Palm Springs - 2020 Tamil Review
இது ஒரு நல்ல ரொமான்ஸ் , காமெடி Fantasy படம்.
Time Loop கான்செப்ட் இருப்பதால் Sci Fi படம் என்று கூட சொல்லலாம்.
ஆக்ஷன் படங்களில் டைம் லூப் பார்த்து இருக்கிறோம் ஆனால் ரொமான்ஸ் படங்களில் டைம் லூப் fresh ஆன கற்பனை.
நன்றாகவே workout ஆகி இருக்கிறது இந்த படத்தில்.
இப்ப படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்.
முன் பின் அறிமுகம் இல்லாத ஹீரோ ஹீரோயின் ஒரு கல்யாணத்துக்கு போறாங்க. கல்யாணத்துல பழக்கமாகி தனியா இருப்போம் என்று குகைகள் இருக்கும் பகுதிக்கு செல்கிறார்கள்.
அப்போது திடிரென ஒருவன் வந்து அம்பு எய்து ஹீரோவை கொல்ல முயற்சிக்கிறான். ஹீரோ ஒரு குகைக்குள் ஓடுகிறான் , வராதே என பலமுறை சொல்லியும் ஹீரோயின் அவன் பின்னாடியே குகைக்குள் செல்கிறாள்.
உள்ளே ஒரு பெரிய லைட் அவர்களை தன்னுள் இழுத்துக் கொள்கிறது.
ரெண்டு பேரும் மறுபடியும் கல்யாணத்து அன்னிக்கு காலைல எங்க தூங்கி எழுந்தார்களோ அங்கேயே போய்டுறாங்க.
ஹீரோயின் எந்திருச்சு எதுவும் புரியாம ஹீரோட்ட கேட்க. நான் பல நாளா இந்த டைம் லூப்ல தான் இருக்கேன். என்ன ட்ரை பண்ணாலும் மறுபடியும் இங்கயே வந்துருவோம் என்கிறான்.
ஹீரோயின் இதிலிருந்து எப்படியாவது வெளியே வரணும் என்கிறார்.
ஹீரோவுக்கு வெளியே வருவோம் என சுத்தமாக நம்பிக்கை இல்லை.
இதற்கு இடையில் இருவரும் ஒரே நாளை திரும்ப திரும்ப வாழ்ந்து பேசி புரிந்து காதலில் விழுகின்றனர்.
இந்த டைம் லூப்பில் இருந்து வெளியே வந்தார்களா ? ஹீரோவை கொல்ல வருபவன் யார் ? போன்ற கேள்விகளுக்கு கொஞ்சம் காமெடி கலந்து கலகலப்பாக பதில் சொல்கிறது படம்.
நல்ல வித்தியாசமான மற்றும் சிக்கலான கான்செப்ட்.
டைம் லூப் என்பதால் ஒரே காட்சிகள் திரும்ப திரும்ப வருவதைத் தவிர்க்க முடியாது.
எனக்கு தெரிந்து திறமையான இயக்குனர் தெளிவாக படத்தை எடுத்துள்ளார்.
ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி படத்திற்கு நன்றாகவே உதவி செய்துள்ளது.
வித்தியாசமான ரொமான்ஸ் படம் கண்டிப்பாக பாருங்கள்.
IMDb Rating 7.4
தமிழ் டப் இல்லை.
OTT ல் இருப்பது போல்
தெரியவில்லை.
DM for Telegram download link.
Director: Max Barbakow
Cast: Andy Samberg, Cristin Milioti, J.K. Simmons, Peter Gallagher, Meredith Hagner, Camila Mendes, Tyler Hoechlin, Jacqueline Obradors
Screenplay: Andy Siara
Cinematography: Quyen ‘Q’ Tran
Music: Matthew Compton
கருத்துகள்
கருத்துரையிடுக