முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Boss Level - 2021

இது ஒரு Sci Fi + Time loop Concept படம்.

கொஞ்சம் Comedy + நிறைய Action. 

படம் பார்த்தற்கான காரணங்கள். 

Mel Gibson, Naomi Watts and Time Loop concept. 

படத்தை பத்தி முடிஞ்ச வரைக்கும் ஸ்பாய்லர் இல்லாம கொஞ்சமா சொன்னா படம் பாக்க ஆர்வமா இருக்கும்னு நினைக்கிறேன் ‌‌. 

ஹீரோ ஒரு முன்னாள் ராணுவ வீரன்.. காலைல தூங்கி எந்திரிச்ச உடனே ஒருத்தன் பெரிய கத்திய வைச்சு கொல்ல வர்றான் , அடுத்து ஹெலிகாப்டர்ல வந்து ஒருத்தன் சுடுறான் , அடுத்து கார் சேஸிங் இப்படியே ஆறு ஏழு பேர் விதவிதமா கொல்ல வர்றாங்க.  யாராவது ஒருத்தர்ட மாட்டி செத்து போறான் ஹீரோ. 

இதே time loop ல 140 தடவைக்கு மேலே வாழ்ந்துட்டேன் ஆனா எப்படியாவது கொன்னுடுறானுக .. ஏன் நடக்குது எப்படி நடக்குது என்ற அவனுக்கே தெரியவில்லை என்கிறான்.

அவனுடைய முன்னாள் மனைவி ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் இந்த மாதிரி டைம் லூப் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  ஹீரோயின் உடைய  பாஸ் தான் Mel Gibson .

ஒவ்வொரு டைம் லூப்லயும் கொஞ்சம் கொஞ்சமா improve பண்ணி தனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? யார் இதற்கு காரணம் என்பதை ஆக்ஷன் + காமெடி கலந்து சொல்கிறது படம். 

Edge Of Tomorrow , Kill bill என எல்லாவற்றையும் கலந்து கட்டி fresh'a ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார்கள். 

கொலையாகி சாகப்போறதையே காமெடியாக ஆக்கி விட்டார்கள். 


Mel Gibson and Naomi Watts க்கு ஒன்றும் பெரிய அளவில் ரோல் இல்லை. ஹீரோ தான் படம் ஃபுல்லா வராரு. 

ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகள் செம சூப்பர். 

சில காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவா போகுது. But overall நல்ல டைம் பாஸ் படம். 

கண்டிப்பாக பாருங்கள். 

IMDb Rating : 6.8

தமிழ் டப் இல்லை. 

OTT ல் இருப்பது போல் தெரியவில்லை. 

DM for Telegram download link. 


Directed by:

Joe Carnahan


Screenplay by: 

Chris Borey

Eddie Borey

Joe Carnahan


Story by: 

Chris Borey

Eddie Borey


Starring: 

Frank Grillo

Mel Gibson

Naomi Watts

Annabelle Wallis

Ken Jeong

Will Sasso

Selina Lo

Meadow Williams

Michelle Yeoh

Cinematography

Juan Miguel Azpiroz


Edited by:

Kevin Hale


Music by: 

Clinton Shorter
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்