முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

10 Cloverfield Lane -2016

10 Cloverfield Lane  Tamil Review  Wow செம Sci Fi திரில்லர். கண்டிப்பாக பாருங்கள். 🔥🔥🔥 IMDb 7.2 தமிழ் டப் இல்லை.  ஆக்ஸிடென்ட்ல மாட்டிக்கிட்ட ஹீரோயினை ஒருத்தன் காப்பாற்றி பூமிக்கடியில் உள்ள bunker la வைச்சுருக்கான். உலகம் முழுவதும் அழிஞ்சு விஷவாயு பரவி இருக்கு வெளிய போனா சங்குதான் என்கிறான்.  ஆனா அதை கன்பர்ம் பண்ணணும் என்றால் வெளியே போகணும். அந்த கதவு சாவி ஓனர்ட்ட இருக்கு.   அவன் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் ஹீரோயின் என்ன பண்ணுகிறார் என்பதை வைத்து படத்தை பக்காவாக நகர்த்தி சென்று இருக்கிறார்கள்.  அதே ரூம்ல இன்னொருத்தன் இருக்கிறான் . அவன் கை உடைஞ்சு கட்டு போட்டு இருக்கிறான். நான் உலகம் அழியுறத பார்த்தேன் நானா தான் இந்த இடத்துக்கு வந்தேன் என்கிறான்.  ஒரு சமயத்தில் கடத்தி வந்தவன் உண்மை பேசுவது போல் தெரிந்தாலும் , இன்னொரு.சமயத்தில் பொய் சொல்லி சிறைப்படுத்தி வைத்து இருப்பது போல தெரிகிறது ஹீரோயினுக்கு.  இதே மனநிலை தான் படத்தை பார்க்கும் நமக்கும் . அந்த சஸ்பென்ஸ் தான் படத்தின் பலம்.  கடைசியில் ஹீரோயின் எடுத்த முடிவு என்ன ? உண்மையில் உலகம் அழிந்து விட்டதாக இல்லையா என்

Flight - 2012

இது ஒரு டிராமா திரில்லர் படம்.  இயக்குனர் Robert Zemeckis.  Forrest Gump எனும் அருமையான படத்தை கொடுத்தவரின் இன்னொரு தரமான படம் இது.  ஹீரோ தலைவர் Denzel Washington . இது போதாதா படம் பார்க்க.  IMDb 7.3  படத்தின் தலைப்பை பார்த்த உடன் flight ல் நடக்கும் ஏதோ பரபரப்பான சம்பவத்தை பற்றிய படம் என நினைத்தேன் ‌‌.  ஆனால் படம் குடி மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையான ஒரு பைலட் மற்றும் அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றியது.  படத்தின் ஆரம்பத்தில் முதல் நாள் முழுவதும் குடித்து விட்டு போதைப் பொருட்கள் உட்கொண்டு விட்டு அடுத்த நாள் விமானத்தை எடுக்கிறார். கிளம்பி கொஞ்சம் நேரத்தில் இரண்டு சின்ன வோட்கா பாட்டிலை ஏர் ஹோஸ்ட்டஸ் இடமிருந்து திருடி அடித்து விட்டு மட்டை ஆகிறார். ஆனால் மிகவும் மோசமான ஒரு இயந்திரக் கோளாறு காரணமாக கீழே விழும் விமானத்தை தன்னுடைய அனுபவம் மற்றும் புத்திசாலித்தனத்தால் காப்பாற்றி நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்றுகிறார்.  இவர் ஹீரோவாக கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும் இல்லையா ?  ஆனால் இவர் ரத்தத்தில் ஆல்கஹால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்பு விசாரணையின் கோணம் மொத்தமாக மாறுகிறது. 

[Documentary] Night Stalker : The Hunt For A Serial Killer -2021

இது ஒரு டாக்குமெண்டரி. Night Stalker என பட்டப்பெயர் இடப்பட்ட Richard Ramirez எனும் கொடூர கொலைகாரனை கண்டுபிடித்ததை பற்றியது‌.  இந்த டாக்குமெண்டரி பற்றி பார்க்கும் முன் இந்த Richard Ramirez பற்றி பார்க்கலாம்.  1960 ஆம் வருடம் பிறந்த இவனின் குழந்தைப் பருவம் அவ்வளவு நன்றாக அமையவில்லை. குடிகார தந்தை , வன்முறை குணம் மிகுந்த Cousin என கொடூரமான சூழ்நிலையில் வளர்ந்து இருக்கிறான். 15 வயதில் போதைப் பொருட்கள் உபயோகிக்க ஆரம்பித்து உள்ளான்.  முதலில் கொன்றது 1984 வந்து வருடம் ஒரு  15 வயது சிறுமியை.  இதிலிருந்து இவனுடைய அட்டூழியம் 1 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து உள்ளது.  June 1984 - August 85 க்கு நடுவே 13 கொலைகள், 5 கொலை முயற்சிகள், 11 கற்பழிப்புகள், 14 திருட்டுகள் போன்ற வழக்குகள் இவன் மேல் பதியப்பட்டுள்ளது.  இது official record ல் இருப்பது மட்டுமே. நிறைய சம்பவங்களை இவன் பண்ணி இருக்கலாம் ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் Ramirez கணக்கில் வரவில்லை.  இவன் கொலை செய்பவர்களை எந்த காரணமும் இல்லாமல் Random ஆக தேர்ந்தெடுத்து கொன்று உள்ளான். இதனால் போலீசாருக்கு பெரிய தலைவலியை கொடுத்து உள்ளான் அந்த காலகட்டத்தி

Lion - 2016

செம சென்டிமென்ட் படம். கண்டிப்பா அழ வச்சுருவாங்க. சிறுவயதில் தன் குடும்பத்தை பிரிந்த ஹீரோ 25 வருடங்கள் கழித்து மீண்டும் தன் குடும்பத்தை தேடி கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  IMDb 8.0 தமிழ் டப் இல்லை. படத்தோட ஆரம்பத்தில் ஒரு குக்கிராமம் காட்டப்படுகிறது. சாப்பாட்டிற்கு கஷ்டப்படும்  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரு சகோதரர்கள் உள்ளனர்.  அண்ணன் பக்கத்தில் உள்ள ஊருக்கு வேலைக்கு போறேன் என கிளம்ப தம்பியும் கூட கிளம்புகிறான்.  ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள்.  தமபி தெரியாமல் ஒரு ட்ரெயினில் ஏறிவிட அது கொல்கத்தாவில் இவனை கொண்டு சேர்க்கிறது.‌ சிறுவனுக்கு பெங்காலி பேசத் தெரியாது அது போக தன் ஊரின் பேரையும் தப்பாக சொல்ல ஒரு அரசு அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பப்படுகிறான். ஆஸ்திரேலிய தம்பதி இவனை தத்து எடுத்துக் கொள்ள ஆஸ்திரேலியா பயணமாகிறான்.  25 ஆண்டுகள் முன்னே போகிறது படம். ஹீரோ பெரியவன் ஆகி ஆஸ்திரேலியாவில் காலேஜில் படிக்கிறான்.  ஒரு சின்ன நிகழ்வு இவனது குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது. தனது குடும்பத்தை சந்திக்க வேண்டும்  நினைக்கிறான். ஊர் பேரும் தெரியாமல் எந்த மாநிலம் என்றும் தெரியாமல் த

Apostle - 2018

Apostle Tamil Review  இது ஒரு  Mystery Horror படம். ஸ்லோவான படம். Midsommer மாதிரி ரகசியமா இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. IMDb 6.3 தமிழ் டப் இல்லை.  அதிரடி Raid படங்களின் இயக்குனர் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.  1905 வந்து ஆண்டில் நடப்பது போன்று அமைந்துள்ளது. ஹீரோவோட தங்கச்சியை ஒரு ரகசிய cult கடத்தி வைச்சுக்கிட்டு நிறைய பணம் கேட்குறாங்க.  ஹீரோ தானும் அந்த cult ஐ பின்பற்ற போகிறேன் என்று பொய் சொல்லி அந்த கிராமத்துக்குள் நுழைகிறான். அதன் பிறகு ஒரு சம்பவத்தில் அந்த குழு தலைவருடன் நெருக்கமாகிறான்.   பின்னர் எதற்காக தங்கச்சியை கடத்தினார்கள் இவர்களுக்கு எதற்காக பணம் போன்ற ரகசியங்களை கண்டுபிடிக்கிறார்.  கடைசியில் தங்கச்சியை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்.  மெதுவாக போற படம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற சஸ்பென்ஸோடு படம் நகர்வது தான் படத்தின் பலம்.  கொஞ்சம் violent ஆன படம் தான்.  வித்தியாசமான ஸ்லோ பர்னர் ஹாரர் படம் பார்க்கணும்னு நினைச்சா இந்த படத்தை பாருங்கள். கொஞ்சம் பொறுமையா தான்  பார்க்கணும்.

Slither - 2006

இது ஒரு Sci Fi , ஹாரர் உடன்  காமெடி கலந்த படம்.  IMDb 6.5 தமிழ் டப் இருக்கு, தமிழ் டப் இருக்கு 😊 ஒரு சின்ன ஊருக்குள் இரவு நேரத்தில் வானில் இருந்து ஒரு எரிகல் விழுகிறது.அதிலிருந்து வர்ற ஏலியன்கள்ட்ட இருந்து ஊரை காப்பாத்துற படம் .  அந்த கல் உள்ள இருந்து சின்னதா ஒரு புழு மாதிரி ஏலியன் அந்த பக்கம் வர்ற ஒருத்தர் உடம்புல போய்டுது.  இந்த ஏலியன் எப்படினா எந்த உடம்புக்கு உள்ள போகுதோ அது அவங்க மூளைய தன் கன்ட்ரோல்ல எடுத்துக்கும். அவங்க ஜாம்பி மாதிரி மாறிடுறாங்க. ஆனா அவங்க மைண்ட் ஏலியன் கண்ட்ரோல்ல இருக்கும்.  இது மட்டும் இல்லாமல் முதல் முதலாக ஒருத்தன் உடம்புக்குள்ள போச்சுல அந்த மனுஷன் மூலமா அது இனத்தைப் பெருக்கும் வேலையையும் செய்யுது.  ஒரு கட்டத்துல ஆயிரக்கணக்கான ஏலியன்கள் இனப்பெருக்கமாகி பெரிய பெரிய புழுவா  மொத்தமா  ஊருக்குள் வந்து கண்ணுல பட்டவங்க எல்லாரையும் முதல்ல வந்த ஏலியன்  கண்ட்ரோல்ல கொண்டு வருது.  ஹீரோ ஒரு போலீஸ் , ஹீரோயின் மற்றும் சில போலீஸ்காரர்கள் சேர்ந்து அந்த ஏலியன்களை கொன்று ஊரை காப்பாற்றினார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  பெரிய லெவல்ல கதை எல்லாம் ஒன்னும் இல்லை வழக்கமான ஹாரர் பட டெ

