I Origins - 2014 - Movie Review In Tamil
இது ஒரு Sci Fi ,Drama படம். ரொம்பவே மெதுவா போற படம். ஆனா எனக்கு பிடிச்சது. கடைசி 30 நிமிஷம் படம் டெல்லில நடக்கும்.
IMDb 7.4
தமிழ் டப் இல்லை
ஹீரோ கண்ணை பத்தி ஆராய்ச்சி பண்ணுற ஒரு சயின்ட்டிஸ்ட். கண் இறைவனால் படைக்கப்பட்டது இல்லை பரிணாம வளர்ச்சியால் உருவானது என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க முயற்சி செய்கிறார்.
இவருக்கு ஒரு லவ்வர் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்து விடுகிறார். இவரும் கொஞ்ச நாள் சோகமா இருக்கார்.
அப்புறமா அவருடைய லேப் அசிஸ்டன்ட்ட கல்யாணம் பண்ணிட்டு குழந்தைனு செட்டில் ஆகிவிடுகிறார்.
7 ஆண்டுகள் கழித்து ஒரு சமயத்தில் பழைய காதலியின் கண் டெல்லியில் ஸ்கேன் செய்த ஒரு கண்ணோடு ஒத்துப் போவதை ஏதாச்சையாக கண்டுபிடிக்கிறார்.
அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் இவனுடைய இவ்வளவு நாள் நம்பிக்கையை or அவருடைய தியரியை மாற்றும் வகையில் இருக்கிறது அது என்ன என்பதை படத்தில் பாருங்கள்.
நல்ல Engaging ஆன கதை மற்றும் திரைக்கதை. க்ளைமேக்ஸ் அருமை. ஆனால் படத்தில் ஒரு Closure இருந்த மாதிரி தெரியவில்லை.
Slow but good film.. Worth watching 👍👍
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக