Taylor Sheridan டைரக்ட் பண்ண படம். இவரோட Wind River படம் செம சூப்பரா இருக்கும். இது போக Angelina Jolie வேற இருந்தாங்க அதுனால பார்த்த படம்.
IMDb 6.1
தமிழ் டப் இல்லை.
படத்தோட கதை என்னனா Angelina Jolie ஒரு தீயணைப்பு துறை வீரர் ஒரு தவறான கணிப்பினால் 3 சிறுவர்கள் நெருப்பில் சிக்கி அவர் கண் முன்னே பலியாகின்றனர். இதனால் குற்ற உணர்ச்சியுடன் வாழ்கிறார்.
இன்னொரு புறம் ஒரு Accountant ஊழலை கண்டுபிடிக்கிறார். அதனால் அவரையும் அவரது மகனையும் கொல்ல முயற்சி செய்கின்றனர் 2 Hi tech அடியாள்கள்.
அப்பாவும் மகனும் தப்பி அவரது சொந்தக்காரர் ஒருவர் போலீசாக உள்ள ஊருக்கு வருகிறார்கள். அந்த ஊரில் தான் Angelina Jolie யும் வேலை பார்க்கிறார். இந்த அடியாட்களும் மோப்பம் பிடித்து அங்கு வருகிறார்கள்.
இப்ப நீங்க guess பண்ணிருப்பீங்க என்ன நடக்க போகிறது என்று.
அப்பாவும் மகனும் தப்பினார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் நல்லா தான் இருக்கு. ஆனால் அடுத்து என்ன நடக்கும் என கொஞ்சம் guess பண்ணிடலாம்.
Punisher போலீசாக வருகிறார். GOT ல வர்ற Little Finger செம வில்லத்தனம்.
காட்டுத்தீயை படத்துக்கு ஏத்த மாதிரி நல்லா யூஸ் பண்ணிருக்காங்க.
செம டைம் பாஸ் படம். கண்டிப்பாக பார்க்கலாம்.
Amazon Prime Video வில் உள்ளது.
DM for download link.
கருத்துகள்
கருத்துரையிடுக