I Origins - 2014

 I Origins - 2014 - Movie Review In Tamil  இது ஒரு Sci Fi ,Drama படம்.  ரொம்பவே மெதுவா போற படம். ஆனா எனக்கு பிடிச்சது. கடைசி 30 நிமிஷம் படம் டெல்லில நடக்கும்.  IMDb 7.4 தமிழ் டப் இல்லை ஹீரோ கண்ணை பத்தி ஆராய்ச்சி பண்ணுற ஒரு சயின்ட்டிஸ்ட். கண் இறைவனால் படைக்கப்பட்டது இல்லை  பரிணாம வளர்ச்சியால் உருவானது என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க முயற்சி செய்கிறார்.  இவருக்கு ஒரு லவ்வர் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்து விடுகிறார்.  இவரும் கொஞ்ச நாள் சோகமா இருக்கார்.  அப்புறமா அவருடைய லேப் அசிஸ்டன்ட்ட கல்யாணம் பண்ணிட்டு குழந்தைனு செட்டில் ஆகிவிடுகிறார்.  7 ஆண்டுகள் கழித்து ஒரு சமயத்தில் பழைய காதலியின் கண் டெல்லியில் ஸ்கேன் செய்த ஒரு கண்ணோடு ஒத்துப் போவதை ஏதாச்சையாக கண்டுபிடிக்கிறார்.  அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் இவனுடைய இவ்வளவு நாள் நம்பிக்கையை or அவருடைய தியரியை மாற்றும் வகையில் இருக்கிறது அது என்ன என்பதை படத்தில் பாருங்கள்.  நல்ல Engaging ஆன கதை மற்றும் திரைக்கதை. க்ளைமேக்ஸ் அருமை. ஆனால் படத்தில் ஒரு Closure இருந்த மாதிரி தெரியவில்லை.  Slow but good film.. Worth watching 👍👍 Watch Trailer: 

The Hidden Face - 2011

Spanish -  mystery thriller படம் இது.  ஹீரோவோட லவ்வர் திடீர்னு ஒருநாள் காணாமல்  போயிருவா. அதுக்கு அப்புறம் அவங்க வாழ்ந்த அந்த வீட்டைச் சுத்தி நடக்கும் சம்பவங்கள் தான் படம் ‌.  IMDb 7.4 தமிழ் டப் இல்லை.  ட்விஸ்ட் எல்லாம் தரமா இருக்கும்..  செம படம் கண்டிப்பாக பாருங்கள்.  ஹீரோவோட கேர்ள் ப்ரண்ட் ஒரு நாள் வீடியோல Bye னு சொல்லிட்டு காணாமல் போய்டுறா. இவனும் கொஞ்ச நாள்ல வேறு ஒரு பொண்ணு கூட பழக ஆரம்பிக்கிறான்.  அதுக்கு அப்புறம் புது லவ்வர் வீட்டில் தனியா  இருக்கும்போது  சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன. ஏன் அப்படி நடக்குது ?  அவனோட பழைய லவ்வருக்கு என்ன ஆனது என்பதை செம சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் வைச்சு சொல்லிருக்காங்க.  படத்தோட டைட்டில் வித்தியாசமா பாத்ரூமோட வாஷ் பேசின் தண்ணில தான் போடுறாங்க.  நான் கூட ஈரம் படத்துல வர்ற மாதிரி தண்ணில வர்ற பேய்னு நெனச்சேன். படத்துலயும் அதுமாதிரி காட்சிகள் நெறைய இருக்கு.  படத்தை பத்தி ஸ்பாய்லர் தர கூடாதுன்னு இதோட நிறுத்திக்கிறேன்.  ஆன ஒரு முக்கியமான ட்விஸ்ட் தெரிஞ்சதும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று கொஞ்சம் யூகித்து விடலாம்.  பக்காவான திரில்லர் கண்டிப்பாக

The Last House On The Left - 2009

பெரும்பாலான ஹாரர் பட பிரியர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள். இல்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள்.  IMDb 6.5 தமிழ் டப் இல்லை.  மகளை கற்பழித்தவனை பழி வாங்கும் பெற்றோர்களை பற்றிய படம்.  அப்பா, அம்மா மகள் என மூன்று பேரும் காட்டுக்கு நடுவில் ஏரியின் அருகில்  இருக்கும் தங்களது Vacation home க்கு வருகிறார்கள்.‌ டீன் ஏஜ் மகள் தனது நண்பியை பார்க்க பக்கத்துல இருக்க சின்ன ஊருக்கு போகிறாள்.  போன இடத்தில் ஜெயிலில் இருந்து தப்பித்த ஒரு கொடூரமான சைகோ மற்றும் அவனது கூட்டத்திடம மாட்டிக் கொள்கிறாள்.  ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்களுக்கே தெரியாமல் கற்பழித்த பெண்ணின் வீட்டிலேயே தங்க நேரிடுகிறது.   ஒரு கட்டத்தில் தங்கள் பெண்ணை கற்பழித்த கூட்டம் இது தான் என பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது.  அப்புறம் என்ன பெற்றோர்கள் இந்த கூட்டத்தை வீட்டுக்குள் வைத்து  குமுறுவதற்கு ப்ளான் பண்றாங்க. கடைசியில் யார் யார் உயிரோட இருந்தாங்கனு படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  நல்ல ஹாரர் திரில்லர்.. கண்டிப்பாக பாருங்கள்..‌‌பாலியல் வன்முறைக்காட்சிகள் , வெட்டு குத்து என வன்முறை அதிகம்.   

