Nobody - 2021
இந்த படத்தை பற்றி பார்க்குறதுக்கு முன்னாடி ... உங்களுக்கு ஆக்ஷன் திரில்லர் படங்கள் பிடிக்கும் என்றாலோ, John Wick series படங்கள் பிடிக்கும் என்றாலோ யோசிக்காமல் படத்தை பாருங்கள்
தரமான ஆக்ஷ்ன் என்டர்டெயின்மென்ட் கேரண்டி. 👍
ஹீரோ ஒரு குடும்பஸ்தன் . இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வம்பு தும்புக்கு போகாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் பஸ்ஸில் தனியாக வரும் பெண்ணுக்கு உதவி செய்ய போய் ரஷ்ய கும்பலுடன் பகை ஏற்படுகிறது.
ரஷ்ய கும்பல் தலைவன் இவனை கொல்ல ஆள் அனுப்புகிறான்.
ஆனால் ஹீரோ எல்லாத்தையும் பிரிச்சு மேஞ்சு விடுகிறான்.
அப்புறம் என்ன வில்லன் குரூப்பை எப்படி போட்டுத்தள்ளுகிறான் என்பது மீத படம்.
படத்துல லாஜிக், கதை எல்லாம் பார்க்க கூடாது.
20 நிமிடங்கள் மெதுவாக போகிறது படம். பஸ்ஸில் நடக்கும் சண்டையுடன் படம் வேகம் எடுக்கிறது.
அதுக்கு அப்புறம் படம் பரபரவென செம ஆக்ஷ்ன் . அதுவும் க்ளைமாக்ஸ் செம சூப்பர்.
படம் நகரும் வேகத்தில் லைட்டா ஹீரோவின் பிண்ணனி சொல்லப்படுகிறது.
ஹீரோ யாருனு பார்த்த #BreakingBad - ல வக்கீலா வருவாருல அவருதான்.
அந்த பஸ்ஸில் நடக்கும் சண்டை அருமையான fight Choreography .
வழக்கமா வர்ற ஆக்ஷன் ஹீரோக்கள் இருந்தால் கூட இவ்வளவு impact இருந்து இருக்குமா என்று தெரியவில்லை. மனுஷன் ஆக்ஷன் காட்சிகளில் கேஷுவலாக கலக்கி இருக்கிறார்.
ஹீரோவோட அப்பாவாக வருபவரும் செம கலக்கல்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
Highly Recommended ❤️❤️
IMDb 7.4
OTT ல் இருப்பது போல் தெரியவில்லை.
DM for Telegram link.
வன்முறை காட்சிகள் மற்றும் Gun Fights ரத்தம் தெறிக்கும் . ஆபாசக்காட்சிகள் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக