Signal - Sigeuneol- சிக்னல் - 2016 - Korean Mini Series Review In Tamil
1 சீசன் அதில் 16 எபிசோட்களை கொண்ட கொரியன் தொடர்.
தொடரின் கதைக் கரு ரொம்பவே ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன்.
முதல் எபிசோட் பார்த்த உடன் இதை முழுவதும் பார்த்து முடிப்பது என முடிவு செய்து விட்டேன். முதல் எபிசோடிலேயே எவ்வளவு பரபரப்பு மற்றும் எத்தனை திருப்பங்கள்...
தொடரின் கதைச் சுருக்கத்தை பார்க்கலாம்.
நிகழ்காலத்தில் உள்ள ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி , கடந்த காலத்தில் வாழும் துப்பறியும் போலீஸ் அதிகாரியுடன் ஒரு வித சிறப்பு வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகின்றனர்.
நிகழ்காலத்தில் போலீஸ் அதிகாரியாக Park மற்றும் அவரது பெண் மேலதிகாரியாக Cha மற்றும் கடந்த காலத்தில் வரும் நேர்மையான போலீசாக Lee. இவர்கள் மூவரையும் தான் சுற்றி வருகிறது கதை.
கதை நடக்கும் காலகடட்டம் 1980 களில் தொடங்கி 2015 வரை நீள்கிறது. படு சிக்கலான கதைக்களம் கடந்த காலம் , நிகழ்காலம் என மாறி மாறி பயணிக்கிறது. ஆனால் இயக்குனர் திறம்பட கையாண்டு இருக்கிறார்.
இவ்வளவு சீரியசான தொடரில் காதல் , எமோஷன், குடும்பம் , அண்ணன் தம்பி பாசம் என கலந்து கட்டி ஆர்வம் குறையாமல் தொடரை பார்க்க வைக்கிறார் இயக்குனர்.
நடிப்பை பொறுத்தவரை கடந்த காலத்தில் வரும் போலீஸ் அதிகாரி என்ன ஒரு நடிப்பு. ஆரம்பத்தில் காமெடியன் போல இருந்தாலும் போக போக மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
கடந்த காலத்தில் Lee ஐ காதலிப்பவராகவும் நிகழ்காலத்தில் இன்னொரு ஹீரோ Park-க்கு மேலதிகாரியாக வரும் நாயகி அருமையாக நடித்துள்ளார்.
Park கதாபாத்திரத்தில் வரும் இன்னோரு ஹீரோ மற்ற இருவரின் நடிப்பையும் கம்பேர் பண்ணும் போது ஓகே ரகம் தான்.
சிக்கலான கதைக்களம், சிக்கலான வழக்குகள் , அதில் முக்கிய கதாபாத்திரங்களையும் புகுத்தி அருமையான தொடரை கொடுத்து உள்ளார் இயக்குனர்.
ஒவ்வொரு வழக்கிலும் வரும் திருப்பங்கள் எதையும் நம்மால் யூகிக்க முடியாது. என்ன ஒரு புத்திசாலித்தனமான இயக்குனர்....சான்ஸ்சே இல்லை...
கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.
Don't miss it.
IMDb Rating : 8.6/ 10
Available in Netflix
Director: Won Suk Kim
Cast : Lee Jehoon, Hye-su Kim, Jin-woong Cho
Also Known As: Sigeuneol
Screenwriter: Kim Eun Hee
கருத்துகள்
கருத்துரையிடுக