Get Out Tamil Review இது ஒரு மர்மம் கலந்த ஹாரர் படம். ஆனால் எனக்கு என்னமோ இந்த படம் சைக்கலாஜிகல் திரில்லர் மாதிரி தான் தெரியுது. படம் ஸ்லோ பர்னர் வகை. கடைசி 30 நிமிடங்கள் படம் ஸ்பீடு எடுக்கும் . அதற்கான பில்டப் தான் அதற்கு முந்தைய பகுதி படம். அதற்காக ஃபோர் அடிக்கும் அளவுக்கு இல்லை. செமயான engaging Screenplay, வித்தியாசமான கேரக்டர்ஸ் மற்றும் ஹாரர் காட்சிகள் வைத்து நன்றாக படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். படத்தின் கதையை பார்க்கலாம். முதல் காட்சியில் ஒருத்தனை முகமூடி போட்ட ஒருத்தன் அடிச்சு டிக்கி உள்ள போட்டு கடத்திட்டு போறான். இன்னொரு பக்கம் கருப்பினத்தை சேர்ந்த ஹீரோ , வெள்ளையினத்தை சேர்ந்த ஹீரோயின். இருவரும் ஒரு வார இறுதியில் ஹீரோயினின் வீட்டுக்கு போகிறார்கள். ஹீரோவோடு ஒரே ப்ரெண்ட் போகாதடா அவனுக உன்னை செக்ஸ் அடிமை ஆக்கிறுவாங்க என்று கூறி பயமுறுத்துகிறான். ஆரம்பத்தில் நன்றாக போகும் டிரிப் நேரம் ஆக ஆக ஹீரோவுக்கு ரொம்பவே uncomfortable ஆகுது. கடைசியில் ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்பது செம ட்விஸ்ட் மற்றும் க்ளைமாக்ஸ். ஹாரர் படத்துக்கு ஏற்ற செட் அப். பக்கத்துல வீடே இல்லாத ஒரு பெரிய பங்கள
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil