இது ஒரு டாக்குமெண்டரி. Night Stalker என பட்டப்பெயர் இடப்பட்ட Richard Ramirez எனும் கொடூர கொலைகாரனை கண்டுபிடித்ததை பற்றியது.
இந்த டாக்குமெண்டரி பற்றி பார்க்கும் முன் இந்த Richard Ramirez பற்றி பார்க்கலாம்.
1960 ஆம் வருடம் பிறந்த இவனின் குழந்தைப் பருவம் அவ்வளவு நன்றாக அமையவில்லை. குடிகார தந்தை , வன்முறை குணம் மிகுந்த Cousin என கொடூரமான சூழ்நிலையில் வளர்ந்து இருக்கிறான். 15 வயதில் போதைப் பொருட்கள் உபயோகிக்க ஆரம்பித்து உள்ளான்.
முதலில் கொன்றது 1984 வந்து வருடம் ஒரு 15 வயது சிறுமியை. இதிலிருந்து இவனுடைய அட்டூழியம் 1 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து உள்ளது.
June 1984 - August 85 க்கு நடுவே 13 கொலைகள், 5 கொலை முயற்சிகள், 11 கற்பழிப்புகள், 14 திருட்டுகள் போன்ற வழக்குகள் இவன் மேல் பதியப்பட்டுள்ளது. இது official record ல் இருப்பது மட்டுமே. நிறைய சம்பவங்களை இவன் பண்ணி இருக்கலாம் ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் Ramirez கணக்கில் வரவில்லை.
இவன் கொலை செய்பவர்களை எந்த காரணமும் இல்லாமல் Random ஆக தேர்ந்தெடுத்து கொன்று உள்ளான். இதனால் போலீசாருக்கு பெரிய தலைவலியை கொடுத்து உள்ளான் அந்த காலகட்டத்தில். அது மட்டுமல்லாமல் துப்பாக்கி, கத்தி, கோடாரி, பெரிய ஷைஸ் கத்தி என எல்லாவற்றையும் ஆயுதமாக பயன்படுத்தி உள்ளான்.
கடைசியில் 1989 வது வருடம் இவனுக்கு 19 மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனால் தண்டனைக்கு முன்னமே 24 வருடங்கள் தண்டனைக்கு காத்திருந்து உடல் நிலை சரியில்லாமல் 2013 ஆம் வருடம் இறந்து விட்டான்.
தண்டனை விதித்த நீதிபதி இவன் செய்த குற்றங்கள் மிகவும் கொடூரமானது ஒரு இயல்பான மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டது என கூறியுள்ளார்.
மறுபடியும் இந்த டாக்குமெண்டரிக்கு வருவோம். இந்த வழக்கை விசாரித்த 2 அதிகாரிகளின் பார்வையில் நகர்கிறது .
இது தவிர அவனது தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் பேட்டி என தொகுத்து இருக்கிறார்கள்.
தீரன் அதிகாரம் ஒன்றில் கைரேகையை மட்டும் வைத்துக் கொண்டு போராடுவார்கள். இதில் ஷீ பதிந்த தடம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு போராடுகிறார்கள்.
நல்ல டாக்குமெண்டரி . சீரியல் கில்லர், க்ரைம், டிடெக்டிவ் படங்கள் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக