இந்த படம் Prime Video recommendation section -ல் வந்தது அதுவும் தமிழ் ஆடியோவோட இருந்தது. ஹாரர், படம் summary+போஸ்டர்ஸ் பார்த்தா ஏலியன் படம் மாதிரி இருந்தது... ஹீரோ வேற Nicholas Cage .இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த படத்தை பார்க்க. படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். Nathan(Nicholas Cage) தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தனது இறந்து போன தந்தையின் பண்ணை வீட்டில் நிரந்தரமாக தங்கலாம் என வருகிறார். பண்ணை வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆள் அரவமே இல்லாத பகுதியில் உள்ளது. இவரே காய்கறிகள் வளர்க்கிறார் , ஒரு வித்தியாசமான மிருகமான Alpacas என்ற மிருகத்தையும் பண்ணையில் வளர்க்கிறார். இந்நிலையில் ஒரு நாள் இடி மற்றும் கலரான மின்னலுடன் ஏதோ ஒன்று வானத்தில் இருந்து பெருத்த சத்தத்துடன் அவர்கள் வீட்டின் முன் விழுகிறது. காலையில் போலீஸ் நியூஸ் சேனல் என எல்லாரும் வந்து பார்க்கிறார்கள். அது ஏதோ செத்த மிருகம் மாதிரி பயங்கர நாத்தம் நிறைந்த புகையுடன் இருக்கிறது. எல்லாரும் அது வானத்தில் இருந்து விழுந்த விண்கல் என முடிவுக்கு வருகின்றனர். ஆனால் அடுத்த நாளில் இருந்து வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கே தெரி
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil