Apostle Tamil Review
இது ஒரு Mystery Horror படம்.ஸ்லோவான படம். Midsommer மாதிரி ரகசியமா இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
IMDb 6.3
தமிழ் டப் இல்லை.
அதிரடி Raid படங்களின் இயக்குனர் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.
1905 வந்து ஆண்டில் நடப்பது போன்று அமைந்துள்ளது. ஹீரோவோட தங்கச்சியை ஒரு ரகசிய cult கடத்தி வைச்சுக்கிட்டு நிறைய பணம் கேட்குறாங்க.
ஹீரோ தானும் அந்த cult ஐ பின்பற்ற போகிறேன் என்று பொய் சொல்லி அந்த கிராமத்துக்குள் நுழைகிறான்.
அதன் பிறகு ஒரு சம்பவத்தில் அந்த குழு தலைவருடன் நெருக்கமாகிறான்.
பின்னர் எதற்காக தங்கச்சியை கடத்தினார்கள் இவர்களுக்கு எதற்காக பணம் போன்ற ரகசியங்களை கண்டுபிடிக்கிறார்.
கடைசியில் தங்கச்சியை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்.
மெதுவாக போற படம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற சஸ்பென்ஸோடு படம் நகர்வது தான் படத்தின் பலம்.
கொஞ்சம் violent ஆன படம் தான்.
வித்தியாசமான ஸ்லோ பர்னர் ஹாரர் படம் பார்க்கணும்னு
நினைச்சா இந்த படத்தை பாருங்கள்.
கொஞ்சம் பொறுமையா தான் பார்க்கணும்.
கருத்துகள்
கருத்துரையிடுக