2011 - ல் வந்த ஸ்பானிஷ் ஹாரர் திரில்லர் படம் இது.
ஹாரர் என்றவுடன் பேய் படம் என்று நினைக்க வேண்டாம். இந்த டைரக்டர் சொல்ல வரும் ஹாரர் வேற லெவலில் இருக்கிறது.
படத்தின் கதையை பார்க்கலாம்.
ஹீரோ ஒரு திறமையான பிளாஸ்டிக் சர்ஜன் அதுவும் முகத்தை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்வதில் வல்லவர்.
அவருடைய வீடு மற்றும் கிளினிக் இரண்டும் சேர்ந்து மிகப்பெரிய இடத்தில் வைத்து உள்ளார். அந்த இடம் முழுவதும் பக்காவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வீட்டில் ஒரு வேலைக்காரி இருக்கிறாள்.
ஒரு ரூமில் அழகான இளம்பெண் சிறை வைக்கப்பட்டு இருக்கிறாள். அந்த அறை முழுவதும் கேமரா வைக்கப்பட்டு வெளியே உள்ள டிவியில் கண்காணிக்க படுகிறாள்.
இந்நிலையில் ஹீரோ செயற்கை மனித தோலை கண்டுபிடிக்கிறார். அதை டெஸ்ட் பண்ணுவதற்கு மற்றும் எல்லா ஆராய்ச்சிக்கும் சோதனை எலி அந்த பெண் தான்.
நமக்கு அடுத்ததாக எழும் கேள்வி யார் அந்த பெண்?
இந்த கேள்விக்கான விடையை சஸ்பென்ஸில் வைத்து உள்ளார் இயக்குனர். .
படம் நகர நகர ஹீரோவின் பழைய வாழ்க்கை ஃப்ளாஷ் பேக்கில் காட்டப்படுகிறது. மனைவி , மகள், அம்மா, சகோதரர் என அனைவரும் வருகிறார்கள்.
அந்த பெண் மனைவியாக இருக்குமோ, மகளாக இருக்குமோ(ஆனால் மகள் இல்லை என முடிவுக்கு வந்து விடலாம்.) என நம்மை சிந்திக்க வைக்கிறார்.
கடைசியில் ஒரு கட்டத்தில் யார் அந்த பெண் என தெரிய வரும் போது... அட சைக்கோ கொலைகார பயலே என திட்ட வேண்டும் என தோன்றும் நமக்கு.
இது நம்ம வழக்கமாக பார்க்கும் ஹாரர் படம் இல்லை. நிறைய லேயர்கள், முடிச்சுகள்.. அது போக கொஞ்சம் ஸ்லோவாக செல்லும் ஆனா ஆர்வமாக இருக்கும்.
ஆக மொத்தம் ஒரு வித்தியாசமான ஹாரர் படம் பார்க்க வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.
Strictly 18+
IMDb Rating : 7.6/ 10
Not available in Prime or Netflix
Direct message me for download link
Director: Pedro Almodovar
Cast: Antonio Banderas, Elena Anaya, Marisa Paredes, Jan Cornet, Roberto Alamo
Screenplay: Pedro Almodovar & Agustin Almodovar, based on the novel by Thierry Jonquet
Cinematography: Jose Luis Alcaine
Music: Alberto Iglesias
கருத்துகள்
கருத்துரையிடுக