Turning Point : 9/11 And The War On Terror tamil review
இது ஒரே மினி டாக்குமெண்டரி சீரிஸ்
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் மற்றும் அதன் பின் விளைவுகளை பற்றிய டாக்குமெண்டரி.
இந்த டாக்குமெண்டரியின் பெரிய ப்ளஸ் என்னவென்றால் அவர்கள் உபயோகித்து இருக்கும் Live Footage , real audio recordings.
தாக்குதல் நடந்த நேரம், இரண்டு கோபுரங்களும் சரியும் தருணம் போன்ற காட்சிகள் நமக்கு இத்தனை வருடங்கள் கழித்தும் அதிர்ச்சி அளிக்கிறது.
உயிர் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்த பின் பேசும் போன் கால்களுடைய ரெக்கார்டிங்ஸ் கேட்கும் போது ரொம்பவே பாவமாக இருக்கிறது.
தொடர் 9/11 பற்றி மட்டும் பேசாமல் எப்படி அமெரிக்காவுக்கும் அல்கொய்தா, தாலிபான்கள் போன்ற அமைப்புகளும் ஏன் உரசல் ஆரம்பமானது.
சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ஆரம்பமாகிறது இந்த உரசல்கள் . 1980 வாக்கில் ரஷ்யாவிடம் இருந்து ஆப்கானிஸ்தானை காப்பாறுகிறேன் என்று அமெரிக்கா உள்ளே நுழைகிறது.
அப்போது தொடங்கி இரட்டைக் கோபுர தாக்குதலை சொல்லி முடிவில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது வரைக்கும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிடுகிறது.
நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். நடுநிலையான டாக்குமெண்டரி என நினைக்கிறேன். பல இடங்களில் அமெரிக்கா எடுத்த முடிவுகள் விமர்சிக்கப்படுகிறது.
அவர்கள் செய்த நல்ல விஷயங்களும் , தேவையில்லாத வகையில் ஈராக் மீது போர் தொடுத்து பற்றியும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
கண்டிப்பாக பாருங்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் .
Available in Netflix
கருத்துகள்
கருத்துரையிடுக