முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Edge Of Darkness - எட்ஜ் ஆஃப் டார்க்னெஸ் -2010

பிரபல ஹீரோவான Mel Gibson (Brave heart) நடிப்பில் வெளியான கொஞ்சம் மர்மம் கலந்த ஆக்ஷன் திரைப்படம். 

போலீஸ் அதிகாரி Craven (Mel Gibson) அவரது மகள் Emma ( Bojana Novakovic)வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். 

மகள் ஒரு நாள் திடீரென அப்பாவை பார்க்க வருகிறார். ஆரம்பத்தில் நன்றாக இருக்கும் Emma , சிறிது நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுக்கிறார்.  ஆஸ்பத்திரிக்கு கிளம்பி வெளியே வரும் இருவரில் மகளை கொடுரமாக சுட்டுக் கொல்கின்றனர் ஒரு கும்பல். 

முதலில் Craven - க்கு வைக்கப்பட குறி தவறி அவரது மகள் கொல்லப்பட்டதாக காவல்துறை விசாரணையை துவக்குகிறது. ஆனால் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கும் Craven தனிப்பட்ட முறையில் விசாரணையில் இறங்குகிறார். 

இந்த விசாரணையில் தன் மகள் வேலை பார்க்கும் நிறுவனம் சட்டவிரோதமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார். 

ஆனால் அந்த நிறுவனம் மிகுந்த அதிகாரம் மிகந்ததாகவும் அரசு அதிகாரிகள் மற்றும் பல அரசு துறைகளை சேர்ந்தவர்களை தன் கைக்குள் வந்திருப்பது தெரிய வருகிறது. 

மகளுக்கும் அந்த நிறுவனத்திற்கும் ஏதோ பிரச்சினை அதன் காரணமாகவே மகள் கொல்லப்பட்டதையும் கண்டுபிடிக்கிறார். 

சட்டப்படி எதுவும் செய்ய இயலாமல் தனி ஆளாக பழிவாங்கும் படலத்தில் இறங்குகிறார் Craven . 

அதிகாரம் மற்றும் பணபலம் நிறைந்த கம்பெனியை எதிர்த்து வெற்றி பெற்றாரா என்பதை படத்தில் பாருங்கள். 

Mel Gibson - தனி ஆளாக படத்தை நகர்த்துகிறார். நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றனர் காணமல் போகின்றனர். 

இது பரபரவென செல்லும் அதிரடி ஆக்ஷன் படம் கிடையாது. கொஞ்சம் மெதுவாக செல்லும் ஸ்லோ பர்னர் வகையான படம்.

Mel Gibson - ,க்காக ஒரு முறை பார்க்கலாம். 


IMDb Rating : 6.8/10 
Available in Amazon Prime video

Director: Martin Campbell
Cast: Mel Gibson, Ray Winstone, Danny Huston, Bojana Novakovic, Shawn Roberts, David Aaron Baker, Jay O. Sanders
Screenplay: William Monahan and Andrew Bovell, based on the television series by Troy Kennedy Martin
Cinematography: Phil Meheux
Music: Howard Shore

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்