முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாம்பிகள் சூழ் உலகு

ஜாம்பிகள் சூழ் உலகு - Zombie Movies Tamil Review 


என்னைப் பொருத்தவரை ஜாம்பி படங்கள் Horror Genre படங்களில் முக்கியமான ஒன்று  . உயிர் இல்லாத ஜந்துக்கள்,  கற்பனையான ஒன்று  மற்றும் அதுக்குன்னு ஒரு behaviour இல்லாததால் இயக்குனர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றம் செய்து விறுவிறுப்பான படங்களை கொடுப்பார்கள். 


ஜாம்பி படங்களில் பொதுவாக சில எழுதப்படாத விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக ஜாம்பி கடித்தாலோ இல்லை அதன் ரத்தம் பட்டாலோ பாதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்தில் ஜாம்பியாக மாறிவிடுவார்கள், மூளையில் சுட்டாலும் அல்லது குத்தினாலும் ஜாம்பி செயல் இbழந்து விடும்.


பெரும்பாலான ஜாம்பி படங்கள் Survival வகையான திரைப்படங்களாக தான் இருக்கும்.  இந்த படங்கள் பெரும்பாலும் இரத்தக் களரி மற்றும் கொடூரமாக தான் இருக்கும். 


இந்த த்ரெட்டில் ஜாம்பிகளை மையமாக கொண்டு வந்த திரைப்படங்களை பார்க்கலாம். நான் குறிப்பாக டைம் லைனை பின்பற்றவில்லை  எனக்கு எந்த எந்த படம் ஞாபகம் வருதோ அப்படியே எழுதுகிறேன். 


மேலும் த்ரேட்டின் நீளத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு படத்தை பற்றியும் 2 வரிகள் தான் எழுதி உள்ளேன். 


முதலில் நான் பார்த்த Zombie படம் Resident Evil.  இந்த படத்துல இருந்து தான் Zombies படம் மேல ஒரு ஈர்ப்பு. 


இந்த படத்தை பத்தி ரொம்ப சொல்ல தேவையில்லை. 

ஒரு Lab - ல ஆராய்ச்சில நடக்குற சின்ன விபத்துல வைரஸ் வெளிய வந்துரும். இந்த வைரஸ் தாக்குமா Zombie ஆ மாறிடுவாங்க. அதை தடுக்க AI பண்ற வேலைகள் தான் படம். 

தொடர்ந்து இதில் பல பாகங்கள் வந்தன. பார்க்கணும்னு நினைச்ச பின்வரும் order ல பாருங்கள். 


Resident Evil (2002)

Resident Evil: Apocalypse (2004)

Resident Evil: Extinction (2007)

Resident Evil: Afterlife (2010)

Resident Evil: Retribution (2012)

Resident Evil: The Final Chapter (2016)



இதுக்கு அப்புறமா ரொம்பவே எனக்கு பிடிச்ச படம்னு பார்த்தா தலைவர் Will Smith நடிச்ச


I am legend  (2007) 

IMDb 7.2 

உலகமே அழிஞ்சு போனதுக்கு அப்புறம் தனி ஆளாக Survive பண்ணி மருந்து கண்டுபிடிப்பார். 

அப்புறம் கொஞ்சம் Zombie படம் தேடி பார்த்ததுல கிடைச்ச ஒரு ஜெம் தான். 


Shaun Of The Dead (2004)

IMDb 7.9



ஜாம்பிகளோட காமெடியும் சேர்த்து செமயா எடுத்து இருப்பார்கள். இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்.


இதே மாதிரி காமெடி கொஞ்சம் , காதல் கொஞ்சம் என்று கலந்து வந்து கலக்கிய படம் தான்

 ZombieLand  (2009) 

இதிலும் அழிந்து போன உலகத்தில் 4 பேர் செய்யும் அட்வென்ட்சர் தான் படம். 


இதோட sequel 

Zombieland: Double Tap  (2019) 

IMDb 6.7 

முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றாலும் இதுவும் நல்லா தான் இருக்கும்.


அடுத்து பார்த்த சீரியஸான படம் பிரபல பிரிட்டிஷ் இயக்குனர் Danny Boyle இயக்கத்தில் வந்து சக்கை போடு போட்ட படம்.


28 Days later  (2002) 

IMDb 7.6

இதுவும் Survival வகையான திரைப்படம் தான். 

இதனுடைய Sequel 

28 Weeks Later (2007) 

IMDb 7.0

First part முடிஞ்ச இடத்துல இருந்து தொடங்கும் இந்த படம். 


Dawn Of The Dead (2004)

IMDb 7.3


இந்த படமும் Survival வகையான திரைப்படம் தான். ஆன இதில் 4 பேர் Shopping Complex ல தஞ்சம் புகுந்து தப்பிப்பது பற்றிய படம். 


Bio Weapon பிரச்சினையால் ஜோம்பியாக மாறியவர்களை எதிர்த்து சண்டை போடும் ஒரு குரூப்பை பற்றிய படம் தான் . 

Planet Terror (2007) 

IMDb 7

லிங்க் கிடைக்கவில்லை. 


இதே மாதிரி படங்களாக பார்த்துக்கொண்டு வருகையில் வித்தியாசமாக Found Footage வகையில் வெளிவந்த ஜாம்பி படம் தான் . 


