பெரும்பாலான ஹாரர் பட பிரியர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள். இல்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள்.
IMDb 6.5
தமிழ் டப் இல்லை.
மகளை கற்பழித்தவனை பழி வாங்கும் பெற்றோர்களை பற்றிய படம்.
அப்பா, அம்மா மகள் என மூன்று பேரும் காட்டுக்கு நடுவில் ஏரியின் அருகில் இருக்கும் தங்களது Vacation home க்கு வருகிறார்கள். டீன் ஏஜ் மகள் தனது நண்பியை பார்க்க பக்கத்துல இருக்க சின்ன ஊருக்கு போகிறாள்.
போன இடத்தில் ஜெயிலில் இருந்து தப்பித்த ஒரு கொடூரமான சைகோ மற்றும் அவனது கூட்டத்திடம மாட்டிக் கொள்கிறாள்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்களுக்கே தெரியாமல் கற்பழித்த பெண்ணின் வீட்டிலேயே தங்க நேரிடுகிறது.
ஒரு கட்டத்தில் தங்கள் பெண்ணை கற்பழித்த கூட்டம் இது தான் என பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது.
அப்புறம் என்ன பெற்றோர்கள் இந்த கூட்டத்தை வீட்டுக்குள் வைத்து குமுறுவதற்கு ப்ளான் பண்றாங்க.
கடைசியில் யார் யார் உயிரோட இருந்தாங்கனு படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நல்ல ஹாரர் திரில்லர்.. கண்டிப்பாக பாருங்கள்..பாலியல் வன்முறைக்காட்சிகள் , வெட்டு குத்து என வன்முறை அதிகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக