முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Widows - விடோஸ் - 2018

இந்த படத்தை பார்க்க முக்கிய காரணம் இயக்குனர் மற்றும் நடித்த நடிகைகள். 

12 Years a slave என்ற அகாடமி அவார்டு வாங்கிய திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் Steve McQueen -ன் படைப்பு தான் இந்த படம். 

இயக்குநருக்கு அடுத்தபடியாக நடிகைகள் .... 

முதலில் Viola Davis (How to get away with murder, Prisoners) . இவர் சில வருடங்களுக்கு முன்பு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஆவார். 

Michelle Rodriguez - இவர் பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் (Avatar, Fast and Furious)  கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் . 

Elizabeth Debicki - இவர் Tenet , Night Manger போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

இது Heist பற்றிய ஒரு திரைப்படம் தான். 

படத்தின் ஆரம்பத்தில் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் இதற்கு லீடராக இருப்பவர் Harry (Liam Neeson) . கொள்ளையில் ஏற்படும் குழப்பத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். 

இறந்தவர்கள் அனைவரும் எக்கச்சக்க கடன்களை விட்டுட்டு செல்கின்றனர். கடன் கொடுத்தவர்கள் எல்லாரும் வந்து விதவைகளின் சொத்துக்களை பிடிங்கி விடுகின்றனர் அது மட்டும் அல்லாமல் மிரட்டல்கள் விடுகின்றனர். 


இதனால் கடுப்பான Harry - ன் மனைவி Veronica செய்வது அறியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் கணவன் அடுத்த கொள்ளை மற்றும் அதை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய விபரங்களை எழுதி வைத்த டைரி கிடைக்கிறது. 


ஆனால் இதை செய்ய குறைந்து 4 பேர் வேண்டும் என்பதால் தனது கணவருடன் இறந்த மூன்று பேர்களின் மனைவிகளின் உதவியை நாடுகிறார். ஒருவர் இதில் ஆர்வம் இல்லை என விலகி விட இவர்கள் நால்வரும் இணைந்து கொள்ளை அடித்து கடனை அடைத்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை. 


படம் மெதுவாக தான் செல்கின்றது. பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை.  வீட்டில் நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்த பெண்கள் திடீரென பொங்கி எழுந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்பது கொஞ்சம் நம்ப முடியாத வகையில் உள்ளது. அதையும் ஈடுகட்ட இயக்குனர் சில காட்சிகள் வைத்து இருந்தாலும் கொஞ்சம் இடிக்கிறது. 



மற்றபடி படம்  மெதுவாக தான் செல்கிறது ஆனால் போரடிக்காமல் செல்கிறது. ஒரு சின்ன திருப்பம் உள்ளது அதையும் சொல்லிவிட்டால் படம் ரொம்பவே ஃபோர் அடித்து விடும். 


கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 


 

IMDb Rating : 6.9/ 10

Available in Amazon Prime Video



Director: Steve McQueen

Cast: Viola Davis, Daniel Kaluuya, Brian Tyree Henry, Robert Duvall, Colin Farrell, Cynthia Erivo, Carrie Coon, Elizabeth Debicki, Michelle Rodriguez, Liam Neeson

Screenplay: Gillian Flynn & Steve McQueen, based on the novel by Lynda La Plante

Cinematography: Sean Bobbitt

Music: Hans Zimmer

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்