முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Invisible City - Season 1 - இன்விஷிபில் சிட்டி - 2021

இது Brazil நாட்டில் இருந்து வெளிவந்த தொடர்.  1 Season அதில் 7 Episode-கள் உள்ளது. எல்லா Episode களுமே கிரிஸ்ப்பாக 30 நிமிடங்கள் ஓடுகிறது. 

படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். Eric - போலீஸ் துறையில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரி. இவனுடைய மனைவி காட்டில் ஏற்படும் தீயில் சிக்கி சிறு வயது மகள் கண்முன்னே இறந்து விடுகிறாள். போலீஸ் துறை இது விபத்து என கூறுகிறது ஆனால் Eric கண்டிப்பாக இது சதி வேலை என்கிறான். இதனை விடாமல் தோண்ட ஆரம்பிக்கிறான். 

மறுநாள் கடற்கரையில் ஒரு பிங்க் நிற டால்பின் இறந்து கிடக்கிறது. அதை தூக்கி டிக்கியில் போட்டு விட்டு நைட் ஓபன் பண்ணி பார்த்தால் அது இறந்து போன மனிதனாக மாறியுள்ளது.  அதிர்ச்சியடைந்த ஹீரோ சத்தமில்லாமல் அந்த டெட் பாடியை காட்டில் போட்டு விட்டு தானே விசாரணையில் இறங்குகிறான். 
இன்னொரு பக்கம் பார் நடத்துகிறார் Ines எனும் பெண். இவர் சாதாரண பெண் கிடையாது இவள் Cuca எனப்படும் அந்த நாட்டு நாட்டுப்புற பாடல்களில் வரும் சூனியக்காரி. இவருடன் Camilia எனும் பெண்ணும் , Tutu எனும் ஒரு வளர்ந்த மனிதனும் உள்ளனர்.  

இன்னொரு புறம் ஒரு கார்ப்பரேட் காட்டில் வாழும் மக்களை காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகிறது. தான் மனைவி இறந்த தீ விபத்து கூட இந்த கம்பெனியால் உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்.
 
ஊரின் இன்னொரு பக்கம் உள்ள சேரியில் ஒருத்தர் சக்கர நாற்காலியில் வசிக்கிறார், இன்னொருவன் கால் ஊனமான நிலையில் அவருடன் இருக்கிறான். அவன் சின்ன சின்ன மேஜிக்குகள் செய்கிறான். 

Ines மற்றும் அவளது குரூப்பிற்கும் போலீஸ் அதிகாரியான Eric ற்கும் உரசல் ஏற்படுகிறது. இவர்களின் எச்சரிக்கையையும் மீறி மனைவி மற்றும் பிங்க் டால்பின் மனிதனை பற்றி விசாரிக்கிறான். 

கடைசியில் இறந்த டால்பின் , Ines மற்றும் அவரது குரூப் அனைவரும் மனித இனம் கிடையாது என்றும் நாட்டுப்புற கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் என்றும் தெரியவருகிறது. இந்த நாட்டுப்புற கதாபாத்திரங்கள் அனைவரும் ஊருக்குள் வந்து மனிதர்களுடன் கலந்து வாழ்கின்றனர். 

ஆனால் சமீபகாலமாக இந்த நாட்டுப்புற கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர். 

இவர்களை கொல்வது யார்? Eric மனைவி இறந்ததுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? சேரியில் வசிக்கும் அந்த இருவர் யார் என்பது போன்ற பல முடிச்சுகளை அவிழ்க்கிறது இந்த தொடர். 

முதலில் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான ஒரு தொடரை கொடுத்ததற்கு Netflix மற்றும் இத்தொடர் இயக்குனருக்கு பாராட்டுக்கள். இது கண்டிப்பாக ஒரு தனித்துவமான தொடர். 

நடித்த நடிகர்கள் மற்றும் படம் பிடித்த லொக்கேஷன்கள், கிராஃபிக்ஸ் என அனைத்தும் அருமை. குறிப்பாக அந்த Ines கேரக்டரில் நடித்த பெண் நல்ல நடிப்பு. Eric குழந்தையாக வரும் Luna கதாபாத்திரம் செம் க்யூட் மற்றும் கடைசி கட்ட எபிசோட்களில் நன்றாக நடித்துள்ளார்.

போலீஸ் விசாரணை, நாட்டுப்புற கடவுள்கள், கார்ப்பரேட் சதி, கிராம் மக்கள் , சூனியக்காரி என அனைத்தையும் பக்காவாக இணைத்து அருமையான தொடரை கொடுத்து உள்ளார் இயக்குனர். 

நம்ம ஊரில் இது மாதிரி பல வருடங்களுக்கு முன்பு விடாது கருப்பு சீரியல் வந்தது. விடாது கருப்பு தொடர் அளவுக்கு இல்லை என்றாலும் அருமையான தொடர். 

Waiting for Season 2. 

கண்டிப்பாக பாருங்கள்.. 

IMDb Rating: 7.4/ 10
My Rating: 4/5

Available In Netflix India .

Watch Trailer:

 

Created by:
Carlos Saldanha

Based on  an original idea by: 
Raphael Draccon
Carolina Munhóz

Written by: 
Mirna Nogueira
Directed by
Luis Carone
Júlia Pacheco Jordão

Starring: 
Marco Pigossi
Alessandra Negrini
Fábio Lago
Jessica Córes
Jimmy London
Wesley Guimarães
Áurea Maranhão
Julia Konrad
Thaia Perez
Manu Dieguez
José Dumont
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்