முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Tomorrow War - தி டுமாரோ வார் - 2021

The Tomorrow War - தி டுமாரோ வார் - 2021 Tamil Dubbed Movie Review 

Amazon prime Video - ல் நேரடியாக வெளிவந்துள்ள படம். படம் பெயர் , கதைச் சுருக்கம் லைட்டா Edge Of Tomorrow  படத்தை ஞாபகப்படுத்துகிறது... 


Jurassic World , Guardians Of The Galaxy போன்ற படங்களில் நடித்துள்ள Chris Pratt ஹீரோவாக Dan கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Yvonne Strahovski ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் (Muri) நடித்துள்ளார். The Handmaid's Tale, Dexter போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இவர். 

படத்தின் கதையை பார்க்கலாம். 

The tomorrow war movie review in tamil, Chris Pratt, Yvonne Strahovski, Amazon original movie, Amazon Prime Video, Alien movie, time travel movie, the



2022 டிசம்பர் மாதம் படம் ஆரம்பிக்கிறது.
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற Dan தற்போது ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் . 

ஒரு நாள் திடீரென ஃபுட்பால் கிரவுண்டில் இருந்து திமு திமு என நிறைய பேர் கையில் நவீன ஆயுதங்களுடன் வருகிறார்கள். 

தாங்கள் 2050 - ம் வருடத்தில் இருந்து வருவதாக கூறுகின்றனர்
 2050 - ல் ஏலியன்கள் பூமியை ஆக்கிரமிப்பு செய்து பெரும்பாலான மனித இனத்தை அழித்து விட்டதாகவும் கூறுகின்றனர். 
மனித இனம் அழியாமல் தடுக்க வேண்டும் என்றால் 2022 - ல் இருந்து மனிதர்கள் 2050 வந்து சண்டையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எல்லா நாடுகளும் ஒத்துக்கொண்டு இராணுவத்தை அனுப்புகிறது. ஆனால் எல்லாரையும் கொன்று விடுகிறது ஏலியன்ஸ் கூட்டம். சாதாரண ஜனங்களையும் அனுப்ப ஆரம்பிக்கிறது. இதில் ஒருவராக போகிறார் Dan. 

அங்கு இளம் விஞ்ஞானி மற்றும் இராணுவ கலோனலாக வருகிறார் Muri.Muri - யார் என்பது
 ஒரு ட்விஸ்ட் ஆனால் ஈஸியாக கண்டுபிடிச்சுருலாம் 😛
அவருடன் சேர்ந்து மருந்து கண்டுபிடிக்கிறார். ஆனால் எல்லாரையும் போட்டுத்தள்ளி விடுகிறது ஏலியன்ஸ் கூட்டம். Dan மட்டும் மருந்தோடு நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறார்.  

இரண்டு உலகத்திற்கும் நடுவே போய்ட்டு போய்ட்டு வரும் டெக்னாலஜியையும் ஏலியன்ஸ் போட்டுத் தள்ள . உலகம் + மகளை (எதிர்காலத்தில்) ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார்  என்பதே படத்தில் பாருங்கள்..

படம் பல தடவை அரைச்ச ஹீரோ உலகத்தை காப்பாற்றும் கதைதான். ஆனால் எதிர்காலம், நிகழ்காலம் , அப்பா மகள் பாசம் என்று லைட்டாக செண்டிமென்ட்டையும் கலந்து விட்டுள்ளார் இயக்குனர். 

நிகழ்காலம் , எதிர்காலம் என மாறி மாறி ரொம்ப மெனக்கெடாமல் நம்மையும் குழப்பாமல் இயல்பான திரைக்கதை.

ஏலியன்ஸ் கிராஃபிக்ஸ், சண்டைக்காட்சிகள் எல்லாம் செம சூப்பர். 

ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு நல்ல டைம் பாஸ் + ஆக்ஷன் மூவி பார்க்க வேண்டும் என்பவர்கள் குடும்பத்துடன் பார்க்கலாம்.

பக்காவான Week end movie.. 

தமிழ் ஆடியோவிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.

Directed by:Chris McKay
Cast: 
Chris Pratt
Yvonne Strahovski
J. K. Simmons
Betty Gilpin
Sam Richardson
Edwin Hodge
Jasmine Mathews
Ryan Kiera Armstrong
Keith Powers



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்