Fear Street Part Three - 1666 -2021
முதல் பாகம் முழுவதும் கொலை , குத்து , வெட்டு என முடிந்தது. இரண்டாவது பாகம் சூனியக்காரியின் சாபம் மற்றும் அவள் வாழ்ந்த இடம் மற்றும் எப்படி சாபத்தில் இருந்து விடுபடுவது என்பதை பற்றிய ஆராய்ச்சியுடன் ரத்தக்களரி கலந்து கொடுத்து இருந்தனர்.
மூன்றாவது பாகத்தில் சூனியக்காரியின் கதை சொல்லப்படுகிறது. யார் இந்த சூனியக்காரி Sarah Fier , அவள் எதற்காக தூக்கிலிடப்பட்டார். எதனால் அவள் சாபம் கொடுத்தாள் மற்றும் ஏன் Shady Side ஊரில் உள்ள மக்கள் மட்டும் இந்த சாபத்தால் காலம் காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை சொல்கிறது படம்.
படம் இரண்டு டைம் லைனில் பயணிக்கிறது. 1994 - ல் ஆரம்பிக்கும் படம் அப்படியே ஒரு ஜம்ப் அடித்து 1666 -க்கு போகிறது.
1666 ல் Sarah Fier கதை முடிந்த பிறகு மீண்டும் 1994 -ல் அந்த சாபத்தை எவ்வாறு சரி செய்கிறார்கள் என்று முடிகிறது.
1666 வருட செட்டிங்குகள், காஸ்ட்யூம்ஸ் மற்றும் இசை அருமை.
இரண்டு பாகங்களிலும் நடத்த நடிகர் , நடிகைகளை 1666 வருட கதையில் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.
ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்து உள்ளனர் இந்த பாகத்தில் அதை சொன்னால் படம் பார்க்கும் ஆர்வம் போய்விடும்.
ஆக மொத்தத்தில் ஒரு நல்ல horror triology -க்கு நல்ல closure கொடுத்து இருக்கிறார்கள் படக்குழுவினர்.
நல்ல ஹாரர் Triology கொடுத்த பெண் இயக்குனரான Leigh Janiak - க்கு பாராட்டுக்கள்.
IMDb Rating : 6.8/10
My Rating :4/5
Available in Netflix
Directed:
Leigh Janiak
Screenplay:
Phil Graziadei
Leigh Janiak
Kate Trefry
Based on:
Fear Street
by R. L. Stine
Starring:
Kiana Madeira
Ashley Zukerman
Gillian Jacobs
Olivia Scott Welch
Benjamin Flores Jr.
Darrell Britt-Gibson
கருத்துகள்
கருத்துரையிடுக