REC (2007) 

IMDb 7.4


ஒரு அபார்ட்மெண்ட் பில்டிங்குள்ள மெடிக்கல் டீம் உடன் செல்லும் 2 பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்சினை தான் இந்த படம். செம திகிலா இருக்கும். 


இதோட Sequel வந்தது ஆனால் நான் பாக்கல.. 

REC 2 (2009) 

IMDb 6.5

இதை தொடர்ந்து இதனுடைய பல பாகங்கள் வெளிவந்து உள்ளது.


Zombies க்கு உணர்வுகள் இருக்க கூடாதா ? என்று யோசிச்சதனால் வந்த வித்தியாசமான படம் 

Warm Bodies ( 2013) 

IMDb 6.8 

எப்பவுமே Zombies என்றாலே வெறித்து பார்த்துக் கொண்டு மெதுவாக நடக்கும் ஜந்து என்பதை மாற்றி புயல் வேக ஜாம்பிகளை உலகத்திற்கு அறிமுகம் செய்தது கொரியர்கள். 


Train To Busan (2016) 

IMDb 7.6

ஓடும் ரெயிலில் பாதி பெட்டிக்கு மேல் ஜாம்பிகள் . எல்லா ஸ்டேஷனிலும் ஜாம்பிகள் கூட்டம். அதில் பயணம் செய்யும் 5 பேரை பற்றிய படம். ஆக்ஷன் , சென்ட்டிமென்ட் என கலக்கி இருப்பார்கள். 

இந்த படத்தின் பேரை உபயோகித்து பெரும் எதிர்பார்ப்பை கிளமபி தோல்வி அடைந்த படம் 

Train to Busan 2 (2020) 

IMDb 5.5 


இதனை தொடர்ந்து ஒரு அபார்ட்மெண்ட்டில் மாட்டிக்கொண்ட ஹீரோ ஹீரோயின் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு Survival செய்வது போன்ற ஒரு படம் தான் 

#Alive (2020)

IMDb 6.3


பெரும்பாலும் பிரபல ஹீரோக்கள் ஜாம்பி படங்களில் நடிப்பதில்லை என்பதை உடைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் Brad Pitt நடிப்பில் வந்த படம் . 

World WarZ (2013) 

IMDb 7.0 


Heist படத்தையும் Zombie genre யையும் கலந்து கட்டி சமீபத்தில் வந்த படம் . 

Army Of The Dead (2021) 

IMDb 5.8 


படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் ட்ரைலரை பார்த்து மொக்க வாங்கிய படம் ‌‌

 The Dead Don't Die (2019) 

IMDb 5.5 

ஆஸ்திரேலியாவில் இருந்து கொஞ்சம் சென்ட்டிமென்ட் கலந்து வெளிவந்த வித்தியாசமான ஜாம்பி படம் 


Cargo (2018) 

IMDb 6.3 


ஜாம்பியாக மாறி விடுவோம் என்று தெரிந்த பின் தன் குழந்தையை பத்திரமாக யாரிடமாவது ஒப்படைக்க போராடும் தந்தையின் கதை.


கொஞ்சம் வித்தியாசமாக Nazi ஜோம்பிஸ்களை வைச்சு நார்வே நாட்டில் இருந்து வந்த படம் தான்.

Dead Snow (2009) 

IMDb 6.3 

இப்படியாக போய் கொண்டு இருந்த ஜாம்பி பட உலகத்தில் நாங்க மட்டும் குறைஞ்சா என்று நுழைந்தது ஒரு டிவி தொடர் . 


The Walking Dead  ( 2010 - 2022

177 Episodes 


இது முழுக்க முழுக்க ஒரு குரூப்போட சர்வைவல் பற்றியது.  இந்த தொடரை பற்றி எழுத ஆரம்பிச்சா நிறுத்த முடியாது.பாக்கணும்னு ஆரம்பிச்சாலும் நிறுத்த முடியாது.


இந்த தொடரோட வெற்றியை தொடர்ந்து அதன் பேரை யூஸ் பண்ணி வந்த இன்னொரு தொடர் 


Fear The Walking dead(2015)



 ரொம்பவே ஆவரேஜ்‌ஜான தொடர் இது.


ஏன் ராஜா காலத்துல ஜோம்பிகள் இருக்க கூடாதா என கொரியர்கள் யோசிக்க பக்காவாக ஒரு Zombie சீரிஸ் கிடைத்தது நமக்கு. 


Kingdom - 2019

IMDb 8.4


இந்த Kingdom தொடரின் Prequel ஆக வந்த ஒரே ஒரு ஸ்பெஷல் எபிசோட் கொண்ட தொடர். 


Kingdom : Ashin of the North 

IMDb : 7.1 


இது போக ஜாம்பிகளை மையமாக வைத்து பல தொடர்கள் உள்ளன. உதாரணமாக 

Znation, i Zombie, Black Summer ... என சொல்லிக்கொண்டே போகலாம். 

நிறைய B grade or IMDb rating குறையா இருக்கும் படங்களை தவிர்த்து விட்டேன். மேலும் ஏதாவது நல்ல படங்களை மிஸ் பண்ணிருந்தா Comment பண்ணுங்க. 













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்