செம சென்டிமென்ட் படம். கண்டிப்பா அழ வச்சுருவாங்க. சிறுவயதில் தன் குடும்பத்தை பிரிந்த ஹீரோ 25 வருடங்கள் கழித்து மீண்டும் தன் குடும்பத்தை தேடி கண்டுபிடிப்பதை பற்றிய படம்.
IMDb 8.0
தமிழ் டப் இல்லை.
படத்தோட ஆரம்பத்தில் ஒரு குக்கிராமம் காட்டப்படுகிறது. சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரு சகோதரர்கள் உள்ளனர்.
அண்ணன் பக்கத்தில் உள்ள ஊருக்கு வேலைக்கு போறேன் என கிளம்ப தம்பியும் கூட கிளம்புகிறான்.
ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள்.
தமபி தெரியாமல் ஒரு ட்ரெயினில் ஏறிவிட அது கொல்கத்தாவில் இவனை கொண்டு சேர்க்கிறது. சிறுவனுக்கு பெங்காலி பேசத் தெரியாது அது போக தன் ஊரின் பேரையும் தப்பாக சொல்ல ஒரு அரசு அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பப்படுகிறான்.
ஆஸ்திரேலிய தம்பதி இவனை தத்து எடுத்துக் கொள்ள ஆஸ்திரேலியா பயணமாகிறான்.
25 ஆண்டுகள் முன்னே போகிறது படம். ஹீரோ பெரியவன் ஆகி ஆஸ்திரேலியாவில் காலேஜில் படிக்கிறான்.
ஒரு சின்ன நிகழ்வு இவனது குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது. தனது குடும்பத்தை சந்திக்க வேண்டும் நினைக்கிறான். ஊர் பேரும் தெரியாமல் எந்த மாநிலம் என்றும் தெரியாமல் தனது தேடலை தொடங்குகிறான்.
தனது ஊரை எப்படி கண்டுபிடித்து குடும்பத்தை சந்தித்தான் என்பதை உணர்வு பூர்வமாக சொல்கிறது படம்.
நல்ல எமோஷனலான படம். முதலில் காட்டப்படும் இந்திய போர்ஷனில் எல்லாரும் நன்றாக நடித்துள்ளார்கள். அதுவும் தம்பியாக வரும் சிறுவன் கலக்கி இருக்கிறான். எனக்கு தெரிந்து இதுதான் படத்தின் முக்கியமான பகுதி. இதுவே படத்திற்கான டோனை செட் பண்ணுகிறது.
உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது .
Nicole Kidman - தத்து எடுக்கும் அம்மாவாக வருகிறார். நல்ல நிறைவான நடிப்பு .
ஹீரோ Dev Patel மற்றும் அவரது லவ்வராக Rooney Mara நடித்து இருக்கிறார் .
நம்ம ஊர்வசி ஊர்வசி பாட்ட கூட ஒரு இடத்துல யூஸ் பண்ணிருக்காங்க.
https://youtu.be/kECFmvKVXKo
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அருமையான படம்.
கண்டிப்பாக பாருங்கள்.
Highly Recommended 🔥🔥🔥🔥
Director: Garth Davis
Cast: Dev Patel, Rooney Mara, Nicole Kidman, David Wenham, Sunny Pawar, Abhishek Bharate, Pryanka Bose
Screenplay: Luke Davies, adapted from the book “A Long Way Home” by Saroo Brierley
Cinematography: Greig Fraser
Music: Volker Bertelmann, Dustin O’Halloran
கருத்துகள்
கருத்துரையிடுக