னிக்கு முழுவதும் என்கிட்ட ஒன்னுமே கேட்கல. 


நைட் ஆனதும் மத்த 2 பேரும் ஹைதராபாத் ஆபீஸ்ல ஜீனியர் டெவலப்பர்கள் வந்ததும் ஒரே கால் தான்.


நான் என்ன பண்றதுன்னு தெரியாம ஹோட்டல் வந்தா ரிஷப்சன் பக்கத்துல ஒரு குட்டி பாரை போட்டு சரக்கு சப்ளை பண்ணிட்டு இருக்கானுங்க. என்னடானு கேட்ட டெய்லி சாயந்தரம் 6 to 8 Happy Hours ஆம் சரக்கு , Wine , Side dish எல்லாம் Free Free. நல்ல சரக்கு அடிச்சுட்டு பசங்க நல்ல சமைச்சானுக சாப்டுட்டு தூங்கியாச்சு.


இரண்டாவது நாள் மறுபடியும் ஆபீஸ் போனேன். அன்னிக்கும் யாரும் கண்டுக்கவே இல்லை. மேனேஜர்ட போய் கேட்டா எனக்கும் தெரியலப்பா ஏதாச்சும் பண்ணுடானு சொல்லிட்டாங்க ‌‌


மத்த ரெண்டு பேரும் எப்ப பார்த்தாலும் லேப்டாப்ல மண்டைய உட்டு வேலை பாத்துக்கிட்டே இருக்கானுங்க.. 


அத பார்த்தா தான் எனக்கு ரொம்பவே பீதி..

சரின்னு வேற வழி இல்லாம PPT open பண்ணி நான் அதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில இருந்த CI/CD  செட் அப் மற்றும் Architecture - ஐ படமா போட்டு தேவையான இடத்துல கலர் எல்லாம் கொடுத்து ரெடி பண்ண ஆரம்பித்தேன். 


ஒரு வழியா அன்றைய நாளும் முடிந்தது. அடுத்த நாள் சைனா தாத்தா லீவ் நமக்கு தான் என்ன பண் ணணு தெரியாதே.. நமக்கு தெரிந்த அந்த Architecture'a Google la search பண்ணி பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து கொஞ்சம் Features எல்லாம் சேர்ந்து வைச்சுட்டேன். 


வியாழக்கிழமை ஒரு வழியா தாத்தா உள்ள கூப்பிட்டார். முதல் கேள்வி 4 நாளா என்ன பண்ற ? 


நான் open'a பேசுறதுனு முடிவு பண்ணிட்டேன். எனக்கு ப்ராஜெக்ட் பத்தி கொஞ்சம் ஐடியா இருக்கு அத வைச்சு CI/CD pipeline மற்றும் Architecture போட்டு வைச்சுருக்கேன்னு சொன்னேன். 


அவரு அப்படியா எனக்கு இப்ப ஒரு மீட்டிங் இருக்கு அத என்னோட Mail க்கு அனுப்புனு சொல்லிட்டு போய்ட்டார். 


வெள்ளிக்கிழமை வந்தது காலையில் முழுவதும் மத்த ரெண்டு பேரோட மீட்டிங் இருந்தது தாத்தாக்கு. அதுக்கப்புறம் எங்க மேனேஜரை கூப்பிட்டு ரொம்ப நேரம் பேசினார்.


எனக்கு வேற பயம் நேத்து வேற டிசைன் ப்ரபோசல் பண்ணிருக்கோம் என்ன ஆச்சோனு. 3 மணிக்கு மேல தாத்தா என்கிட்ட வந்து டிஸ்கஸ் பண்ணலாமா கேட்டாரு. நானும் கெளம்புனேன்.. அந்த CEO வநதாப்ள.. இன்னிக்கு Friday.. Happy Hours between 3 - 6 and nobody allowed to work அப்படினு சொல்லிட்டு ஒரு Beer Case ஆபீஸ்குள்ள கொண்டு வந்தார். 


So அன்னிக்கு பொழுது பீர் ஒடோ போயிருச்சு. அன்னிக்கு நைட் மறுபடியும் ரூம்ல சரக்கு.‌ எங்க மேனேர் கொஞ்சம் போதை ஆனதும் கேட்டான் "நீ அந்த சைனா தாத்தாட்ட என்ன பேசுன? அப்படி என்ன Present பண்ணுனா? "


எனக்கு ஒரே குழப்பம் இவன் நல்லபடியா கேட்குறான இல்லை ஏதாச்சும் பிரச்சினை ஆகி காண்டுல கேட்குறானானு. .. நான் பண்ணுணத சொல்லிட்டு எனக்கு வேற வழி தெரியல பாஸ்னு அவன்ட்ட சரண்டர். 


அதுக்கு மேனேஜர் சொன்னான் டேய் தாத்தாக்கு  உன்னோட அப்ரோச் மட்டும் தான் ரொம்ப பிடிச்சு இருக்காம். மத்த ரெண்டு பேரும் வந்த Architect ரோலை விட்டுட்டு Devoloper மாதிரி Code எழுதிக்கொண்டு இருக்கானுகனு Complaint பண்ணிருக்காரு. 


அதுமட்டுமல்லாமல் உன்னோட டிரிப்ப மட்டும் 2 மாசம் extend பண்ண சொல்லிருக்காரு நாங்க 3 பேரும் அடுத்த வாரம் கிளம்புறோம்னு சொன்னான். மத்த 2 பேர் மூஞ்சிலயும் ஈ ஆடல.. முறைக்கிறானுக.. மேனேஜருக்கு கொஞ்சம் காண்டு தான் எப்படி ஒண்ணுமே தெரியாம வந்து இப்படி செட்டில் ஆனான் என்று. 


அவர்களை என்ன சொல்றது.. எனக்கே என்ன நடக்கிறது என புரியவில்லை.. 

இப்படி எல்லாம் நடந்தா ஒருத்தன் என்ன தான் நினைக்க முடியும். 

ஆனா என்னோட தன்னம்பிக்கை மட்டும் பல மடங்கு உயர்ந்து இருந்தது அன்னிக்கு. 

நமக்கு எதுவும் தெரியாதுனு கூறி குறுகி இருந்ததது போதும் இனிமே எது வந்தாலும் சமாளிச்சுருலாம் என்று முடிவு செய்த நாள்.

Next post கொஞ்சம் டெக்னிக்கல் (CI/CD, DevOps, Docker Containers, AWS, Auto Scaling, JIRA, Bamboo , Git , Bitbucket)  + ப்ராஜெக்ட் சமாச்சாரம் கலந்து 3 மாசம் எப்படி ஓட்டுனேனு சொல்றேன்.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்