இது ஒரு சீரியல் கில்லரை பற்றிய டாக்குமெண்டரி.
3 எபிசோட் , மொத்தம் 3 மணி நேரம் ஓடக்கூடியது.
இன்டெர்நெட்டில் திடீரென ஒரு வீடியோ வருகிறது. அதில் ஒருவன் இரண்டு பூனைகளை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு மூச்சு திணறச் செய்து கொல்கிறான்.
அனிமல் லவ்வர்ஸ் சோஷியல் மீடியாவில் பொங்கி எழுகின்றனர். தனியாக Facebook ல் ஒரு குரூப் ஆரம்பித்து அவன் அப்லோட் பண்ணிய வீடியோக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார்கள்.
அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
அதற்குள் அடுத்த வீடியோ வருகிறது மறுபடியும் பூனைக்குட்டிகளை வேறு விதமாக கொல்லுகிறான்.
இப்படியே போகும் போது கடைசியில் பூனையை கொன்றவன் மனிதன் ஒருவனைக் கொன்று வீடியோ அப்லோட் பண்ணுகிறான்.
அதுக்கு அப்புறம் போலீஸ் உள்ள
வருகிறது. இந்த FB group ம் கொஞ்சம் தகவல்களை தருகிறது.
எவ்வாறு இந்த கொடூர கொலைகாரனை கண்டுபிடித்தார்கள் என்பது மீத டாக்குமெண்டரி.
ரொம்பவே டிஸ்டர்பிங் டாக்குமெண்டரி தான். இதில் கடைசியாக செமயாக காண்டு ஏத்துறது கொலைகாரன் என்று சொல்லக்கூடியவனின் அம்மா. எல்லாரும் ஒரு ட்ராக்ல போனா இவ மட்டும் தனி ட்ராக்ல போறா.
டைம் கிடைத்தால் பாருங்கள்.
IMDb Rating : 8.0/ 10
Available in Netflix
Tamil dub இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக