சில பேர் சுற்றுச்சூழலை பாதுகாப்பா வைக்கனும்னு நினைப்பார்கள். அதுக்காக ரொம்ப மெனக்கெடுவார்கள். உதாரணமாக வாட்டர் பாட்டில் , துணிப்பை கொண்டு போவார்கள்.
அது போல கடல் உயிரினங்கள் மற்றும் கடல் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர் Ali Tabrizi . அதிலும் குறிப்பாக திமிங்கிலங்கள் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
திமிங்கிலங்கள் எண்ணிக்கை குறைய முக்கிய காரணம் நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் ப்ளாஸ்டிக்கை கூட உபயோகப் படுத்தாத மனுஷன். ஹோட்டல் போன கூட மரத்தால் செஞ்ச கரண்டிய எடுத்துக் கொண்டு போகிறார்.
இவருக்கு ஜப்பான் நாட்டில் திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் கொல்லப்படுவதாக கேள்விப்பட்டு அதை வீடியோ எடுக்க போகிறார்.
அங்கு நடப்பது கொடூரமாக உள்ளது.டால்பின்களை இஷ்டத்துக்கு கொல்கிறார்கள். அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் டால்பின்கள் நிறைய மீன்களை சாப்பிடுவதால் எங்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை.
அப்புறம் ஒரு Professor - ஐ சந்திக்கிறார் . அவர் அட முட்டாப்பயலே நம்ம யூஸ் பண்ற ப்ளாஸ்டிக்ல 0.3% தான் கடல்ல போய் சேருகிறது. 50% மேல கடலை நாசம் பண்றது மீன் பிடி கப்பலில் இருந்து வரும் கிழிந்த வலை மட்டும் இன்ன பிற பொருட்கள் தான் என்கிறார்.
இவரும் வந்து ஆராய்ச்சி பண்ணுகிறார். அதில் ஒரு மிகப்பெரிய சதியை கண்டுபிடிக்கிறார்.
மீன் பிடிக்கும் கம்பெனிகள் மற்றும் போராளிகள் குழுக்கள் இரண்டுக்குமே ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் உள்ளது தான்.
அதாவது கடலை நாசம் பன்றது மட்டும் அதை சரி செய்றோம் என சொல்வது இரண்டு பேரும் ஒரே குரூப் தான். இல்லாவிட்டால் இரண்டுக்குமே பணம் ஒரே இடத்தில் இருந்து போகிறது.
இது போக மீன்பிடி கம்பெனிகள் இன்னும் கொடூரமான கொத்தடிமை முறை பழக்கத்தில் உள்ளதை கண்டுபிடிக்கிறார்.
கடைசியில் இதே வேகத்தில் மீன் பிடித்தால் இன்னும் கொஞ்சம் காலத்தில் கடலில் உயிரினங்களே இருக்காது என்று சொல்லி முடிக்கிறார்கள்.
நல்ல ஒரு டாக்குமெண்டரி . நாம் கடலை பற்றியும் அது எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றன, கார்ப்பரேட்களின் சதி என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து இருக்கிறார்கள்.
கண்டிப்பாக பாருங்கள் மீன்பிடித்தல் தொழிலில் கார்ப்பரேட்களின் அட்டூழியங்ள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு அதனால் நேரும் பாதிப்புக்களையும்.
IMDb : 8.2/10
Available in Netflix
கருத்துகள்
கருத்துரையிடுக