Those Who Wish Me Dead - 2021

Taylor Sheridan டைரக்ட் பண்ண படம். இவரோட Wind River படம் செம சூப்பரா இருக்கும். இது போக Angelina Jolie வேற இருந்தாங்க அதுனால பார்த்த படம்.  IMDb 6.1 தமிழ் டப் இல்லை.  படத்தோட கதை என்னனா Angelina Jolie ஒரு தீயணைப்பு துறை வீரர் ஒரு தவறான கணிப்பினால் 3 சிறுவர்கள் நெருப்பில் சிக்கி அவர் கண் முன்னே பலியாகின்றனர். இதனால் குற்ற உணர்ச்சியுடன் வாழ்கிறார்.  இன்னொரு புறம் ஒரு Accountant ஊழலை கண்டுபிடிக்கிறார். அதனால் அவரையும் அவரது மகனையும் கொல்ல முயற்சி செய்கின்றனர் 2 Hi tech அடியாள்கள்.  அப்பாவும் மகனும் தப்பி அவரது சொந்தக்காரர் ஒருவர் போலீசாக உள்ள ஊருக்கு வருகிறார்கள்.  அந்த ஊரில் தான் Angelina Jolie யும் வேலை பார்க்கிறார்.  இந்த அடியாட்களும் மோப்பம் பிடித்து அங்கு வருகிறார்கள்.  இப்ப நீங்க guess பண்ணிருப்பீங்க என்ன நடக்க போகிறது என்று.  அப்பாவும் மகனும் தப்பினார்களா என்பதை படத்தில் பாருங்கள்.  படம் நல்லா தான் இருக்கு. ஆனால் அடுத்து என்ன நடக்கும் என கொஞ்சம் guess பண்ணிடலாம்.  Punisher போலீசாக வருகிறார். GOT ல வர்ற Little Finger செம வில்லத்தனம்.  காட்டுத்தீயை படத்துக்கு ஏத்த மாதிரி நல்லா யூஸ் ப

My Son - 2021

 UK வில் இருந்து வந்த திரில்லர் படம்.  கேம்ப் போன 7 வயது மகன் காணாமல் போய்விட அவனைத் தனியாக தேடிக்கொண்டு பிடிக்கும் அப்பாவின் கதை‌  IMDb 6.1 தமிழ் டப் இல்லை.  ஹீரோ Middle East oil company களில் வேலை பார்ப்பவர். விவகாரத்தான பின் தனது 7 வயது மகன் முன்னாள் மனைவியுடன் வசிக்கிறார்.  திடீரென ஒரு நாள் முன்னாள் மனைவி போன் பண்ணி பையனை யாரோ கடத்திட்டாங்க என்கிறார்.  விசாரணை பண்ணும் மேல் அதிகாரியும் ஒரு கட்டத்தில் மேலிடத்துல இருந்து ப்ரஷர் அதுனால நான் கேஸ்ல இருந்து விலகிக் கொள்கிறேன் நீயா உன் மகனை கண்டு பிடிச்சுகோ வேற வழி இல்லை என்கிறார்.  அப்புறம் என்ன மகனை கண்டுபிடிச்சார இல்லையா என்பதை படத்தில் பாருங்கள்.  படத்தோட Plot நல்லாருக்குல. இத எவ்வளவு ஸ்பீடா கொண்டு போயிருக்கனும்.ஆனா ஏனோ தானோ என்று மெதுவா போகுது.‌  ஏன் அவர் மகனை இடத்திற்கு போனார்கள் என்ற சஸ்பென்ஸ் தவிர வேறு ஒன்றும் பெரிசா படத்துல இல்லை.  ஒளிப்பதிவு ஒரே ஆறுதல்.. லொகேஷன்கள் எல்லாம் அருமையாக உள்ளன ‌‌. சுமாரான படம் , ஒரு டைம் பாக்கலாம்.

Margin Call - 2011

Margin Call Tamil Review  2008 ல் பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப கட்டத்தில்  ஒரு Investment பேங்கில் நடக்கும் சிக்கலான சூழ்நிலையே அந்த பேங்கின் முக்கிய அதிகாரிகள் எவ்வாறு எதிர் கொண்டனர் என்பதை சொல்லும் படம். IMDb 7.1  தமிழ் டப் இல்லை.  ரெகுலரான படம் கிடையாது. Financial background இருந்தா புரிய கொஞ்சம் எளிதாக இருக்கும். படத்தின் ஆரம்பத்தில் Trading Floor ல் HR மக்கள் உள்ளே வருகின்றனர். சகட்டு மானிக்கு employees'a Fire பண்றாங்க. அதுல Risk Management ல வேலை பாக்குற சீனியர் ஒருத்தர்.  அவர் கிளம்புறப்ப அவர பண்ணிட்டு இருக்குற புரோஜக்ட்ட ஒரு ஜீனியர் பையன்ட  கொடுத்து ஜாக்கிரதை அப்படினு சொல்லிட்டு போறார்.  அந்த பையன் அறிவாளியா இருக்க அன்னிக்கு நைட்டே அந்த புராஜெக்ட்டா முடிச்சுருரான்.  அவன் கண்டுபிடிச்சது என்னனா..  கம்பெனி Risk Management System  ல பெரியயயய ஓட்டை இருக்கு. கம்பெனி வாங்கி வச்சுருக்க Asset la கொஞ்சம் சேதாரம் ஆனாலும் கம்பெனியோட மொத்த Market Capitalisation amount விட சேதாரம் அதிகமா ஆகிடும் என்பது தான்.  அப்பறம் என்ன நைட்டோட நைட்டா பெரிய தலைகள் எல்லாம் வருது. அதிரடியான முடிவை எடுக்

