முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Peanut Butter Falcon - தி பினட் பட்டர் ஃபால்கன் -2019

The Peanut Butter Falcon - தி பினட் பட்டர் ஃபால்கன் -2019 Movie Review In Tamil 


இந்த படம் Down Syndrome - நோயினால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞன் செய்யும்  அட்வென்ட்சர் பற்றியது. இது ஒரு நல்ல Feel Good திரைப்படம்.

டவுன் சிண்ட்ரோம்:

டவுண் சிண்ட்ரோம், குழந்தைக்குத் தாயின் கருவிலேயே ஏற்படும் குறைபாடு. மனிதனுக்கு இயற்கையாக மொத்தம் 23 இணை குரோமோசோம்கள் (46) இருக்கும். இந்த குரோமோசோம்களில் 21-வது இணையில் மூன்று குரோமோசோம்கள் இருந்தால், டவுண் சிண்ட்ரோம் ஏற்படும் (21 ட்ரைசோமி - Trisomy 21). அதிகமாக உள்ள ஒரு குரோமோசோம் அம்மாவிடமிருந்தோ அப்பாவிடமிருந்தோ வந்திருக்கலாம். 

டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலின் அமைப்புகளைப் பாதிக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படலாம். கண்களில் புரை, கேட்டல் திறன் குறைபாடு, முக அமைப்பில் மாற்றம், இதய நோய்கள், குடலில் குறைபாடு, தைராய்டு குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு... இவையெல்லாம் ஏற்படலாம்.

Source: https://www.vikatan.com/health/healthy/119750-what-is-down-syndrome-facts-causes

Zak (Zack Gottsagen) - ஒரு முதியவர் காப்பகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு Wrestling கற்றுக் கொண்டு பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசை. ஆனால் இவருடைய குடும்பம் இவருடைய குறைபாடுகளை காரணமாக காட்டி வீட்டில் சேர்க்க மறுத்ததால் அரசாங்க காப்பகத்தில் வாழ்கிறார்.  இவர் WWF ஸ்டாரான Salt Water Redneck (Thomas Haden Church) போல வரவேண்டும் மற்றும் அவர் நடத்தும் பயிற்சி பள்ளியில் சேர வேண்டும் என்பது அவரின் குறிக்கோள்.  இந்த காப்பகத்தில் இவரது பராமரிப்பாளராக இருக்கும் பெண்  Eleanor ( Dakota Johnson - Fifty Shades Of Grey) .

அந்த ஊரில் இன்னோரு புறம் மற்றவர்களின் நண்டு வலைகளில் சிக்கியுள்ள நண்டுகளை திருடுகிறார் Tyler ( Shia LaBeouf - Fury, Transformers)

Zak ஒருநாள் காப்பகத்தில் இருந்து தப்பி ஒரு மீன்பிடி படகில் பதுங்குகிறார். அன்று Tyler எதிரிகளிடம் இருந்து தப்பிக்க Zak ஒளிந்து இருக்கும் படகை எடுத்துக் கொண்டு போகிறார்.

இருவரும் சந்தித்து நண்பர்கள் ஆகின்றனர். Tyler - உதவியுடன் Wrestling School - ல் Zak சேர்ந்தானா அல்லது அவனை தேடிப்பிடித்து திரும்ப காப்பகத்திற்கு கூட்டிச்செல்ல முயற்சி செய்யும் Eleanor - இடம் மாட்டினான என்பதை கொஞ்சம் கல கலப்புடன் பாஸிட்டிவ்வாக சொல்லி இருக்கின்றனர் இயக்குனர்கள் Tyler Nilson மற்றும் Michael Schwartz.

என்ன ஒரு அருமையான திரைப்படம். இரண்டு நண்பர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி அருமை ..  இருவரும் கலக்கி இருக்கிறார்கள்.

கண் தெரியாமல் வருபவர், Wrestler ஆக வருபவர் என அனைவரும் நிறையான நடிப்பு.

Eleanor கதாபாத்திரத்தில் அழகு பதுமையாக வருகிறார் Dakota Johnson .

மொத்தத்தில் அருமையான feel good திரைப்படம்.

கண்டிப்பாக பாருங்கள்.

IMDb Rating : 7.6/ 10
Available in Amazon Prime Video

Directed by: Tyler Nilson, Mike Schwartz
Written by: Tyler Nilson, Mike Schwartz
Starring: Shia LaBeouf, Zack Gottsagen, Dakota Johnson, Thomas Haden Church, and Bruce Dern


Watch Trailer: 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்