Midsommer Tamil Review
இது 2019 -ல் வெளிவந்த ஒரு டைப்பான ஹாரர் படம். அது என்ன ஒரு டைப்னு கேட்காதீங்க... என்னவோ ஒரு வித்தியாசம் இருக்கிறது.
படத்தின் ஆரம்பமே ஒரு சோகமான வித்தியாசமான மியூசிக்கோடு தான்.
ஹீரோயின் தங்கச்சி தானும் இறந்து அவளின் அம்மா அப்பாவையும் கொன்று விடுகிறார்
ஹீரோயின் Dani காலேஜில் படிக்கிறாள். அவளுடைய லவ்வர் Christian அவனும் அதே காலேஜில் படிக்கிறான். பெற்றோர்கள் இறந்த சோகத்தில் இருக்கும் Dani யை கவனித்துக் கொள்கிறான். இது போக அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொள்கிறாள் Dani.
இந்த குரூப்பில் Pelle என்பவன் Sweden நாட்டைச் சேர்ந்தவன். இவன் தங்கள் ஊரில் ஒரு திருவிழா நடக்கிறது என்றும் . இந்த விழா 90 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பதாகவும் அருமையாக இருக்கும் என்கிறான் எதிர்பாராத விதமாக Dani இந்த குரூப்பில் சேர்ந்து கொள்கிறாள்.
அனைவரும் ஸ்வீடன் வந்து காட்டுக்குள் இருக்கும் அந்த கிராமத்தை அடைகிறார்கள். வரவேற்பு கவனிப்பு எல்லாம் அருமையாக உள்ளது .
முதல் நாள் திருவிழா ஆரம்பமாகிறது. எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள் அதுக்கப்பறம் ஒரு சம்பவம் நடக்கிறது. அதோடு வந்த அனைவரும் பீதி ஆகின்றனர். இங்கு இருந்து தொடங்குகிறது அந்த கிராமத்தின் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள்.
கடைசியில் போனவர்கள் திரும்ப வந்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் மெதுவாக ஆரம்பிக்கிறது, மெதுவாகவே போகிறது, மெதுவாகவே முடிவடைகிறது. உங்களுக்கு பொறுமை குறைவு என்றால் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது. கேமரா work மிகவும் அருமையாக இருக்கும் என படித்தேன் எனக்கு டெக்னிகலாக ஐடியா கிடையாது. ஆன சில காட்சிகளில் நம்மை அட சொல்ல வைக்கிறார்கள்.
குறிப்பாக கார் ரோட்டில் செல்லும் போது வளைத்து வளைத்து மேலே, கீழே , சைடு என எல்லாவற்றையும் படம் பிடித்து இருக்கிறார்கள்.
கடைசியில் ஒரு கொடூரமான க்ளைமேக்ஸ்.. கரடி ஒன்றை ஆரம்பத்தில் ஒரு கூண்டுக்குள் வைத்திருப்பார்கள். எதுக்கு என யோசித்தால்...அதை வைத்து க்ளைமாக்ஸ் காட்சியில் கொடூரம் பண்ணி வைத்து இருப்பார்கள். இப்படி எல்லாம் எப்படி தான் யோசிக்குறானுகனு தெரியவில்லை...
இந்த படத்தை பார்த்துவிட்டு நிறைய பேர் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் தவித்தார்களாம்... எனக்கு அந்த அளவு தாக்கம் தெரியவில்லை.
ஆனாலும் கடைசியில் ஹீரோயின் குரூரமாக ஒரு சிரிப்பு சிரிப்பார்... அதுவே போதும் இது எந்த மாதிரியான படம் என்பதற்கு...
இது கண்டிப்பாக 18+ and not for weak hearted . நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் இந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று.
IMDb Rating : 7.1/ 10
My Rating: 3/5
Not available in OTT.
Director: Ari Aster
Cast: Florence Pugh, Jack Reynor, William Jackson Harper, Wilhelm Blomgren, Will Poulter, Ellora Torchia, Archie Madekwe
Screenplay: Ari Aster
Cinematography: Pawel Pogorzelski
Music: The Haxan Cloak
Climx mattum enaku puriyavillai. Avarkadan vantha anaivarum ethanal ore roomukul adaithu vaithirukirarkal ? Ean ellarum orey mathiri thee ittu kolla padukirarkal ? Heroin ean oru mathiri smile pannanum?
பதிலளிநீக்குAnaivarayum Pali kodukka plan panni kuutitu vandurukkanga..
நீக்குRoom'la pottu erikkiradu avanga sampirathayam
Vera oru ponnoda irukkurada heroine paathala... Adan hero sethathukku apuram apdi oru sirippu