The Terror Live - 2013

 இது ஒரு பக்கா கொரியன் திரில்லர் . ஹீரோ ஒரு பிரபலா டிவி ரிப்போர்ட்டர் ஆனால் சரியா டைம் Workout ஆகாம ரேடியோ ஜாக்கியா Demote ஆனவர்.  ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபலமாக முயற்சி செய்கிறான். அது அவனுக்கு வினையாக முடிகிறது.   ஒரு நாள் ப்ரோக்ராம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தன் லைன்ல வந்து நான் ஒரு பாலத்தை வெடி வைத்து தகர்க்க போகிறேன் என மிரட்டுகிறான்.  ஹீரோவும் யாரோ விளையாடுறாங்க என்று கண்டுக்காமல் விட்டு விடுகிறான். ஆனால் சிறிது நேரத்தில் பாலம் வெடித்து சிதறுகிறது ‌‌.  உடனே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஹீரோ போலீஸிடம் சொல்லாமல் இந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் பிரபலமாக ஃப்ளான் பண்றான்.  . மறுபடியும் கால் பண்ணும் வில்லன் ஒரு சம்பவத்தை சொல்லி அதற்கு அந்த நாட்டின் அதிபர் உடனே 10 நிமிஷத்துல ஸ்டுடியோக்கு வந்து மன்னிப்பு கேட்கனும் என்ற கோரிக்கை வைக்கிறார். இல்லைனா இன்னும் நிறைய குண்டு வெடிக்கும் என்கிறான்.  வில்லன் மற்றும் அரசுக்கு இடையே சிக்கிக்கொண்டு ஹீரோ படும் பாடு தான் படம். படத்தை சஸ்பென்ஸ் ஆகவே நகர்த்தி இருக்கிறார்கள்.  ஹீரோவை அவன் இடத்தில் இருந்து நகர முடியாமல் செய்வது, சில

[Documentary] Earthlings - 2005

கொடூரமான டாக்குமெண்டரியா இருக்கு..  கொல கொடூரமான படத்தை எல்லாம் கேஷீவலா பார்த்துருக்கேன். ஆனால் இந்த டாக்குமெண்டரி ரொம்பவே disturbing. நம்ம சாப்பாடு, பொழுதுபோக்கு, பொருட்கள் உற்பத்தி பண்ண எப்படி எல்லாம் விலங்குகளை use பண்ணுறோம் என்பதை சொல்லும் படம்.  விலங்கு பண்ணைகளில் Hidden Cam வைச்சு அங்க நடக்குற கொடுமையெல்லாம் வீடியோவா எடுத்துருக்காங்க.  மயக்க மருந்து இல்லாமல் மாட்டு கொம்பை வெட்றது, குடும்ப கட்டுப்பாடு, ரோமங்களுக்காக உயிரோட தோலை உரிப்பது எல்லாம் ரொம்ப கொடுமை. மனிதன் எவ்வளவு கொடூரமானவன் 😓😓😓 நல்ல வேளை கடைசி 20 நிமிஷ வீடியோ ஓடல 😢😢

ஜாம்பிகள் சூழ் உலகு

ஜாம்பிகள் சூழ் உலகு - Zombie Movies Tamil Review  என்னைப் பொருத்தவரை ஜாம்பி படங்கள் Horror Genre படங்களில் முக்கியமான ஒன்று  . உயிர் இல்லாத ஜந்துக்கள்,  கற்பனையான ஒன்று  மற்றும் அதுக்குன்னு ஒரு behaviour இல்லாததால் இயக்குனர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றம் செய்து விறுவிறுப்பான படங்களை கொடுப்பார்கள்.  ஜாம்பி படங்களில் பொதுவாக சில எழுதப்படாத விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக ஜாம்பி கடித்தாலோ இல்லை அதன் ரத்தம் பட்டாலோ பாதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்தில் ஜாம்பியாக மாறிவிடுவார்கள், மூளையில் சுட்டாலும் அல்லது குத்தினாலும் ஜாம்பி செயல் இbழந்து விடும். பெரும்பாலான ஜாம்பி படங்கள் Survival வகையான திரைப்படங்களாக தான் இருக்கும்.  இந்த படங்கள் பெரும்பாலும் இரத்தக் களரி மற்றும் கொடூரமாக தான் இருக்கும்.  இந்த த்ரெட்டில் ஜாம்பிகளை மையமாக கொண்டு வந்த திரைப்படங்களை பார்க்கலாம். நான் குறிப்பாக டைம் லைனை பின்பற்றவில்லை  எனக்கு எந்த எந்த படம் ஞாபகம் வருதோ அப்படியே எழுதுகிறேன்.  மேலும் த்ரேட்டின் நீளத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு படத்தை பற்றியும் 2 வரிகள் தான் எழுதி உள்ளேன்.  முதலில் நான் பார்த்த Zombie படம் Residen

The Crazies - 2010

நான் நிறைய Zombie படங்களை IMDb வாட்ச்லிஸ்டில் போட்டு வைத்திருந்தேன். அதிலிருந்து சமீபத்தில் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று.  இதை முழுவதுமாக Zombie படம் என்றும் சொல்ல முடியாது.  IMDb - 6.5 தமிழ் டப் இல்லை.  எப்பவுமே சிட்டியில் நடக்கும் கதைகளை விட சின்ன ஊருக்குள் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடித்த ஒன்று. அது மாதிரி ஒரு படம் தான் இது.  ஒரு சின்ன விவசாய கிராமம் . பேஸ் பால் மேட்ச் நடக்கும் சமயம் ஒருத்தன் கையில் Shot Gun ஓட உள்ள வர்றான். ஹீரோ அந்த ஒரு தலைமை போலீஸ் மற்றும் அவர் அஸிஸ்ட்டன்ட் ரெண்டு பேரும் வார்னிங் கொடுத்தும் வெளியே போகாததால் வேறு வழி இல்லாமல் சுட வேண்டி இருக்கிறது.  இன்னொருத்தன் பொண்டாட்டி பிள்ளைகளை வீட்டுக்குள் போட்டு தீயை வைத்து கொளுத்திக் கொல்கிறான்.  என்ன ஏது என்று விசாரித்து கொண்டு இருக்கும் போதே திடீரென ஒரு ராணுவ வீரர்கள் போன்ற ஒரு கூட்டம் ஊரையே பிடித்துக் கொண்டு போய் தனிமைப் படுத்துகிறது.  ஹீரோவின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.‌ அந்த ஊர் டாக்டரும் இவரே.. Screening ல் Temperature அதிகமாக இருப்பதால் ஹீரோயினை தனியாக ஒரு இடத்தில் தனிமை

