இது ஒரு செமயான க்ரைம் த்ரில்லர்.
இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அண்ணன் சரியான முரடன். வாழ்க்கையில் பாதி நாள் சிறைச்சாலையில் கழித்தவன்.
தம்பி பெரிய அளவில் எதிலும் சிக்காமல் இருப்பவன். சமீபத்தில் டிவோர்ஸ் ஆனவன்.
நம்ம பரம்பரை தான் ஏழை, தன் மகனாவது பணக்காரனாக இருக்க வேண்டும் என நினைக்கிறான் தம்பி.
இருந்த ஒரே குடும்ப Ranch தங்கள் தாயின் மறைவிற்குப் பின்னர் கைவிட்டு போகும் நிலை.
ஒரு வாரத்தில் கையை விட்டுப் போகும் நிலையில் அதை மீட்க அண்ணனுடன் சேர்த்து பக்காவாக ஃப்ளான் போடுகிறான் தம்பி.
ரொம்ப short 'a spoiler இல்லாமல் சொல்லணும்னா லோன் குடுத்த பேங்கல இருந்து கொள்ளை அடிச்சு அந்த கொள்ளையடிச்ச பணத்தை வைச்சு லோனை அடைக்கிறது தான்.
இந்த திட்டத்தை எப்படி செயல்படித்தினார்கள் என்பதை கூறினால் சுவாரஸ்யம் போய்விடும். அதனால் படத்தில் பாருங்கள்.
அந்த Ranch ஏன் அவ்வளவு முக்கியம் என்பது சின்ன சஸ்பென்ஸ்.
இவர்களை பிடிக்க முயற்சி பண்ணும் இரண்டு போலீஸ்காரர்கள்.
பக்காவாக ஃப்ளான் பண்ணியதால் தடயங்கள் இல்லாத நிலையில் இவர்கள் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும்.
படம் மெதுவாக சென்றாலும் சுவாரஸ்யமான திரைக்கதை
ஒரு மணி நேரம் ஸ்லோ பர்னராக போகும் படம் கடைசி 30 நிமிடங்கள் டாப் கியரில் போகிறது. ஒளிப்பதிவு செம சூப்பராக இருந்தது.
கண்டிப்பாக பாருங்கள்
குடும்பத்துடன் பார்ப்பது கஷ்டம் தான்.
IMDb - 7.6
OTT - ல் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக