10 Cloverfield Lane Tamil Review
Wow செம Sci Fi திரில்லர். கண்டிப்பாக பாருங்கள். 🔥🔥🔥
IMDb 7.2
தமிழ் டப் இல்லை.
ஆக்ஸிடென்ட்ல மாட்டிக்கிட்ட ஹீரோயினை ஒருத்தன் காப்பாற்றி பூமிக்கடியில் உள்ள bunker la வைச்சுருக்கான். உலகம் முழுவதும் அழிஞ்சு விஷவாயு பரவி இருக்கு வெளிய போனா சங்குதான் என்கிறான்.
ஆனா அதை கன்பர்ம் பண்ணணும் என்றால் வெளியே போகணும். அந்த கதவு சாவி ஓனர்ட்ட இருக்கு.
அவன் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் ஹீரோயின் என்ன பண்ணுகிறார் என்பதை வைத்து படத்தை பக்காவாக நகர்த்தி சென்று இருக்கிறார்கள்.
அதே ரூம்ல இன்னொருத்தன் இருக்கிறான் . அவன் கை உடைஞ்சு கட்டு போட்டு இருக்கிறான். நான் உலகம் அழியுறத பார்த்தேன் நானா தான் இந்த இடத்துக்கு வந்தேன் என்கிறான்.
ஒரு சமயத்தில் கடத்தி வந்தவன் உண்மை பேசுவது போல் தெரிந்தாலும் , இன்னொரு.சமயத்தில் பொய் சொல்லி சிறைப்படுத்தி வைத்து இருப்பது போல தெரிகிறது ஹீரோயினுக்கு.
இதே மனநிலை தான் படத்தை பார்க்கும் நமக்கும் . அந்த சஸ்பென்ஸ் தான் படத்தின் பலம்.
கடைசியில் ஹீரோயின் எடுத்த முடிவு என்ன ? உண்மையில் உலகம் அழிந்து விட்டதாக இல்லையா என்பதை படத்தில் பாருங்கள்.
படத்தில் மொத்தம் 3 பேர் தான் . ஒரே வீட்டிற்கு நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என பரபரப்பாக செல்கிறது.
Bunker ஓனராக வருபவர் செம நடிப்பு.
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥
Director: Dan Trachtenberg
Cast: Mary Elizabeth Winstead, John Goodman, John Gallagher Jr.
Screenplay: Josh Campbell & Matthew Stuecken and Damien Chazelle
Cinematography: Jeff Cutter
Music: Bear McCreary
கருத்துகள்
கருத்துரையிடுக