The Lighthouse - 2019

The Lighthouse Tamil Review  இது ஒரு Horror , Mystery படம். 1890 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டு உள்ளது. படம் முழுவதும் கருப்பு வெள்ளை மற்றும். Aspect Ratio குறைவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மொபைல்ல கொஞ்சமா நடு ஸ்கிரீன்ல தான் படம் ஓடுது.  இரண்டு பேர் கடலுக்கு நடுவே ஒரு லைட் கவுஸ்ல இருக்காங்க.  ஒருத்தர் சீனியர் (William Dafoe - ஒரு ஸ்பைடர்மேன் படத்துல வில்லனா வருவார்)  இன்னொருத்தர் 4 வார கான்ட்ராக்டல வேலைக்கு வருகிறார்.(  Robert Pattinson - கடைசியாக Tenet ல நடிச்சு இருந்தாரு)  ஆரம்பத்திலுல இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாமல் சண்டை போட்டுட்டு இருக்காங்க. அந்த சீனியர் மட்டும் லைட் கவுஸ்க்கு மேல போய் என்னமோ பண்ணிட்டு வறாரு.  புதுசா வந்தவன கண்டபடி வேலை வாங்குகிறார்.  புதுசா வந்தவனுக்கு கனவுல கடல்கன்னி வருது , ஏதோ ஒரு கொடூரமான மிருகம் தெரியுது.  அதுக்கப்புறம் எனக்கு படம் சுத்தமா ஒன்னும் புரியல. எது கனவு ? எது நிஜம்னு தெரியலை.. ஆனா செம டார்க்கான படம்.  படத்துல மொத்தமே 2 பேர் தான். ரெண்டு பேரும் சூப்பரா நடிச்சு இருக்காங்க.  இன்னொரு பெரிய ப்ளஸ் பின்னணி இசை.. மிரட்டி இருக்காங்க.. அதுவும் அந்த

Turning Point : 9/11 And The War On Terror

Turning Point : 9/11 And The War On Terror tamil review  இது ஒரே மினி டாக்குமெண்டரி சீரிஸ் ‌‌ அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் மற்றும் அதன் பின் விளைவுகளை பற்றிய டாக்குமெண்டரி.  இந்த டாக்குமெண்டரியின் பெரிய ப்ளஸ் என்னவென்றால் அவர்கள் உபயோகித்து இருக்கும் Live Footage , real audio recordings.  தாக்குதல் நடந்த நேரம், இரண்டு கோபுரங்களும் சரியும் தருணம் போன்ற காட்சிகள் நமக்கு இத்தனை வருடங்கள் கழித்தும் அதிர்ச்சி அளிக்கிறது.  உயிர் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்த பின் பேசும் போன் கால்களுடைய ரெக்கார்டிங்ஸ் கேட்கும் போது ரொம்பவே பாவமாக இருக்கிறது.  தொடர் 9/11 பற்றி மட்டும் பேசாமல் எப்படி அமெரிக்காவுக்கும் அல்கொய்தா, தாலிபான்கள் போன்ற அமைப்புகளும் ஏன் உரசல் ஆரம்பமானது.  சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு  தொடங்கியதில் இருந்து ஆரம்பமாகிறது இந்த உரசல்கள் ‌‌. 1980 வாக்கில் ரஷ்யாவிடம் இருந்து ஆப்கானிஸ்தானை காப்பாறுகிறேன் என்று அமெரிக்கா உள்ளே நுழைகிறது.  அப்போது தொடங்கி இரட்டைக் கோபுர தாக்குதலை சொல்லி முடிவில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது வரைக்கும் நிகழ்

Ready Player One - 2018

Ready Player One Tamil Review  (Tamil Dubbed) பிரபல இயக்குனர் Stephen Spielberg இயக்கத்தில் வந்த Sci Fi , Adventure கலந்த ஆக்ஷன் படம்.  படம் நடப்பது 2045 ல . மக்கள் நிம்மதியாக வாழ சூழல்  இல்லாததால்  பெரும்பாலான மக்கள் Oasis எனப்படும் Virtual உலகத்தில் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறார்கள்.  Oasis உலகத்தை உருவாக்கிய விஞ்ஞானி அதிபுத்திசாலி. அவர் இறக்கும் முன்பு ஒரு அறிக்கை விட்டுவிட்டு இறந்து விடுகிறார்.  Oasis - ல் ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்து உள்ளதாகவும் அந்த ரகசியத்தை அடைய மூன்று சாவிக்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.  அந்த ரகசியத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு தன் சொத்துக்கள் மற்றும் Oasis ன் முழு உரிமையும் கொடுக்கப்படும் என்கிறார்.  சாவிக்களை கண்டுபிடிப்பதற்கான Clue தன் வாழ்க்கை வரலாற்றில் இருப்பதாகவும் சொல்கிறார்.  ஹீரோ , ஹீரோயின் மற்றும் இன்னும் 3 பேர் முதல் சுற்றில் தேர்ச்சி பெற்று சாவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள்.  படம்னு இருந்தா வில்லன் இல்லாமலா ... Oasis க்கு போட்டியாக இன்னொரு கம்பெனி இருக்கிறது. அந்த கம்பெனி ஓனர் எப்படியாவது Oasis ஓனர் சொன்ன ரகசியத்தை கண்டுபிடி

[Non Movie Post]Turning Point in my Professional Career

வாய்ப்புகள் எங்க எப்படி வரும்னு தெரியாது . நமக்கு ஏதாவது நல்லது நடக்கனும்னு விதி இருந்தால் அந்த வாய்ப்பு நம்ம முதுகுல ஏறி உக்காந்துக்கிடும். அத கரெக்டா யூஸ் பண்ணிட்டா நம்ம லைஃப் டோட்டலா சேஞ்ச் ஆகிடும். சந்தர்ப்ப சூழ்நிலை use பண்ண வைக்கும். அந்த மாதிரி என்னோட IT career ல நடந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கையை மாத்துச்சு அத பத்தி பாக்க போறோம்.  IT ல டெக்னாலஜி மாறணும்னு நெறய பேரு நினைப்பார்கள் . ஆன ஒரு பயம் இருக்கும் புது டெக்னாலஜிய இருக்கே நம்மால சமாளிக்க முடியுமா என்று.  அந்த பயத்தை என்னோட அனுபவம் கொஞ்சம் குறைக்கும்னு நினைக்கிறேன். 2015 - ஆம் வருடம் ஹைதராபாத்ல ஒரு கம்பெனில PHP ல வேலை பார்த்துட்டு இருந்தேன். 8 வருட அனுபவம் அந்த டைம்ல‌ .  ஒரு பிரச்சினைல கிளையண்ட் ப்ராஜெக்ட்ட கேன்சல் பண்ணிட்டு போய்ட்டான். கிட்டத்தட்ட ஒரு 40 பேரு அந்த ப்ராஜெட்ல ... எல்லாரும் 6+ வருட அனுபவம் கொண்ட சீனியர்ஸ்.அடுத்த நாள் எல்லாரும் மொத்தமா பெஞ்ல.  எப்ப எவன ஃபயர் பண்ணுவாங்கனு தெரியாது . செம பயத்துல இருந்தோம். ஒரு நாள் எங்க VP அது ரூம்குள்ள கூப்பிட்டாங்க. சரி சோலி முடிஞ்சதுனு நினைச்சுட்டு உள்ள போய் உக்காந்தேன்.  அவங்க

The Loved Ones - 2009

The Loved Ones Tamil Review  இத ஒரு ரொமாண்டிக் கொடூர சைக்கோ ஹாரர் படம்னு சொல்லலாம் 🤪 படம் பேர் ஏதோ குடும்ப படம் மாதிரி  வைச்சுக்கிட்டு கொடூரமா படத்தை எடுத்து வைச்சுருக்கானுக.  ஹீரோ ஒரு காலேஜ் பையன் .. லவ்வர் இருக்குது, டோப் அடிச்சுட்டு ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான். ஒரு நாள் கூட படிக்கிற பொண்ணு என் கூட காலேஜ் Function ல டான்ஸ் ஆட வர்றியா கேட்குது. இவனும் கேஷீவலா நான் என் லவ்வர் கூட ஆடப்போறேன்னு சொல்லிட்டு லவ்வர் கூட கார்ல மேட்டர் பண்றான். அத மொறச்சு பார்த்துட்டு இருக்கா அந்த பொண்ணு.  அன்னிக்கு நைட்டு கஞ்சா அடிக்க ஒரு மலைப்பாங்கான இடத்துக்கு போறான். அங்க இவன யாரோ அடிச்சு கடத்திட்டு போய்டுறாங்க.  கண்ண முழிச்சு பார்த்தா ஒரு அலங்காரம் பண்ண ரூம்ல சேர்ல கட்டி வைச்சு இருக்காங்க.  யாருடானு பார்த்தா அந்த டான்ஸ் ஆட கூப்ட பொண்ணும் அவ அப்பனும் இருக்காங்க.  டான்ஸ் ஆட கூப்டா வரமாட்டியாடானு டார்ச்சர் பண்ண ஆரம்பிக்கிறானுக.  ஸப்பா என்ன ஒரு டார்ச்சரு...  இதெல்லாம் போக அண்டர்கிரவுண்ட்ல ஒரு ஸ்பெஷல் ஐட்டம் வேற வைச்சு இருக்கானுக.  இவனுககிட்ட இருந்து ஹீரோ தப்பிச்சான இல்லையானு படத்துல பாருங்கள்.  படம் நல்ல

Three Billboards Outside Ebbing, Missouri - 2017

Three Billboards Outside Ebbing, Missouri Tamil Review  இது ஒரு டார்க் காமெடி கலந்த க்ரைம் ட்ராமா .  தமிழ் டப் இல்லை. IMDb : 8.1  சூப்பரான படம்.. கண்டிப்பாக பார்க்கலாம்.  சிறந்த நடிப்பிற்கான பிரிவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளது இந்த படம்.  இந்த படத்தின் ஒரு வரி கதை:  கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்த மகளுக்கு நியாயம் கிடைக்க போராடும் தாயின் கதை .  படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் மக்கள் அவ்வளவாக உபயோகிக்காமல் உள்ள சாலையில் காரில் செல்கிறார். அங்கு பாழடைந்த நிலையில் உள்ள அடுத்தடுத்து உள்ள மூன்று விளம்பர பேனர்களை பார்க்கிறார்.  அந்த பேனர்களை நிர்வகிக்கும் கம்பெனியிடம் சென்று ஒரு வருடத்திற்கு அந்த பலகைகளை குத்தகைக்கு எடுக்கிறார்.  " சாகும் போது கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வழக்கில் ஏன் ஒருத்தனை கூட கைது செய்யவில்லை Bill Willoughby " என பெரிய சைசில் அந்த பேனரில் எழுதி வைக்கிறார்  அந்த பெண். Bill Willoughby அந்த ஊர் போலீஸ் தலைமை அதிகாரி. ரொம்ப நல்லவர் என மக்கள் மற்றும் சக அதிகாரிகளிடம் பேர் எடுத்தவர். Dixon - இன்னொரு போலீஸ் ரொம்ப கோபக்காரன் ‌‌மற

