Black Sea - ப்ளாக் ஸீ - 2014 Movie Review In Tamil
முன்னாள் நீர்மூழ்கிக் கப்பல் கேப்டனான படத்தின் ஹீரோ Robinson ( Jude Law) ஒரு தனியார் கம்பெனியில் நீர்மூழ்கிக் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் விவாகரத்து ஆகி மகனும் அவருடன் இல்லாததால் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கம்பெனி இவரை வேலையில் இருந்து தூக்கி விடுகிறது.
ஏற்கெனவே பணக்கஷ்டத்தில் இருப்பதால் செம கடுப்பில் இருக்கிறார். கருங்கடலில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன நீர்மூழ்கிக் கப்பல் கிடக்கிறது எனவும் அதில் டன் கணக்கில் தங்கம் உள்ளது என்கிறார் அவர் நண்பர்.
பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் ஒரு பணக்காரர் இந்த மிஷனுக்கு பொருளுதவி செய்கிறேன் என்கிறார்.
ஹூரோ நீர்மூழ்கிக் கப்பல்களில் வேலை செய்தவர்களை வைத்து ஒரு குழுவை ரெடி பண்ணுகிறார். ஒரு பழைய நீர்மூழ்கிக் கப்பலை ரிப்பேர் செய்து கிளம்புகிறார்கள்.
இவர்கள் ரஷ்யா நாட்டு கடற்படையின் கண்களில் மண்ணைத் தூவி அந்த தங்க புதையலை அடைந்தார்களா என்பது மீதிக்கதை.
இந்த படத்தை சைக்காலஜிகல் திரில்லரிலும் சேர்க்கலாம். பெரும்பாலும் அந்த கப்பலில் உள்ளவர்களின் மனநிலை மற்றும் அதனால் அவர்கள் செய்யும் செயல்களே படத்தை நகர்த்துகிறது.
நிறைய எதிர்பாராத சின்ன சின்ன திருப்பங்கள் உள்ளது. கடைசி வரை தங்கம் கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற ஒரு பரபரப்புடன் படம் நகர்கிறது.
அருமையான கிளைமேக்ஸ்.. அதுவும் கடைசியாக அந்த உயிர்காக்கும் கவச உடை தண்ணீரில் இருந்து வரும் காட்சி அருமை.
ஹீரோ நன்றாகவே நடித்திருக்கிறார்.. மற்றவர்களுக்கு நடிக்கும் அளவிற்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. ஒளிப்பதிவு நன்றாக உள்ளது..
கண்டிப்பாக பார்க்கலாம்..
IMDb Rating: 6.4/ 10
My Rating : 3.5/ 5
Available in Amazon Prime Video
Director: Kevin Macdonald
Cast: Jude Law, Ben Mendelshohn, Tobias Menzies, Bobby Schofield, Scoot McNairy, Grigoriy Dobrygin, Jodie Whittaker
Screenplay: Dennis Kelly
Cinematography: Christopher Ross
Music: Ilan Eshkeri
கருத்துகள்
கருத்துரையிடுக