Wonder - 2017

Wonder - 2017 Movie Review In Tamil என்ன ஒரு அழகான Feel good திரைப்படம்.  அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.  இந்த மாதிரி ஃபீல் குட் படங்களை பார்ப்பது மனதிற்கு ரொம்பவே இதமாக இருக்கும் ‌‌‌‌‌   சில Gene 🧬 குறைபாட்டால் முகம் கொஞ்சம் விகாரமாக இருக்கும் சிறுவன். மற்றவர்கள் கிண்டல் பண்ணுவாங்க என்று 4 வது வகுப்பு வரை வீட்டிலேயே படிக்க வைக்கின்றனர் பெற்றவர்கள். வெளி உலகோடு கலக்க வேண்டும் என 5 வகுப்புக்கு பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் அந்த சிறுவன் எப்படி செட்டில் ஆனான் என்பதை சுற்றி நகர்கிறது படம்.  படத்தின் ஹீரோ சிறுவன் (August - Auggie) க்கு ரொம்பவே தாழ்வு மனப்பான்மை. அம்மா , அப்பா மற்றும் அக்கா என அழகான மற்றும் பாசத்தை பொழியும் குடும்பம். ஆனால் பள்ளியில் செய்யும் கிண்டல் கேலிகளால் ரொம்பவே மனம் நொந்து போகிறான்.  தனது குடும்பம் மற்றும் கிடைத்த ஒரு  நண்பன் துணையுடன் எவ்வாறு இதை கடந்து வந்தான் என்பதை பாஸிட்டிவ்வாக சொல்கிறது படம்.  Julia Roberts மற்றும் Owen Wilson இருவரும் பெற்றோர்களாக அருமையான நடிப்பு. நிறைய கண்கலங்க வைக்கும் காட்சிகள் உள்ளன.  தாரளமாக குடும்பத்

Boss Level - 2021

இது ஒரு Sci Fi + Time loop Concept படம். கொஞ்சம் Comedy + நிறைய Action.  படம் பார்த்தற்கான காரணங்கள்.  Mel Gibson, Naomi Watts and Time Loop concept.  படத்தை பத்தி முடிஞ்ச வரைக்கும் ஸ்பாய்லர் இல்லாம கொஞ்சமா சொன்னா படம் பாக்க ஆர்வமா இருக்கும்னு நினைக்கிறேன் ‌‌.  ஹீரோ ஒரு முன்னாள் ராணுவ வீரன்.. காலைல தூங்கி எந்திரிச்ச உடனே ஒருத்தன் பெரிய கத்திய வைச்சு கொல்ல வர்றான் , அடுத்து ஹெலிகாப்டர்ல வந்து ஒருத்தன் சுடுறான் , அடுத்து கார் சேஸிங் இப்படியே ஆறு ஏழு பேர் விதவிதமா கொல்ல வர்றாங்க.  யாராவது ஒருத்தர்ட மாட்டி செத்து போறான் ஹீரோ.  இதே time loop ல 140 தடவைக்கு மேலே வாழ்ந்துட்டேன் ஆனா எப்படியாவது கொன்னுடுறானுக .. ஏன் நடக்குது எப்படி நடக்குது என்ற அவனுக்கே தெரியவில்லை என்கிறான். அவனுடைய முன்னாள் மனைவி ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் இந்த மாதிரி டைம் லூப் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  ஹீரோயின் உடைய  பாஸ் தான் Mel Gibson . ஒவ்வொரு டைம் லூப்லயும் கொஞ்சம் கொஞ்சமா improve பண்ணி தனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? யார் இதற்கு காரணம் என்பதை ஆக்ஷன் + காமெடி கலந்து சொல்கிறது பட

Alita - Battle Angel - 2019

Alita - Battle Angel Review (Tamil Dubbed) இது ஒரு Sci Fi , Adventure படம்.  இந்த படம் பார்ததற்கான முதல் காரணம் திரைக்கதை எழுதியவர் James Cameron மற்றும் இதன் இயக்குனர் Robert Rodriguez .  உலகம் அழிந்து 300 வருடங்களுக்கு பின்பு ஒரு Cyborg க்கு உயிர் வருகிறது. ஆனால்  அதற்கு எதுவுமே நினைவில் இல்லை. அது தன்னுடைய பழைய நினைவுகளை எப்படி பெறுகிறது என்பது தான் படம். படம் நடப்பது Iron City என்ற ஊரில். உலகம் அழிந்து போன பிறகு மிச்சம் இருந்த அனைவரும் இங்கு வந்து வாழ்கிறார்கள்.  இந்த ஊருக்கு மேலே அந்தரத்தில் ஒரு பெரிய நகரம் மிதந்து கொண்டு இருக்கிறது. நடந்த போரில் மிச்சம் உள்ள ஒரே ஊர் அதுதான். அங்கு போனால் சகல வசதிகளுடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது.  Iron City -ல் வாழும் பெரும்பாலான நபர்களுக்கு அதுதான் கனவு.  அங்கு செல்ல நிறைய பணம் வேண்டும் இல்லை மோட்டார் பால் என்ப்படும் விளையாட்டு டோர்னமென்டில் வென்றால் அங்கு செல்ல அனுமதி கிடைக்கும்.  மோட்டார் பால் என்பது அவங்க ஊர் ஃபுட்பால் + ஸ்கேட்டிங் கலந்து விளையாடப்படும் ஆபத்தான விளையாட்டு.  Scrapyard ல் இருந்து ஒரு Cyborg -ஐ கண்டுபிடித்து உயிர் கொடுக்கிறார